- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

அஷ்டோத்திரம் [55-108]

Print Friendly, PDF & Email [1]
[vc_row css_animation=”fadeIn” css=”.vc_custom_1612410497958{padding-top: 0px !important;}” el_class=”scheme_default”][vc_column][vc_custom_heading text=”காணொளி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para ta-baloo-thambi2″ css=”.vc_custom_1612352326613{margin-top: 0px !important;}”][vc_video link=”https://youtu.be/ReO4_5BCjNk” align=”center” el_class=”video-sty”][vc_custom_heading text=”கேட்பொலி” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para ta-baloo-thambi2″ css=”.vc_custom_1612352316422{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para postaudio”] http://sssbalvikas.in/wp-content/uploads/2021/06/ashtotram55-108.mp3 [2] [/vc_column_text][vc_custom_heading text=”ஸ்துதி வரிகள்” font_container=”tag:h5|text_align:left|color:%23d97d3e” use_theme_fonts=”yes” el_class=”title-para ta-baloo-thambi2″ css=”.vc_custom_1631552119616{margin-top: 0px !important;}”][vc_column_text el_class=”title-para content-box ta-baloo-thambi2″]
  1. ஓம் ஸ்ரீ ஸாயி அனந்த நுத க்ர்த்ருணே நம:

    எண்ணற்ற துதிகளை ஆக்கியவருக்கு வணக்கம் (அல்லது) எண்ணற்ற துதிகளால் புகழப்படும் படைப்புக் கடவுளுக்கு வணக்கம்.
    அனந்த– எண்ணற்ற, நுத-துதிகளை, கர்தா, கர்தரு-ஆக்கியவர், கர்த்ருனே – ஆக்கியவருக்கு (அல்லது) அனந்த- எண்ணற்ற: நுத- துதிகளால் புகழப்படும், கர்த்ரு-படைப்பவர், படைப்புக் கடவுள்; கர்த்ருனே- படைப்புக் கடவுளுக்கு.

  2. ஓம் ஸ்ரீ ஸாயி ஆதி புருஷாய நம:

    முதல் ஆத்மாவுக்கு வணக்கம்.
    ஆதி-முதல், புருஷ- ஆத்மா, புருஷாய-ஆத்மாவுக்கு.

  3. ஓம் ஸ்ரீ ஸாயி ஆதி ஸக்தயே நம:

    முதல் (பரா) ஸக்திக்கு வணக்கம்.
    ஆதி-முதல், ஸக்தி – ஆற்றல், ஸக்தயே – ஸக்திக்கு.

  4. ஓம் ஸ்ரீ ஸாயி அபரூப ஸக்தினே நம:

    கண்ணனுக்குத் தெரியாத ஆற்றலையுடையவருக்கு வணக்கம்.
    அபரூப கண்ணனுக்குத் தெரியாத, ஸக்தின்- ஆற்றலை உடையவர், ஸக்தினே – ஆற்றலையுடையவருக்கு.

  5. ஓம் ஸ்ரீ ஸாயி அவ்யக்த ரூபினே நம:

    புலன்களால் அறிய இயலாத வடிவத்தையுடையவருக்கு வணக்கம்.
    வ்யக்த – ஐம்புலன்களால் அறியக்கூடிய, அவ்யக்த- ஐம்புலன்களால் அறிய இயலாத: ரூபினே- வடிவத்தை உடையவருக்கு.

  6. ஓம் ஸ்ரீ ஸாயி காமக்ரோத த்வம்ஸினே நம:

    ஆசைகளையும், கோபத்தையும் அழிப்பவருக்கு வணக்கம்.
    காம ஆசை, க்ரோத – கோபம், த்வம்ஸ-அழித்தல், த்வம்ஸினே- அழிப்பவருக்கு.

  7. ஓம் ஸ்ரீ ஸாயி கனகாம்பரதாரிணே நம:

    (பீதாம்பரத்தை) பொன்னாடையை அணிபவருக்கு வணக்கம்.
    கனக+அம்பர = கனகாம்பர, கனக-பொன் , அம்பர-ஆடை, தாரிண- அணிபவர். தாரிணே- அணிபவருக்கு.

  8. ஓம் ஸ்ரீ ஸாயி அத்புத சர்யாய நம:

    வியக்க வைக்கும் செயல்களைச் செய்பவருக்கு வணக்கம்.
    அத்புத-அற்புதமான (அ) வியக்க வைக்கும், சர்யாய-செயல்களைச் செய்பவருக்கு.

