- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

ஞான மொழிகள்

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
ஞான மொழிகள்

16)கடவுளாக இருப்போம் : இந்த உலகம் எனக்காக; நான் உலகிற்கானவன் அல்ல. நல்லதும் தீயதும் நமது அடிமைகள். நாம் அவற்றின் அடிமைகள் இல்லை. அஃறிணைப் பொருட்களே முன்னேற்றம் ஏதுமின்றி இருந்த இடத்தில் இருக்கும். நல்லதை நாடி, தீயதை ஒதுக்குவது மனித இயல்பு. ஆனால் கடவுளின் இயல்பு என்பது இவ்விரண்டையுமே நாடாமல் எப்போதும் ஆனந்தத்தில் திளைப்பதாகும். நாம் கடவுளாக இருப்போம். இந்த உலகினை படக் காட்சியாக எண்ணி எதுவும் நம்மை பாதிக்கப்போவதில்லை என்று அறிந்து நல்லது தீயது இரண்டுமே கடவுளின் விளையாட்டு என்பதால் இரண்டையுமே பதட்டமில்லாத அமைதியுடன் பார்த்துக் கொண்டு இருப்போம். உலகின் அழகினை ரசித்து வாழ்வோம்.

17)உனக்கு உன் மீது திடமான நம்பிக்கை இருக்க வேண்டும். உன்னுடைய மனசாட்சியின் கட்டளைப்படி உன் நடத்தை அமையவேண்டும். நல்லதற்கும் தீயதற்கும் மனசாட்சியே பொறுப்பு. உன்னுடைய குற்றங்கள் தான் தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன. உன்னுடைய பலமும் தன்னம்பிக்கையும் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன. ஆகையால் முத-ல் உன்னுடைய தன்னம்பிக்கையை வளர்க்கக்கூடிய நல்ல செயல்களைச் செய்ய வேண்டும்.

18)நான்கு ‘F’ : ஆங்கிலத்தில் குறிக்கப்படுகிற நான்கு ‘F’ என்ற நன்னெறிகளைப் பின்பற்ற வேண்டும். முதலாவது ‘F’- Follow the Master – தலைவனைப் பின்பற்று. அதாவது உன்னுடைய மனசாட்சியைப் பின்பற்று. நல்லதும், தீயதும், சரியும், தவறும் கலந்த வாழ்க்கையில் மனசாட்சியைப் பின்பற்று! இரண்டாவது ‘F’ – Face to the Devil – சாத்தானை (தீமைகளை) எதிர்கொள். மேம்பாடு நோக்கிய பயணத்தில் ஏற்படும் தடைகள். எதிர்ப்புகள், சிரமங்கள், தோல்விகள், மனச்சோர்வு ஆகிய சாத்தான்களை நாமஸ்மரணை மூலம் துணிவுடன் எதிர்கொள்! மூன்றாவது ‘F’ – Fight to the end – இறுதிவரைப் போராடு. அகங்காரத்தை, உலகப்பற்றினை வேருடன் அறுக்கும் வரை போராடு. எந்த ஆயுதங்களுடன்? அன்பு, கருணை, சாந்தி, தூய்மை என்ற ஆயுதங்களைத் துணை கொள்! நான்காவது ‘F’ – Finish to the Game – வாழ்வு என்னும் ஆட்டத்தை நிறைவு செய். புன்னகையுடன் ஆடு! நல்லோரின் உறவை நாடு! நான் ஆத்மா என்பதை அறிந்து விட்டால், ஆட்டம் நிரந்தரமாக முடிவுக்கு வந்து விடும்.

19)நாக்கும் உணவும்: புலன்களைக் கட்டுப்படுத்தாத சாதனா பலனற்றது. ஓட்டையுள்ள பானையில் உள்ள நீருக்கு இது சமம். அனைத்துப் புலன்களிலும் நாம் நாக்கைக் கட்டுப்படுத்தினால் வெற்றி நமதே. நாக்கு ஏதாவது சுவையான உணவு சாப்பிட வேண்டும் என்று ஆசைப்பட்டால், அதனுடைய விருப்பத்திற்கேற்றாற் போல நடக்க முடியாது என உறுதியாகக் கூறு. துறவிகளும், பெரிய மடங்கள் நடத்துபவர்களும் நாக்கிற்கு அடிமைகளாகி அதனைக் கட்டுப்படுத்த இயலாதவர்களாகிறார்கள். அவர்கள் துறவி உடை அணிந்திருந்த போதிலும் ருசியான உணவு உண்ணுவதில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பதால், அவர்கள் சார்ந்துள்ள துறவி மடங்களுக்கு அவப் பெயர் ஈட்டுகின்றனர். ரொம்பவும் காரமாகவும் சூடாகவும் இல்லாமல் அதே சமயம் சத்து நிறைந்ததாகவும் உள்ள சாதாரண உணவை மட்டும் தொடர்ந்து உட்கொண்டு வந்தால் ஆரம்பத்தில் நாக்கு இவைகளைக் கண்டு சுளித்தாலும், நாளடைவில் ஏற்றுக்கொண்டு விடும். நாக்கு உங்களின் எஜமானனாக இருக்கக்கூடாது. இதனை அடக்க மேற்கண்ட முறையே மிகச்சிறந்த உபாயம்.

