- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

பொருத்திக் காட்டு!

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column][vc_column_text]
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]

பொருத்திக்காட்டும் விளையாட்டுகளில் குழந்தைகள், ஒன்று போலவேயுள்ள வார்த்தைகள், படங்கள் அல்லது பொருட்களைப் பொருத்தவேண்டும். ஒரு விஷயத்திற்கு சம்பந்தப்பட்ட இரண்டு பொருட்களை ஒன்று படுத்த வேண்டும்.

பொருத்தும் விளையாட்டுகள், குழந்தையின் ஐந்து வித, உடல் இயக்கத் திறனை மேம்படுத்தவும்,சுதந்திரமாகவும் தன்னிச்சையாகவும் கற்பதை ஊக்குவிக்கிறது. அது, அவர்கள், ஒன்று போலவும், வித்தியாசமாகவும் இருப்பவற்றைப் புரிந்துக்கொள்ளவும், சீரிய எண்ணங்களையும் இளம் வயதிலேயே வளர்க்கிறது. இந்த விளையாட்டுக்கள், குழந்தைகளின் தீர்ப்பிடும் திறன் மற்றும் பகுத்தறியும் திறன், இவற்றை முழுமையாக உபயோகிக்க வைக்கிறது.. ஏன் இவற்றை ஒன்றிணைக்க வேண்டும் என்று தீர்மானிக்க இயலும் திறனானது, அறிவாற்றலுக்கும் திறமைக்கும் மிக முக்கியமானது.

பொருட்களைப் பொருத்தும் போது, குழந்தைகள், கண்ணோட்டத்தினால் பகுத்தாராய்தலைப் பயில்கிறார்கள். அதன் மூலம், உண்மையான பொருட்களை இணைப்பதிலும் நிபுணத்துவம் பெறுகிறார்கள். பொருத்துக விளையாட்டின்போது, குழந்தைகள் நுணுக்கமான விஷயங்களையும் கவனித்தல் ஒருமித்த கவனம் ஆகியவைத் தேவைப்படுகிறது, அது குழந்தைகளின் சுய மரியாதை, சுய நம்பிக்கை இவற்றை வளர்க்கிறது.

பாலவிகாஸ் குருமார்கள், நிறைய செயல்பாடுகளை ஏற்படுத்தித் தரலாம். பொருட்களை இணைத்தல் படங்களை சேர்த்தல்,வார்த்தைகள், வண்ணங்கள், ஒலி, நிழல், வடிவமைப்பு (பேட்டர்ன்) வடிவங்கள், எண்கள் முதலியன. இந்த வேடிக்கை நிறைந்த அணுகுமுறை, கற்றலை மேலும் சுவாரசியமாக்கும்.

[/vc_column_text][/vc_column][/vc_row]