- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

பிரார்த்தனை மற்றும் ஓங்காரத்தின் முக்கியத்துவம்

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
பிரார்த்தனை

பிரார்த்தனையினால் நாம் எவ்வளவு பெறுவோம் என்று இவ்வுலகம் கொள்ளும் கற்பனையை விட அதிகம் உண்மையில் பெறப்படுகிறது. -டென்னிஸன்

“மனித மனதிற்கு நிச்சயமாகப் பிரார்த்தனை தேவைப்படுகிறது” – மஹாத்மா காந்தி

சத்தியம் சிவம் சுந்தரத்தில் ஸ்வாமி சொல்லுகிறார்: “சிவனுக்கும் நமக்கும் உள்ள தூரம் – நம் அழைப்பு அவர்களுக்குக் கேட்கிற தூரமே. அவரை நம்புங்கள். அவரை அழையுங்கள். நான் இங்கே தான் இருக்கிறேன் என்று அவர் விடையளிப்பார்”.

பிரார்த்தனை வகைகள்

1) துதி, 2) நன்றி, 3) வேண்டுதல், 4) மேம்படுத்துதல், 5) உலகளாவியப்பிரார்த்தனை, 6) ஆன்மாவின் அழைப்பு.

  1. துதி: இறைவனைச் சரிவர அறிந்துவிட்டால் அவர் அருளால் வருவது துதி. இறைவனின் புகழைப் பாடுவதே துதி. (அவன் அருளாலே அவன் தாள் பணிந்து – சிவபுராணம்)
  2. நன்றி: இறைவன் நமக்கு வழங்குகின்ற பல நன்மைகளுக்காக நாம் செலுத்துகிற நன்றிதான் பிரார்த்தனை.
  3. வேண்டுதல்/இறைஞ்சுதல்: பிரார்த்தனை என்பது கெஞ்சுவது அல்லது வேண்டுவதே. பிரார்த்தனை என்பது ஒருவன் இறைவனிடம் உதவிக்காகவோ, காப்பாற்றுவதற்காகவோ, வ-மை பெறுவதற்காகவோ வேண்டுவது. இந்தப் பிரார்த்தனை உடல் நலத்துக்காகவோ, நீதிநெறி தெரிந்து கொள்ளவோ, ஆன்மீக வளர்ச்சிக்காகவோ, அல்லது செய்த பிழைகளை மன்னிக்க வேண்டியோ வேண்டுவதாகும்.
  4. மேம்படுத்துதல்: வேதங்களில் பிரார்த்தனை ப்ருஹம் (மேம்படுத்துதல்) என்று சொல்லப்படுகிறது. இதன் பொருள் சொர்க்கத்திற்கு ஒருவரை மேல்நோக்கி இட்டுச் செல்வது என்பதாகும். நமது பிரார்த்தனை நம் உள்ளத்தையும், ஆன்மாவையும் மேன்மைபடுத்துகிறது.
  5. உலக நன்மைக்காக பிரார்த்தனை: பிரார்த்தனைகளில் சில உலக நன்மை குறித்ததாகவே இருக்கும். அவையெல்லாம் தன்னலம் துறந்த பொது பிரார்த்தனை. இது உலகளாவிய பிரார்த்தனை.
    ஓம் ஸர்வேவை ஸீகின: ஸந்து
    (எல்லோரும் சுகமாக இருக்கட்டும்).

    நம் உடலுக்கு காற்று, நீர் உணவு, சூரிய ஒளி இவையெல்லாம் வேண்டும். இவற்றை வழங்குகிறவர் இறைவன். உடலுக்கு இவை தேவை என்பது போல மனதிற்கு இறைவனோடு சரியான தொடர்பு இருப்பது அவசியம். இத்தொடர்பை இறைவனோடு நாம் கொள்வதற்கு பிரார்த்தனையும், தியானமுமே வழி. அவைதான் பொருத்தமான ஆன்மீக வளர்ச்சியை உண்டாக்கும்.

