- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ப்ரேமை

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ப்ரேமை

சகுந்தலை அவளுடைய குருவை விட்டு பிரிந்து செல்லும்போது கன்வ முனிவரின் ஆசிரமத்தில் இருந்த தாவரங்கள் எப்படியெல்லாம் அழுதன என்ற கதையை நாம் கேட்டதில்லையா?

இது போன்றே ஜே.சி.போஸின் “தொட்டால் சிணுங்கி” (Touch-Me-Not’) தாவரத்தின் மீதான ஆய்வு, பாங்காக்கில் உள்ள சூலாலாங்கன் பல்கலை கழகத்தில் (Chulalongkorn University of Bangkok) சாமந்தி செடிகளில் ஆர்ட் ஓங் ஜூம்சாய் மேற்கொண்ட சோதனைகள் ஆகியவை உயிரினங்களின் மீதான அன்பின் தாக்கம் குறித்த சில அறிவியல் சான்றுகள் ஆகும்.

எளிமையான சொற்களில் சொல்வதென்றால் அன்பு என்பது ஒவ்வொருவராலும் கொடுத்து பெறுதல் என்று பரிமாறிக்கொள்ளும் ஒரு நேர்மறை சக்தி (ஆற்றல்) ஆகும். இளம் கிருஷ்ணர் அவருடைய புல்லாங்குழலில் மெல்லிசை வாசித்தபோது பறவைகள் மற்றும் விலங்குகள் கூட பரவசத்துடன் அசையாமல் நின்றன.

அன்பின் தாக்கம் தாவரங்கள் மற்றும் விலங்குகள் மீது மட்டுமன்றி மனிதர்களின் மீதும் உள்ளது. அன்பு மனிதர்களிடையே இரக்கம்,கருணை மற்றும் பச்சாதாபம் என்று வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது.

வெறுப்பு இருக்கும் இடத்தில் அன்பைகொண்டும்
காயப்படும் வேளையில் – மன்னித்தலையும்
சந்தேகத்தை – நம்பிக்கையாலும்
இருளை – ஒளியாலும்
சோகத்தை – மகிழ்வாலும்விதைக்கிறேன் (நிரப்புகிறேன்).
ஏனெனில் எதைக் கொடுக்கிறோமோ அதனையே பெறுவோம் என்கிறார் புனித பிரான்ஸிஸ்.

இந்தப் பகுதியில் “உலகளாவிய அன்பு” (Universal Love) என்னும் கதையைப் படிப்போம். இது முகம்மது நபியின் வாழ்வில், தன்னிடம் வெறுப்பைக் காட்டியவரிடம் அவர் அன்பை பொழியும் ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை விவரிக்கின்றது.

[ஆதாரம்: Towards Human Excellence– Book 2.Sri Sathya Sai EHV Trust, Mumbai

[/vc_column_text][/vc_column][/vc_row]