- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஜபம் & தியானம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]

நமது உடலில் உள்ள அழுக்கு/கறையை நீக்குவதற்கு நாம் சோப்பு மற்றும் நீரை பயன்படுத்துகிறோம். அதைப் போன்று நமது மனதில் உள்ள ‘தேவையற்ற ஆசைகள்’ என்னும் அழுக்கை நீக்கி தூய்மை படுத்துவதற்கு ஜபம் என்பதை சோப்பாகவும் தியானம் என்பதை நீராகவும் கிடைக்கப் பெற்றுள்ளோம்.

மதிநுட்ப மற்ற ‘ஈ’யை  போன்று எல்லா திசைகளிலும் மனது அலைந்து திரிதல் கூடாது. ஒரு ‘ஈ’ ஆனது இனிப்பு மிட்டாய் கடையிலும் அலைந்து திரியும்; குப்பை வண்டியின் பின்னும் ஓடும். அப்படிப்பட்ட ‘ஈ’க்கு முதல் இடத்தின் இனிமையை அறிந்துகொண்டு, இரண்டாம் இடத்தின் அசுத்தத்தை புரிந்து கொள்ளும் பக்குவத்தை கற்றுவித்தால் மிட்டாய் கடையைப் புறக்கணித்து,குப்பை வண்டியின் பின் ஓடுவதை தவிர்க்கும்.  இதைப் போன்று நம் மனதிற்கு கற்றுவித்தலே தியானமாகும். நாம் மேற்கொள்ளும் தியானம் மனதை ஒருமுகப் படுத்துவதன் மூலம் அனைத்துப் பணிகளிலும் வெற்றியை பெற்றுத் தருகிறது.

பாலவிகாஸ் முதல் பிரிவு சிறார்களுக்கு அறிவுறுத்தப்படும் ஜபம் மற்றும் தியானத்தின் செயல்முறைகள் பின்வருவன.

  1. இறைவனின் நாமத்தை உரக்கக் கூறுதல்
  2. ஜெபமாலை உடன் கூடிய ஜபம்
  3. லிகித ஜபம்

இந்தப் பகுதியில் ஜபம் மற்றும் தியானம் பற்றிய பொதுவான கண்ணோட்டத்துடன், மூன்றாவது செயல் முறை ஆகிய லிகித ஜபம் பற்றிய விளக்கம் விரிவாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

[/vc_column_text][/vc_column][/vc_row]