- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

தர்மம் & ப்ரேமை

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]

“அன்பின்றி கடமையாற்றுவது வருந்தத்தக்கது. அன்புடன் கடமையாற்றுவது விரும்பத்தக்கது. (கடமைப் படாமலும் அன்பு காட்டுவது தெய்வீகமானது) அன்பு, தனது இயல்பானதால், தனது கடமை இல்லை என்றாலும் மனிதாபிமானத்துடன் செய்யக்கூடிய சேவை தெய்வீகமானது.”

[ஆதாரம்: ஸ்ரீ சத்ய ஸாயி (14 நவம்பர் 1975)]

ஒருவன் தனது கடமைகளைச் சரிவர செய்தால், உண்மையான மகிழ்ச்சி அருளப் பெறுகிறான். சில கடமைகள் நமக்கானவை. சில மற்றவர்களுக்கானவை.

இறைவன் மீது அன்பு செலுத்தப் பழகும்பொழுது, அனைவருள்ளும் வாழும் இறைவனைக் காணவும், நேசிக்கவும் நம்மை நாம் தயார் படுத்திக் கொள்கிறோம். இறைவன் மீதான அன்பு ,சேவையில் வெளிப்படுகிறது. தன்னலமற்ற சேவையே, ஸ்ரீ சத்திய ஸாயியின் அறிவுரைகளில் மிக முக்கியமான ஆன்மீகப் பயிற்சியாக அறிவுறுத்தப்படுகிறது.

ஸ்வாமி, உயர்ந்த ஆன்மீகப் பயிற்சிகளைப் பற்றி “அன்பே கடவுள்; கடவுளே அன்பு. அனைவரையும் நேசி; தன்னலமற்ற அன்பை சேவை மூலம் வெளிப்படுத்து. அந்த சேவையை இறை வழிபாடாக மாற்று” என்கிறார்.

[ஆதாரம்: ஸ்ரீ சத்ய சாய் (26th மார்ச் 1965)]

அன்புடன் கூடிய தர்மத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் 2 அருமையான கதைகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

  1. மனிதனுக்குச் செய்யும் சேவையே இறைவனுக்குச் செய்யப்படும் சேவை” எனும் கதை, ஆப்ரஹாம் லிங்கனின் வாழ்விலிருந்து ஒரு நிகழ்வு மூலம், சேவையின் உண்மையான அர்த்தத்தைக் குழந்தைகளுக்கு விளக்கிக் கொடுக்கும்.
  2. “மனித முயற்சி தெய்வீக உதவியைப் பெறும்” -இக்கதை சுய தர்மத்திற்கும் பக்திக்கும் (தெய்வத்தின் மீதான அன்பு) சமமாகக் கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தை விவரிக்கின்றது.
[/vc_column_text][/vc_column][/vc_row]