- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

அமைதி நேரம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2 “][vc_column_text el_class=”ta-baloo-thambi2”]

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா, “மௌனத்தின் ஆழத்தில்தான் இறைவனின் குரல் கேட்கும்” என்று கூறியுள்ளார்.

மௌனத்தில் அமர்தல் என்பது, ஒருவன் தன்னை அறிவதற்கான ஒரு செயல்முறை ஆகும். இது நம் மனசாட்சியை முன் நிறுத்துகிறது. நம் புத்தியின் வாயிலாக அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தி, கண்காணிப்பதற்கு ஏதுவாக, வாழ்க்கையின் வழி காட்டும் சக்தியாக தெய்வீகத்தை நம்முள் நிலைநிறுத்த வேண்டும். எண்ணங்களின் தரம் நன்றாக இருந்தால் மனதின் தரமும் நன்றாக இருக்கும்.

இந்த செயற்பாட்டை சிறு குழந்தைகளுக்கு செய்யும்பொழுது, ஆரம்பத்தில் ஓரிரு நிமிடங்களுக்கு மௌனமாக அமரச் செய்யுங்கள். பின்பு படிப்படியாக நேரத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள். இதன் ஒரு சிறப்பு என்னவென்றால், இது வீட்டிலேயே கூட வழக்கமாகப் பயிற்சி செய்யப்படுகிறது. ‘மௌனமாய் அமர்தல்’ என்பதை‌ உண்மையாகக் கடைப்பிடிப்பவர்களிடம், அமைதியின்மை குறைந்து, ஒரு அமைதி காணப்படுவதை நாம் கவனிக்கலாம். படிப்படியாக, அவர்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து, தங்கள் வேலையிலும் அதிக கவனம் செலுத்த முடிகிறது.

குழந்தைகளின் வயது மற்றும் திறனுக்கு ஏற்ப, வகுப்பின் தொடக்கத்திலும், முடிவிலும் மௌனப் பயிற்சியை மேற்கொள்ளலாம். குழந்தைகள் அசையாமல் இருக்கப் பழகுவதற்கும், உள்ளுணர்வு மற்றும் ஒலி, முக்கியமாக உள்ளே உணரப்படும் ஒலியைக் கூர்ந்து கவனிப்பதற்கும் உரிய ஒரு செயற்பாடு. உதாரணத்திற்கு, நற் குணங்களை அடிப்படையாகக் கொண்ட சில மௌனப் பயிற்சிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

[/vc_column_text][/vc_column][/vc_row]