- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

மஹாவீர் ஜெயந்தி

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]

சமண மதத்தின் கடைசி தீர்த்தங்கரரான மகாவீரரின் பிறந்தநாளைக் குறிப்பது மகாவீர் ஜெயந்தி ஆகும். இந்தியா முழுவதும் சமண மதத்தை உபதேசித்தவர் இவரே ஆவார். அஹிம்சை(இன்னா செய்யாமை), சத்தியம்(உண்மை), அஸ்தேயம் (கள்ளாமை) பிரம்மச்சரியம்( தூய்மை) மற்றும் அபரி கிரகம்(பற்றின்மை) ஆகியவை இவரின் முக்கிய போதனைகள் ஆகும். மகாவீரர் உணர்ச்சிகளை அடக்கி வெற்றி கொண்டவர் என்று நமது சுவாமி கூறியுள்ளார். உணர்ச்சிகளை அடக்கி வெற்றி பெற்றதனால் அவருக்கு மகாவீரர் என்ற பெயர் வழங்கப்பட்டது.

மகாவீர் ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மகாவீரரின் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்வர். ஸ்லோகங்கள் பாராயணம் செய்து கொண்டு, அந்த சிலைக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பகல் பொழுது முழுவதும் ஏதாவது ஒரு விதமான தொண்டு, பூஜைகள், விரதங்களில் சமண மதத்தவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். பல பக்தர்கள் மகாவீரரின் கோவிலுக்குச் சென்று, தியானம் மற்றும் பிரார்த்தனைகள் செய்வர். குருமார்கள் வகுப்பு எடுப்பதற்கு ஏதுவாக ஒரு சிறிய முன்னுரை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

[/vc_column_text][/vc_column][/vc_row]