- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஸுப்ரபாதம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647957936785{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”video-sty”][/vc_column_text][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647957955775{margin-top: 15px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/04/Suprabhatam.mp3 [2] [/vc_column_text][vc_custom_heading text=”ஸுப்ரபாதம் வரிகள்” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”ta-baloo-thambi2″ css=”.vc_custom_1647957962535{margin-top: 15px !important;}”][vc_column_text el_class=” content-box ta-baloo-thambi2″]
  1. ஈஶ்வராம்பா ஸுத ஸ்ரீமன்

    பூர்வாஸந்த்யா ப்ரவர்த்ததே

    உத்திஷ்ட ஸத்ய ஸாயீஶ

    கர்த்தவ்யம் தைவம் ஆஹ்னிகம்

    ஈஶ்வராம்பாவின் திருப்புதல்வரே! ஸ்ரீமானே! ஸத்ய ஸாயிநாதனே! கிழக்குத் திசையில் வைகறைப் பொழுது ஆரம்பமாகிறது. ஸகல ஐஶ்வர்யங்களுக்கும் தலைவனே! பகற்பொழுதில் செய்யவேண்டிய தெய்வீகமான நித்ய கடமைகளை ஆற்றுவதற்குப் பள்ளி எழுந்தருளாய்.

  2. உத்திஷ்டோத்திஷ்ட பர்த்தீஶ

    உத்திஷ்ட ஜகதீபதே

    உத்திஷ்ட கருணா பூர்ண

    லோக மங்கள ஸித்தயே

    புட்டபர்த்திநாதனே! உலகநாயகனே! கருணை நிறைந்தவரே! உலக மங்களத்தை உண்டாக்குவதன் பொருட்டு பள்ளி எழுந்தருள்வீராக

  3. சித்ராவதீ தட விஶால ஸுஶாந்த ஸௌதே

    திஷ்டந்தி ஸேவக ஜனாஸ்தவ தர்ஶனார்த்தம்

    ஆதித்ய காந்திரனுபாதி ஸமஸ்த லோகான்

    ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.

    சித்ராவதி நதிக்கரையில் அமைந்த, அகன்ற, அமைதியான மாளிகையில் உன்னுடைய தரிசனத்திற்காக ஸேவக ஜனங்கள் நிற்கிறார்கள். சூரிய ஒளி, அனைத்து உலகங்களையும் ஒளிரச் செய்கிறது. ஸ்ரீ ஸத்யஸாயி பகவானே! உங்களுக்குக் காலை மங்களகரமானதாக இருக்கட்டும்.

  4. த்வன்னாம கீர்த்தன ரதாஸ்தவ திவ்யநாம

    காயந்தி பக்தி ரஸபான ப்ரஹ்ருஷ்டசித்தா:

    தாதும் க்ருபாஸஹித தர்ஶனம் ஆஶுதேப்ய:

    ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.

    உன்னுடைய நாமஸங்கீர்த்தனம் செய்வதில் விருப்பமுள்ளவர்கள், பக்திரஸத்தைப் பருகியதால், மிகவும் மகிழ்ந்த உள்ளங்கள் உடையவர்களாய், உன்னுடைய தெய்வீகமான நாமங்களைப் பாடுகிறார்கள். அவர்களுக்குக் கருணையுடன் கூடிய தரிசனம் அளிப்பதற்கு எழுந்தருள்வாய்.
    உனக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாயிருக்கட்டும்.

  5. ஆதாய திவ்ய குஸுமானி மனோஹராணி

    ஸ்ரீபாதபூஜன விதிம் பவதங்க்ரி மூலே

    கர்த்தும் மஹோத்ஸுகதயா ப்ரவிஶந்தி பக்தா:

    ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவ ஸுப்ரபாதம்.

    தெய்வீகமான, மனதை ஈர்க்கக் கூடிய நறுமணமுள்ள மலர்களை எடுத்துக்கொண்டு, தங்களுடைய திருவடிகளைப் பூஜிக்கும் சடங்குகளைச் செய்வதற்கு, மிகுந்த உற்சாகத்துடன் பக்தர்கள் புகுகிறார்கள். உங்களுக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாயிருக்கட்டும்.

