ஸ்துதி வரிகள்
- ஓம் ஈஸா வாஸ்ய மிதம் ஸர்வம்
- யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்
- தேன தியக்தேன புஞ்ஜிதா
- மா க்ருத: கஸ்யஸ்வித் தனம்:
- ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி:
விளக்கவுரை
மிகப் பெரிய இவ்வுலகில் நாம் காணும் அனைத்திலும் இறைவன் பரவியுள்ளார். எனவே, நான், எனது என்ற எண்ணங்களை விட்டு விட்டு, நமக்கு என்ன கிடைத்துள்ளதோ அதை இறைவனின் பரிசாக நினைத்துப் பயன்படுத்த வேண்டும். நமக்குக் கிடைத்ததை நம்மைச் சுற்றியுள்ளோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அனைத்துமே இறைவனுக்கு சொந்தம். ஆதலால், பேராசை, சுயநலம் ஆகிய உணர்வுகளை விட்டு விடு.
அமைதி நிலவ ஓதப்படும் இம்மந்திரத்தால் ஈஸா வாஸ்ய உபநிஷதம் துவங்குகிறது. இவ்வுலகில் உள்ள ஜீவராசிகள், பொருட்கள் அனைத்திலும் இறைவன் நீக்கமற நிறைந்துள்ளார் என்ற ஓர் உணர்வை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை மேற்சொன்ன இரு உபநிஷத மந்திரங்களும் உபதேசிக்கின்றன.
[/vc_column_text][/vc_column][/vc_row]Endnotes:
- [Image]: #
- https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/06/Ishavasyam.mp3: https://sssbalvikas-s3.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/2021/06/Ishavasyam.mp3