  6. ஆன்மாவின் அழைப்பு: பாபா சொல்லுகிறார்; “பிரார்த்தனை என்பது உயர்ந்த வழி. அதில்தான் கடவுள் வருகிறார். அல்லது கடவுளை நோக்கிப் பக்தன் நடக்கிறான். ஆன்மாவின் அழைப்புதான் பிரார்த்தனை”. ஆகவே சில பிரார்த்தனைகளுக்கு இறைவன் உடனே பதிலளிக்கிறார். “ஹஸ்தினாபுரத்தில் திரௌபதி அவமானப்பட்ட போது கிருஷ்ணனைப் பிரார்த்தித்தாள்” அவள் மானத்தைக் காக்க கிருஷ்ணன் உடனே அங்கு தோன்றினார்.
பிரார்த்திக்கும் முறை:

கஜேந்திரன் என்ற யானையை முதலை ஒன்று கொல்ல இருந்தபோது அது ஆதிமூலமே என்றும் நாராயணா என்றும் பிரார்த்தித்தது. அந்தக் காடு எங்கேயோ இருந்தபோதிலும் நாராயணன் விரைந்து முதலையைக் கொன்று காத்தார். பக்தனின் உள்ளத்தில் உண்மையான அன்பும், நம்பிக்கையும் இருந்து பிரார்த்தனை மனதின் ஆழத்திலிருந்து வரும்போது கடவுள் பக்தனின் அருகே வருகிறார். அற்புதங்கள் அப்போது நிகழ்கின்றன. பக்தனின் துயரத்தை இறைவன் பொறுப்பதில்லை. எந்த பக்தன் துன்பத்தின் பிடியில் இருக்கிறானோ அவனுக்கு உதவ கடவுள் தயாராக இருக்கிறார்.

பிரார்த்தனை என்பது மனிதனைத் தெய்வீகத்தோடு தொடர்புபடுத்துவது. ஒருவரின் பிரார்த்தனை அவனது மனித குணத்தைத் தெரிவிப்பது. பிரார்த்தனை மனத்தைத் தெளிவுபடுத்தி ஆறுதல் அளிக்கிறது. ஒருவனின் நோய்க்கு மருந்து எப்படி வேலை செய்யுமோ அதுபோல மன பலத்திற்கு ஆச்சரியமான செயல்களைப் பிரார்த்தனை செய்யும்.

நம்மிடம் யாரையும் தழுவுகிற அன்பும், இறைவனிடத்து பக்தியும் இல்லாவிட்டால், பிரார்த்தனை மூலம் அதைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்று இராமகிருஷ்ண பரமஹம்ஸர் தம் சீடர்களுக்கு சொல்லுவதுண்டு. இறை நாட்டம் இறையருளால் மட்டுமே வருவது. ஆகவே அந்த நாட்டத்தை வெகுவாகப் பெருக்க வேண்டுமென்று நாம் தொடர்ந்து இறைவனை வேண்ட வேண்டும். இந்த வேண்டுதலைத் தவிர வேறு எதுவும் வேண்டியதில்லை.

நாம் பிரார்த்தனை செய்யும்போது கீழ்க்கண்டவற்றை நினைவில் கொள்ள வேண்டும்:
  1. பிரார்த்தனை முழுமனதோடும், மெய்மையானதாகவும் இருக்க வேண்டும்.
  2. பிரார்த்தனையின்போது மனம், வார்த்தை, எல்லாம் ஒருமுகப்படுத்தப்பட வேண்டும்.
  3. நாள்தோறும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
  4. பிரார்த்தனைக்கு வேதங்களிலிருந்து சுலோகங்கள் கிடைக்கின்றன. இவை தவிர நம் உள்ளத்திலிருந்து பொங்கி வருகிற பிரார்த்தனைகளையும் நாம் வைத்துக் கொள்ளலாம்.
நம் பிரார்த்தனை ஒருபொழுதும் பின்வருமாறு இருக்கக்கூடாது;
  1. ஓ இறைவா! எனக்கு அருள் செய். என் தாய், என் உடன் பிறந்தவர்கள் இவர்களுக்கு மட்டும் அருள் செய். மற்ற யாருக்கும் இல்லை.
  2. என் நண்பர்க்கு இருக்கிற செல்வத்தை விட எனக்கு அதிகம் வேண்டும்.
  3. நமக்கு துயரம் துன்பம் வருமானால் அதை தாங்குகிற சக்தியை வேண்டுதல் வேண்டும். “இறைவா எனக்கு துன்பங்களே வரக்கூடாது என்று கேட்பதை விட துன்பத்தை தாங்ககூடிய வலிமையை தா” என்று வேண்டுதல் வேண்டும்.