  9. ஓம் ஸ்ரீ ஸாயி ஆபத்பாந்தவாய நம:

    ஆபத்திலுள்ளவர்களுக்கு உறவினர் போல் உதவுபவருக்கு வணக்கம்.
    ஆபத் – ஆபத்திலுள்ளவர்களுக்கு, பாந்தவாய – உறவினர் போல் உதவுபவருக்கு

  10. ஓம் ஸ்ரீ ஸாயி ப்ரேமாத்மனே நம:

    பிரேமஸ்வரூபத்திற்கு வணக்கம்.
    ப்ரேமா – பிரேமை, பிரதிபலனை எதிர்பார்க்காமல் செய்யும் அன்பு. ஆத்மனே – ஸ்வரூபத்திற்கு.

  11. ஓம் ஸ்ரீ ஸாயி ப்ரேம மூர்த்தியே நம:

    பிரேம மூர்த்திக்கு வணக்கம்.
    ப்ரேமா – பிரேமை, மூர்த்தியே – மூர்த்திக்கு திருவுருவமாய் இருப்பவருக்கு

  12. ஓம் ஸ்ரீ ஸாயி ப்ரேம ப்ரதாய நம:

    பிரேமையை அருள்பவருக்கு வணக்கம்.
    ப்ரேம- பிரேமையை, தாய – கொடுப்பவருக்கு, ப்ர என்பது சிறப்பைக் குறிக்கிறது.

  13. ஓம் ஸ்ரீ ஸாயி ப்ரியாய நம:

    பிரியனுக்கு, விரும்பப்படுபவனுக்கு வணக்கம்.
    ப்பிரிய- பிரியன், விரும்பப்படுபவன்.

  14. ஓம் ஸ்ரீ ஸாயி பக்த ப்ரியாய நம:

    பக்தர்களுக்குப் பிரியனாய் இருப்பவருக்கு வணக்கம்.
    பக்த- பக்தர்களுக்கு, பக்தர்களால்: ப்ரிய-பிரியன் (அ) விரும்பப் படுபவன்: ப்ரியாய-பிரியனுக்கு , விரும்பப்படுபவனுக்கு.

  15. ஓம் ஸ்ரீ ஸாயி பக்த மந்தாராய நம:

    பக்தர்களுக்கு கற்பகத்தருவாயிருப்பவருக்கு வணக்கம்.
    பக்த- பக்தர்களுக்கு: மந்தார – கற்பக மரம் : மந்தாராய – வேண்டியதைத் தரும் கற்பகத்தருவாயிருப்பவருக்கு: தரு – மரம் .

  16. ஓம் ஸ்ரீ ஸாயி பக்த ஜான ஹ்ருதய விஹாராய நம:

    பக்த ஜனங்களின் உள்ளங்களில் விளையாடுபவருக்கு வணக்கம்.
    பக்தஜன – பக்த ஜனங்களின், ஹ்ருதய – இதயம், இதயங்களில், விஹாராய– விளையாடுபவருக்கு.

  17. ஓம் ஸ்ரீ ஸாயி பக்த ஜான ஹ்ருதயாலயாய நம:

    பக்த ஜனங்களின் உள்ளங்களை ஆலயமாய் உடையவருக்கு வணக்கம்.
    பக்த ஜன – பக்த ஜனங்களின், ஹ்ருதய-இதயங்கள், உள்ளங்களை, ஆலய – இருப்பிடம்: ஆலயாய – இருப்பிடமாய் உடையவருக்கு, ஆலயமாய் உடையவருக்கு.

  18. ஓம் ஸ்ரீ ஸாயி பக்த பராதீனாய நம:

    பக்தர்களின் ஆட்சியில் உள்ளவருக்கு வணக்கம்.
    பர – பிறருடைய, ஆதினம் – ஆட்சி , பராதீனாய – பிறருடைய ஆட்சியிலுள்ளவர். பிறர் யாவர்? பக்தர்களே! பக்தர்கள் ஆணையிட ஏவல் செய்வார் எம்பெருமான்.

  19. ஓம் ஸ்ரீ ஸாயி பக்திஞான ப்ரதீபாய நம:

    பக்தி, ஞானம் எனப்படும் சிறந்த தீபமாய் இருப்பவருக்கு வணக்கம்.
    தீபாய – தீபமாய் இருப்பவருக்கு. ப்ர என்பது சிறப்பைக் குறிக்கிறது.

