- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஜபம்,தியானம்-முக்கியத்துவம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]

இறைநாமத்தைத் திருப்பித் திருப்பி ஓதுதல் ஜபமாகும். இறைநாமத்தை ஓதினால், அது வேதம் ஓதுவதற்குச் சமம்.

வேதத்தின் சாரம் உபநிஷதம்.
உபநிஷதத்தின் சாரம் பகவத்கீதை.
பகவத்கீதையின் சாரம் இறைநாமம்.

ஜபம் தியானத்தை அனுஷ்டிக்க நமக்கு உதவுகிறது. ஜபம் செய்யும்போது பக்தியோடு ஜபிக்க வேண்டும். ஜபம் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டுமெனில் செய்யும் ஜபத்தின் பொருளை நாம் அறிந்திருக்க வேண்டும். நாம் யாராவது ஒருவரைப் பெயரிட்டு அழைப்பது போல, இறைவனது நாமத்தை ஜபிப்பதால் நாம் இறைவனை அழைக்கிறோம்.

ஜபமாலையை எப்படிப் பிடிப்பது?

சாத்வீக குணத்தைக் குறிக்கும் நடுவிர-ன் மேல் ஜபமாலையைப் பிடித்துக் கொள்ள வேண்டும். மோதிர விரல் ராஜஸ குணத்தையும், சுண்டுவிரல் தாமஸ குணத்தையும் குறிக்கின்றன. சுட்டுவிரல் ஜீவனையும் கட்டைவிரல் பிரம்மனையும் குறிக்கின்றன. சுட்டு விரல் நுனி கட்டைவிரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு மணிகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தள்ள வேண்டும்.

தியானம்

கடவுள் ஒவ்வொன்றிலும் இருக்கிறார். நாம் வழிபடும் விக்ரஹங்களிலும் படங்களிலும் நம்மிலும் கடவுள் இருக்கிறார். நம்முள் அவர் இருக்கும் சாந்நித்தியத்தை (இருப்பை) நாம் உணர வேண்டும். மற்ற எல்லாக் காட்சிகளி-ருந்தும் நமது பார்வையை விலக்குவதாலும், மற்ற எல்லா சப்தங்களையும் கேட்காமல் இருப்பதாலும், நமது உள்முகக் காட்சியும், கேள்வியும் இன்னும் தெளிவாகின்றன. நம்மி-ருந்து கடவுளின் சாந்நித்தியத்தை உணரும்போது, நாம் இனிமையையும், ஆனந்தத்தையும் அனுபவிக்கிறோம். படைத்த கடவுளுடனும், படைப்பு அனைத்துடனும் ஒருவனுடைய ஒருமைத் தன்மையை உணர்வதற்கு இட்டுச் செல்லும் பாதையும் வழிமுறையும் தியானம் ஆகும்.

தியானத்தின் நன்மைகள்
  1. நாம் நமது புலன்களைக் கட்டுப்படுத்தி நன்மையைச் செய்ய அவற்றைப் பயிற்றுவிக்கிறோம்.
  2. ஒருமுனைப்படுத்துதல், ஆழ்ந்த சிந்தனை செய்தல் இவைகளை அனுஷ்டித்தல் நமக்கு அன்றாடப் படிப்பிலும், பணிகளிலும் உதவுகிறது.
  3. கடவுள் ஒவ்வொன்றிலும் இருக்கிறார் என்பதை உணர்ந்து அனுபவிக்கும்போது நான் என்னும் வேறுபாட்டுணர்ச்சியும், சுயநலமும் மறைகின்றன. நாம் எல்லாப் படைப்பையும் நேசிக்கிறோம். நாம் நல்ல குடிமக்களாக விளங்கி நாட்டையும் நல்வழிப்படுத்துகிறோம்.
[/vc_column_text][/vc_column][/vc_row]