  6. தேஶாந்தராகத புதாஸ்தவ திவ்ய மூர்த்திம்

    ஸந்தர்ஶனாபிரதி ஸம்யுத சித்தவ்ருத்யா

    வேதோக்த மந்த்ர படனேன லஸந்த்யஜஸ்த்ரம்

    ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவஸுப்ரபாதம்

    உலகின் பல பாகங்களிலிருந்து வந்த அறிஞர்கள், உங்களுடைய தெய்வீகமான திருவுருவத்தை நன்கு தரிசிப்பதில் மிக்க விருப்பமுடன் கூடிய உள்ளப்பாங்கு உடையவர்களாய், வேதங்களில் சொல்லப்பட்ட மந்திரங்களை உச்சரிப்பதில் எப்பொழுதும் ஈடுபட்டிருக்கிறார்கள். உங்களுக்குக் காலைப் பொழுது மங்களகரமானதாக இருக்கட்டும்

  7. ஶ்ருத்வா தவாத்புத சரித்ரமகண்ட கீர்த்திம்

    வ்யாப்தாம் திகந்தர விஶால தராத லேஸ்மின்

    ஜிக்ஞாஸு லோக உபதிஷ்டதி சாஶ்ரமேsஸ்மின்

    ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவஸுப்ரபாதம்.

    இந்தப் பரந்த உலகின் எல்லாதிசைகளிலும் பரவியுள்ள தங்களுடைய அற்புதமான வாழ்வையும், அளவற்ற புகழையும் கேட்டு, இந்த ஆஶ்ரமத்தில் (பிரஶாந்தி நிலையத்தில்) ஞான நாட்டம் கொண்ட மக்கள் நெருங்கி நிற்கிறார்கள். உங்களுக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாக இருக்கட்டும்

  8. ஸீதாஸதீ ஸம விஶுத்த ஹ்ருதம்புஜாதா :

    பஹ்வங்கனா: கரக்ருஹீத ஸுபுஷ்பஹாரா:

    ஸதுன்வந்தி திவ்ய நுதிபி:: பணி பூஷணம் த்வாம்

    ஸ்ரீ ஸத்யஸாயி பகவன் தவஸுப்ரபாதம்

    ஸீதாபிராட்டியார் எனும் பதிவிரதைக்கு இணையான தூய்மையுடைய இதயமெனும் தாமரை உடையவர்களான பல பெண்டிர், கையில் மேன்மையான மலர்மாலைகளை எடுத்துக் கொண்டு பாம்பாபரணமுடைய உங்களை, தெய்வீகமான ஸ்துதிகளால் துதிக்கிறார்கள். உங்களுக்குக் காலைப்பொழுது மங்களகரமானதாக இருக்கட்டும்.

  9. ஸுப்ரபாதமிதம் புண்யம்

    யே படந்தி தினே தினே

    தே விஶந்தி பரந்தாம

    ஞான விக்ஞான ஶோபிதா:

    யாரொருவர் இந்தப் புண்யகரமான ஸுப்ரபாதத்தை அனுதினம் படிக்கிறார்களோ, அவர்கள் ஞானத்தாலும், அறிவினாலும் ஶோபிக்கப்பட்டு விளங்குவதுடன், பரமபதத்தையும் அடைகிறார்கள்.

  10. மங்களம் குருதேவாய மங்களம் ஞானதாயினே

    மங்களம் பர்த்திவாஸாய மங்களம் ஸத்யஸாயினே

    அஞ்ஞானத்தைப் போக்கும் குருதேவருக்கு மங்களமுண்டாகட்டும். புட்டபர்த்தியில் வசிப்பவருக்கு மங்களம் உண்டாகட்டும். ஞானத்தை நல்குபவருக்கு மங்களமுண்டாகட்டும். ஸத்ய ஸாயிநாதனுக்கு மங்களமுண்டாகட்டும்.

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410521322{margin-right: 0px !important;margin-left: 0px !important;}”][/vc_row]