  20. ஓம் ஸ்ரீ ஸாயி பக்தி ஞானப்ரதாய நம:

    பக்தி, ஞானத்தை அருள்பவருக்கு வணக்கம்.
    பக்திஞான – பக்தி, ஞானத்தை தாய – கொடுப்பவருக்கு, ப்ர என்பது சிறப்பைக் குறிக்கிறது.

  21. ஓம் ஸ்ரீ ஸாயி ஸுக்ஞான மார்க் தர்ஸகாய நம:

    நல்ல ஞான நெறியைக் காட்டுபவருக்கு வணக்கம்.
    ஸு- நல்ல, ஞான – ஞானம், ஞானமார்க – ஞானநெறியை, தர்ஸகாய – காட்டுபவருக்கு.

  22. ஓம் ஸ்ரீ ஸாயி ஞான ஸ்வரூபாய நம:

    ஞானஸ்வரூபிக்கு வணக்கம்.
    ஸ்வரூபாம் – வடிவம் : ஸ்வரூபி – வடிவமுடையவர்: ஸ்வரூபாய- வடிவம் உடையவருக்கு.

  23. ஓம் ஸ்ரீ ஸாயி ஸுந்தர ரூபாய நம:

    கீதையைப் போதிப்பவருக்கு வணக்கம்.
    கீதா – பகவத் கீதை(யை) : போதகாய – போதிப்பவருக்கு.

  24. ஓம் ஸ்ரீ ஸாயி ஞான ஸித்திதாய நம:

    ஞானத்தூய்மையை நல்குபவருக்கு வணக்கம்.
    ஸித்தி- தூய்மை : ஞானஸித்தி – ஞானத்தூய்மை(யை) தாய- கொடுப்பவருக்கு.

  25. ஓம் ஸ்ரீ ஸாயி ஸுந்தர ரூபாய நம:

    அழகிய வடிவத்தை உடையவருக்கு வணக்கம்.
    ஸுந்தர – அழகிய ரூபாய வடிவத்தை உடையவருக்கு.

  26. ஓம் ஸ்ரீ ஸாயி புண்ய புருஷாய நம:

    புண்ணிய ஆத்மாவுக்கு வணக்கம்.
    புண்ய – புண்ணியமான : புருஷ- ஆத்மா : புருஷாய – ஆத்மாவுக்கு.

  27. ஓம் ஸ்ரீ ஸாயி பலப்ரதாய நம:

    பலனைக் கொடுப்பவருக்கு வணக்கம்.
    பல – பலனை: தாய- கொடுப்பவருக்கு: ப்ர என்பது சிறப்பைக் குறிக்கிறது.

  28. ஓம் ஸ்ரீ ஸாயி புருஷோத்தமாய நம:

    புருஷோத்தமனுக்கு வணக்கம்.
    புருஷ – புருஷர்களில், ஆத்மாக்களில் : உத்தமாய – தலைசிறந்தவருக்கு.

  29. ஓம் ஸ்ரீ ஸாயி புராண புருஷாய நம:

    மிகவும் பழமையான ஆத்மாவுக்கு வணக்கம்.
    புராண – மிகைப்பழமையான : புருஷ-ஆத்மா: புருஷாய-ஆத்மாவுக்கு.

  30. ஓம் ஸ்ரீ ஸாயி ஆதீதாய நம:

    (எல்லாவற்றையும்) கடந்தவருக்கு வணக்கம்.
    ஆதீதாய – கடந்து நிற்பவருக்கு.

  31. ஓம் ஸ்ரீ ஸாயி காலாதீதாய நம:

    காலத்தைக் கடந்து நிற்பவருக்கு வணக்கம்.
    காலம் – காலம் : ஆதீதாய – கடந்து நிற்பவருக்கு.

  32. ஓம் ஸ்ரீ ஸாயி ஸித்திரூபாய நம:

    தூய்மையான வடிவினருக்கு, (அ) வெற்றி வடிவினருக்கு, (அ) சாதனா வடிவினருக்கு வணக்கம்.
    ஸித்தி-தூய்மை, வெற்றி , சாதனை; ரூபாய – வடிவினருக்கு.

  33. ஓம் ஸ்ரீ ஸாயி ஸித்த ஸங்கல்பாய நம:

    உடனே பலன் அளிக்கும் எண்ணம் உடையவருக்கு வணக்கம்.
    ஸித்தி – தவறாத (அ ) உடனே பலன் அளிக்கும் : ஸங்கல்ப- எண்ணம், ஸங்கல்பாய – எண்ணமுடையவருக்கு.