சில நேரங்களில் இறைவன் நம் பிரார்த்தனைகளை நிறைவேற்றவதில்லை. ஏன்? நாமே அதைத் திருப்பிச் சோதனை செய்து கொண்டால் காரணம் நமக்கே தெரியும். ஏனென்றால் அந்த பிரார்த்தனை மிகவும் தன்னலமாக இருக்கும். அல்லது அடுத்தவனுக்கு துன்பம் தருவதாக இருக்கும். எதிர்காலத்தில் அது நன்மை தராததாகவும் இருக்கும். எனவே அந்த பிரார்த்தனை நடப்பதில்லை. இறைவனுக்கு எது தரத்தக்கது என்பது தெரியும். ஆகவே அவர் தன் திட்டப்படி வழங்குவார். எனவே முடிவை இறைவன் கையில் விட்டுவிட வேண்டும். எதைத் தர வேண்டுமோ, அதை அவர் நிச்சயம் தருவார். (வேண்டத்தக்கது அறிவோய் நீ – மாணிக்கவாசகர்).

சில போது நாம் கேட்டது கிடைக்க வெகு காலம் ஆகும். இறைவனே நமக்கு தாயும் தந்தையும் வழிகாட்டியும். ஆகவே அவரிடம் நாம் சரண்புக வேண்டும்.

ஓங்காரம் முக்கியத்துவம்

ஓங்காரம் உருவமற்ற பரம்பொருள் (அ) கடவுள். வேதங்களில் நான் பிரணவம் என்கிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

ஆதி மூலமான சப்தமாகும். அகரம், உகரம், மகரம் இம்மூன்றும் சேர்ந்து ஓங்காரமாகிறது. சப்தம் எங்கும் நிறைந்துள்ளது. எல்லாச் சப்தங்களும் ஆதி சப்தமான பிரணவத்தின் விகாரங்களே (மாறுபாடுகளே). பிரணவம் அல்லது ஓங்காரம், அகரம் பிரம்மாவின் படைப்புத் தத்துவத்தையும், உகரம் விஷ்ணுவின் காப்புத் தத்துவத்தையும், மகரம் ருத்ரனுடைய அழிப்புத் தத்துவத்தையும் குறிக்கின்றன.

‘அ’ என்ற ஒலி தொண்டையில் எழுகிறது.

‘உ’ என்ற ஒலி நாக்கிலிருந்து எழுகிறது.

‘ம்’ என்ற ஒலி உதடுகளிலிருந்து உண்டாகிறது.

அகர ஒலியில் மெல்ல ஆரம்பித்து, உகர ஒலியில் சப்தம் அதிகரித்து, மகர ஒலியில் மெல்ல சப்தம் ஒடுங்கும்படி ஓத வேண்டும்.

தூரத்திலிருந்து வரும் விமான ஒலி மெல்ல மெல்ல அதிகமாகிப் பக்கத்தில் வரும்போது அதிகரித்து, பிறகு தூரச் செல்லும்போது கொஞ்சங்கொஞ்சமாகக் குறைந்து மறைந்து விடுவது போலப் பிரணவத்தை ஜபிக்கும்போது ஒலி எழுந்து அமையவேண்டும். ஓங்காரத்தை முறைப்படி ஓதும் பொழுது, சப்தம் நாபியி-ருந்து எழும்.

ஜீவ தத்துவத்தில், ஐந்து ஞானேந்திரியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், ஐந்து கோஸங்கள், மனம் உள்பட இருபத்தியொரு அம்சங்கள் உள்ளன. ஓங்காரத்தை ஓதினால் இவை அனைத்தும் தூய்மைப்படுத்தப்படுகின்றன. ஆதலால், நாம் இருபத்தியொரு முறை ஓங்காரத்தை ஓதுதல் வேண்டும். எந்தக் காரியத்தைத் தொடங்கும்போதும் ஓங்காரத்தை ஓதித் தொடங்க வேண்டும். காரியம் முடியும்போது ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி என்று ஓத வேண்டும்.

ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் – உலக நீதி.

[/vc_column_text][/vc_column][/vc_row]