20)நாக்கும் பேச்சும் : அதே போல் நாக்கு அடுத்தவர்களை இழிவாகவும் மட்டமாகவும் பேசும் இயல்புடையது. இதையும் கட்டுப்படுத்த வேண்டும். குறைவாக பேசு, இனிமையாக பேசு. அவசியத் தேவை ஏற்படும்போது மட்டுமே பேசு. யாருடன் பேசவேண்டுமோ, அவர்களுடன் மட்டும் பேசு. சப்தம் போட்டு பேசாதே. கோபத்தினால் குரலை உயர்த்திப் பேசாதே. இவ்வாறு இருப்பது நல்ல பொதுத் தொடர்பை ஏற்படுத்த உதவுகிறது. மேலும் மற்றவர்களுடனான சச்சரவைக் குறைக்கிறது. சந்தோஷத்தை அழித்துக் கொள்பவன் என்று பலரும் உன்னைப் பார்த்து சிரித்தாலும் இவைகள் எல்லாம் ஈடு செய்யப்பட்டு விடும். உனது நேரம், சக்தி சேமிக்கப்படுகிறது. உனது உள்முக சக்தியை நல்லவிதமாகப் பயன்படுத்தலாம். எனது செய்தியைப் பின்பற்றுங்கள். சுவையைக் கட்டுப்படுத்துங்கள். பேச்சைக் கட்டுப்படுத்துங்கள்.

21)மக்களே தெய்வங்கள் : நிறையத் தவம் செய்த பிறகு, இந்த மிக உயர்ந்த உண்மையை நான் அறிந்தேன். அனைத்து ஜீவிகள் உள்ளும் அவர் (இறைவன்) உள்ளார். கண்ணுக்குத் தெரியும் அனைத்தும், அவரின் வெளிப்பாடுகளில் தேட வேண்டிய தெய்வம். இதைத் தவிர வேறில்லை. யார் மற்றவர்களுக்குச் சேவை செய்கிறார்களோ, அவர்கள் மட்டுமே இறைவனை வழிபடுபவர்கள். வரப்போகும் ஆண்டுகளில் மற்றத் தெய்வங்கள் நமது மனத்தில் இருந்து விலகட்டும். நம் மக்களே நமது தெய்வங்கள். எங்கும் அவனின் கைகள். எங்கும் அவனின் பாதங்கள். எங்கும் அவனின் காதுகள், மற்ற கடவுள்கள் தூங்கட்டும். விராட சொரூபமாக நம்மைச் சுற்றியுள்ளவர்களை நாம் வணங்குவோம். நாம் வணங்க வேண்டியவர்கள் நமது நாட்டு மக்களே -சுவாமி விவேகானந்தர்.

22)தேசப்பற்று : நானே இந்தியா. முழு இந்தியாவும் நானே என்று நான் உணர வேண்டும். இந்தியாவின் பரந்த தேசப் பகுதிகளே எனது உடல். கன்னியாகுமரி எனது பாதம். இமாலய மலை எனது தலை. எனது முடிகளில் இருந்து கங்கையும், தலையில் இருந்து பிரம்மபுத்திரா, சிந்துவும் பாய்கின்றன. விந்திய மலைகள், என் இடுப்பைச் சுற்றிக் கட்டும் பட்டை. கோர மண்டலம் எனது வலது கால். மலபார் எனது இடது கால். நானே முழுமையான இந்தியா. அதன் கிழக்கு, மேற்குப் பகுதிகள் எனது புஜங்கள். அவைகளை நீட்டி மனிதகுலத்தைத் தழுவுகிறேன். அனைத்தின் ஆத்மாவுமே எனது உள்ளுறையும் ஆத்மா ஆகும். நான் நடக்கும்போது இந்தியா நடப்பதாக உணர்கிறேன். நான் மூச்சுவிடும் போது இந்தியா மூச்சு விடுவதை உணர்கிறேன். நான் பேசும்போது இந்தியா பேசுவதாக உணர்கிறேன். நானே இந்தியா, நானே சங்கரன், நானே சிவன். இதுதான் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வேதாந்தமும், உணரவேண்டிய தேசப்பற்றும் ஆகும் – சுவாமி விவேகானந்தர்.

23)இறைநாமம் : வீட்டிற்குள் பாம்பு புகுந்தால், பாம்புப் பிடாரன் மகுடி இசை மூலம் அதனை அகற்றுவான். உனது மனம் என்ற வீட்டிற்குள், காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சர்யம் என்ற ஆறு நச்சுப்பாம்புகள் புகுந்துள்ளன. அவற்றை நாமஸ்மரணை மூலம் அகற்று. ஆறும் அகற்றப்பட்டால், அகச்சமநிலை (ஐய்ய்ங்ழ் க்ஷஹப்ஹய்ஸ்ரீங்/உம்ர்ற்ண்ர்ய்ஹப் ங்வ்ன்ண்ப்ண்க்ஷழ்ண்ன்ம்) உதயமாகும் – ஸ்ரீ சத்ய சாயி பாபா.

[/vc_column_text][/vc_column][/vc_row]