  34. ஓம் ஸ்ரீ ஸாயி ஆரோக்ய ப்ரதாய நம:

    ஆரோக்கியத்தை அருள்பவருக்கு வணக்கம்.
    ரோகம் – வியாதி : ஆரோக்கியம் – வியாதியற்ற நிலை: தாய – கொடுப்பவருக்கு: ப்ர என்பது சிறப்பை குறிக்கிறது.

  35. ஓம் ஸ்ரீ ஸாயி அன்ன வஸ்த்ரதாய நம:

    உணவையும், உடையையும் அருள்பவருக்கு வணக்கம்.
    அன்னம்- உணவு : வஸ்திரம் – ஆடை: தாய – கொடுப்பவருக்கு.

  36. ஓம் ஸ்ரீ ஸாயி ஸம்ஸார து:க க்ஷயகராய நம:

    உலக வாழ்வின் துன்பங்களை அழிப்பவருக்கு வணக்கம்.
    ஸம்ஸார – பிறப்பு, இறப்பு எனும் சுழற்சியில் சிக்க வைக்கும் உலக வாழக்கை : து : கம் – துன்பம் : க்ஷயம் – அழிவு : கராய- செய்பவருக்கு.

  37. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வாபீஷ்ட ப்ரதாய நம:

    (சாதகர்களின்) எல்லா விருப்பங்களையும் அருள்பவருக்கு வணக்கம்.
    ஸர்வ – எல்லவிதமான: அபீஷ்ட – விருப்பங்கள்: தா – கொடுத்தால்: தாய – கொடுப்பவருக்கு: ப்ர என்பது சிறப்பைக் குறிக்கிறது .

  38. ஓம் ஸ்ரீ ஸாயி கல்யாண குணாய நம:

    சிறப்பான குணங்களையுடையவருக்கு வணக்கம்.
    கல்யாண – சிறப்பான: குணாய – குணங்களையுடையவருக்கு.

  39. ஓம் ஸ்ரீ ஸாயி கர்ம த்வம்ஸினே நம:

    விதியின் பயனை அழிப்பவருக்கு வணக்கம்.
    கர்ம – விதியின் பயன், த்வம்ஸ – அழித்தல்: த்வம்ஸின்- அழிப்பவர்: த்வம்ஸினே – அழிப்பவருக்கு.

  40. ஓம் ஸ்ரீ ஸாயி ஸாது மானஸ ஸோபிதாய நம:

    ஸாதுக்களின் உள்ளங்கையில் ஒளிர்பவருக்கு வணக்கம்.
    ஸாது – ஸாதுக்களின் மானஸ – உள்ளங்கையில்: ஸோபிதாய- ஒளிர்பவருக்கு.

  41. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வமத ஸம்மதாய நம:

    எல்லா மதங்களையும் ஒப்புக்கொள்பவருக்கு வணக்கம். (அல்லது) எல்லா மதங்களாலும் ஒப்புக்கொள்ளப்படுபவருக்கு வணக்கம்.
    ஸம்மதி – ஒப்புதல்: ஸம்மதம் – ஒப்புக்கொள்ளப்பட்டவர், ஒப்புக் கொள்ளப்பட்டது: ஸர்வ – எல்லா : மத – மதங்களாலும் : ஸம்மதாய- ஒப்புக்கொள்பவருக்கு, ஒப்புக்கொள்ளப்படுபவருக்கு.

  42. ஓம் ஸ்ரீ ஸாயி ஸாது மானஸ பரிசோதகாய நம:

    ஸாதுக்களின் உள்ளங்களை நன்கு தூய்மை செய்பவருக்கு வணக்கம்.
    ஸாது – ஸாதுக்களின் மானஸ – உள்ளங்களை, பரி – விசேஷமாக: பரிஸோதகாய – நன்கு தூய்மை செய்பவருக்கு.

  43. ஓம் ஸ்ரீ ஸாயி ஸாதகானுக்ரஹ வடவ்ருஷ ப்ரதிஷ்டாபகாய நம:

    ஸாதகர்களுக்கு அனுக்ரஹம் செய்வதன் பொருட்டு ஆலமரத்தை (பிரசாந்தி நிலையத்தில்) நாட்டவருக்கு வணக்கம்.
    ஸாதக – ஸாதகர்களுக்கு: அனுக்ரஹ – அனுக்ரஹம் செய்வதன் பொருட்டு : வருஷம் – மரம் : வடவ்ருக்ஷம் – ஆலமரம், ப்ரதிஷ்டை- நட்டல்/நடுதல், ஸ்தாபித்தல் : ப்ரதிஷ்டாபகாய – நாட்டவருக்கு.

