- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

சர்வ சமய ஓற்றுமை

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
சர்வ சமய ஓற்றுமை – முன்னுரை

UOF Intro

“மதம் ஓன்றே; அது அன்பு மதம்
மொழி ஓன்றே; அது இதய மொழி
ஜாதி ஓன்றே ;அது மானுட ஜாதி
கடவுள் ஓருவரே; அவர் ஸர்வ வியாபி.”

பகவான் பாபா சொல்லுக்கிறார்: அனைத்து மதங்களும் ஓரே சத்தியத்தை (கடவுளை)த் தான் அடிப்படையான போதனையாக வலியுறுத்துகின்றன. மதங்களின் முக்கியத்துவத்தை வெகு சிலரே உணர முயல்கிறார்கள். இறை நாமங்களும், ரூபங்களும் வேறுபட்டாலும், சர்வமதங்களிலும் சத்தியம் (கடவுள்) ஒன்றே என்ற பூரண அறிவை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.அந்தந்த மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களுக்கு என்று ஓரு கடவுளை வைத்துக் கொண்டு அவர் எங்கும் நிறைந்தவர் என்றும், அவர் பக்தர்களின் பிரார்த்தனைக்கு செவிசாய்க்கிறார் என்றும் நம்புகிறார்கள். உண்மையில் உலக சமுதாயம் முழுமைக்கும் பரம்பொருள் ஒன்றுதான் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி கடவுள் என்பதும், அவர் அந்த மதத்தைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே அனுக்ரஹம் வழங்குகிறார் என்பதும் தவறான கருத்தாகும்.

[/vc_column_text][/vc_column][/vc_row]