  44. ஓம் ஸ்ரீ ஸாயி ஸகல ஸம்ஸய ஹராய நம:

    எல்லா சந்தேகங்களையும் போக்குபவருக்கு வணக்கம்.
    ஸகல-எல்லா : ஸம்ஸய – சந்தேகங்களை : ஹர – அழிப்பவர் (அ ) போக்குபவர் : ஹராய – போக்குபவருக்கு.

  45. ஓம் ஸ்ரீ ஸாயி ஸகல தத்வ போதகாய நம:

    அனைத்து அறிவின் சாரத்தைப் போதிப்பவருக்கு வணக்கம்.
    ஸகல – எல்லா : தத்வ – அனைத்து அறிவின் சாரத்தை : போதகாய- போதிப்பவருக்கு.

  46. ஓம் ஸ்ரீ ஸாயி யோகீஸ்வராய நம:

    யோகிகளின் தலைவருக்கு வணக்கம்.
    யோகி – யோகிகளுக்கு , யோகிகளின்; ஈஸ்வர – தலைவர் : ஈஸ்வராய- தலைவருக்கு.

  47. ஓம் ஸ்ரீ ஸாயி யோகீந்த்ர வந்திதாய நம:

    யோகிகளின் தலைவர்களால் வணங்கப்படுபவருக்கு வணக்கம்.
    யோகி – யோகிகளின்: இந்த்ர – தலைவன் : வந்திதாய- வணங்கப்படுபவருக்கு.

  48. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ மங்கள கராய நம:

    ஸர்வ மங்களங்களையும் செய்பவருக்கு வணக்கம்.
    ஸர்வ – எல்லா : மங்கள – மங்களங்களையும்: கராய – செய்பவருக்கு.

  49. ஓம் ஸ்ரீ ஸாயி ஸர்வ ஸித்தி பிரதாய நம:

    எல்லாத் தூய்மைகளையும், சாதனைகளையும், வெற்றிகளையும் நல்குபவருக்கு வணக்கம்.
    ஸர்வ – எல்லா : ஸித்தி – தூய்மை, சாதனை, வெற்றி: தா – கொடுத்தல்: தாய – கொடுப்பவருக்கு ப்ர என்பது சிறப்பைக் குறிக்கிறது.

  50. ஓம் ஸ்ரீ ஸாயி ஆபந்நிவாரினே நம:

    ஆபத்துகளைப் போக்குபவருக்கு வணக்கம்.
    ஆபந்நிவாரினே = ஆபத் + நிவாரினே: ஆபத் – ஆபத்துகளை: நிவாரினே – போக்குபவருக்கு.

  51. ஓம் ஸ்ரீ ஸாயி ஆர்த்தி ஹராய நம:

    துன்பங்களை அழிப்பவருக்கு வணக்கம்.
    ஆர்த்தி- துன்பம்: ஹர – அழிப்பவர் : ஹராய – அழிப்பவருக்கு.

  52. ஓம் ஸ்ரீ ஸாயி ஷாந்த மூர்த்தியே நம:

    அமைதியின் திருவுருவமாக இருப்பவருக்கு வணக்கம்.
    ஷாந்த – அமைதி: மூர்த்தம் – உருவம் : ஷாந்த மூர்த்தியே – அமைதியின் திருவுருவமாக இருப்பவருக்கு.

  53. ஓம் ஸ்ரீ ஸாயி ஸுலப ப்ரஸன்னாய நம:

    மிக எளிதில் சந்தோஷமடைபவருக்கு வணக்கம்.
    ஸுலப – எளிதில்: ப்ரஸன்னாய – உள்ளத்தில் சந்தோஷமடைபவருக்கு.

  54. ஓம் ஸ்ரீ பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாய நம:

    பகவான் ஸ்ரீ ஸத்ய ஸாயி பாபாவுக்கு வணக்கம்.

BHAGAVAN – Who possesses the 6 excellences in full:

He who knows the origin and consummation of every being – their comings and goings Therefore the Garland of 108 Precious Gems concludes with this confirmation and this affirmation.

[/vc_column_text][/vc_column][/vc_row][vc_column][/vc_column][vc_column_inner css=”.vc_custom_1611844766263{padding-top: 0px !important;}”][/vc_column_inner]