- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

எண்ணம், மூச்சு, காலம் இவை மூன்றையும் பராமரித்தல்

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]
எண்ணம், மூச்சு, காலம் இவை மூன்றையும் பராமரித்தல்

சென்னையில் நடைபெற்ற பாலவிகாஸ் குருபயிற்சி முகாமில் திரு. சஞ்சீவ் சௌத்ரி ஆற்றிய உரையின் சுருக்கம்

பகவானின் தெய்வீகத் திருப்பணியின் முக்கிய பகுதியான இந்தப் பாலவிகாஸ் குருமார்களின் பயிற்சி முகாமில் பங்கு பெறுவது மிகவும் அரிய வாய்ப்பெனக் கருது கிறேன். சிறியவயதிலேதான் ஒவ்வொருவரின் பழக்கவழக்கங்களும் குணநலன்களும் உருவாகத் தொடங்குகின்றன. ஆகவே,குழந்தைப்பருவத்தில் அவர்களுக்கு அளிக்க வேண்டிய அரியபயிற்சி பற்றிப் பகவான் எப்போதும் வற்புறுத்திக் கூறுகிறார்.

மனிதனின் மூளையைப் படம் பிடித்த விஞ்ஞானிகள் மனித ஆளுமையையும் குணங்களையும் உருவாக்கும் பணி, 80 விழுக்காடு. 7 வயதிலிருந்து 15 வயது வரையிலேயே உருவாக்கப்படுவதாகக் கண்டுள்ளார்கள். ஆகவே தான் பகவான் 6 லிருந்து 15 வயது வரை பாலவிகாஸ் திட்டத்திற்குரியதாக தேர்ந்தெடுத்துள்ளார். ஒவ்வொரு அனுபவமும் ஏற்பட்டவுடன் அதற்கு மனிதன் எப்படிப் பிரதிபலிக்கிறான் என்பது அவனுடைய இயல்பையும் பழக்கத்தையும் பொருத்துள்ளது. ஒருவர் அடிக்கிறாரென்றால் அதற்கு நான் எதிர்தாக்குதல் செய்கிறேனா அல்லது வாளாவிருக்கிறேனா என்பது என்னுடைய குணஇயல்பைக் காட்டும். இதற்கு ஆதாரம் மூளையில் உள்ளது. இந்தநிகழ்ச்சியும் சூழலும் பற்றி மூளை ஆராய்ந்து நரம்புகளின் மூலமாக இயங்க வேண்டிய முறையை உத்தரவு போல் அனுப்புகிறது. ஒரு இடத்தில் ஸ்விட்சைப் போட்டால் மற்றொரு இடத்தில் விளக்கு எரிவது போல இது நிகழ்கிறது. இது ஒரு பூரண மின்னிணைப்புச்சுழற்சி (Electrical circuit) தீர்மானிக்கப்பட்டுள்ளதால்தான் சாத்தியமாகிறது. இதேபோல் 6 வயது முதல் 15 வயது வரையிலானஇளம் பருவத்தில் நல்லதன் சுழற்சியோடு (Circuit of Goodness)தெய்வீக மின்னிசையின் நறுமணத்துடன் கூடியதொருமேன்மையான சுழற்சியை ஏற்படுத்த வேண்டும். (Circuit of Excellence)

இதை நமது கடமையாகக் கருத வேண்டும். பகவானின் அவதாரத் திருப்பணியை நிறைவேற்றுவதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவரும் இதைத்தமது முக்கிய பணியாகச் செய்தல் வேண்டும். இந்த இளம் பிராயத்தில் அவர்களுக்கு எந்தமாதிரி போதனைகளை ஊட்டுகிறோமோ அதுமாதிரியான சமுதாயமே வருங்காலத்தில் உருவாகும். பஞ்சாபில் பயங்கரவாதிகள் பற்றிய ஆய்வுநடத்தியதில் அவர்களில் முக்கியமானவர்கள் 15 – 25 வயதுக்குகள் உள்ளவர்கள் என்று தெரிகிறது. இதற்கு காரணம் என்ன? அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் சரியானமுறையில் அவர்களுடைய கடமையைச் செய்யாததே. அவர்களுடைய மனதைச் சம நிலையில் வைத்துக்கொள்ளும் பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்படாததே முக்கிய காரணமெனலாம். வருங்காலத்தைப் பற்றிப் பற்பல கனவுகளும் கற்பனைகளும் இவர்கள் மனதில் உருவாகும் காலகட்டத்தில் சரிவர அவர்களுக்கு அறிவு ஊட்டத் தவறிவிட்டால் வருங்காலத்தில் ஏற்படும். அதீதமான கலவரங்களுக்கு வித்திட்டதாக ஆகும். விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வெகுவேகமாக முன்னேறிவரும் இக்காலத்தில்நமது பாலவிகாஸ் குழந்தைகள் மனிதகுல மேன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்க வேண்டுமெனும் உறுதி நம்மிடையே தோன்ற வேண்டும்.

ஆகவே இந்தப்பயிற்சி முகாமில் எண்ணம்,மூச்சு, காலம் மூன்றையும் பராமரிக்கும் முறை பற்றிய ஆய்வு தேவையாகிறது. இது யாருக்குப் போதிக்கப்பட வேண்டுமெனில்,

  1. சாயிபக்தர்கள் முதலில் பகவானின் போதனையை நன்றாகப் புரிந்து தங்கள் கடமையைப் பெற்றோர்கள் என்ற முறையில் ஆற்றவும், பொறுப்பை உணர்ந்து செயல்படவும்,
  2. பகவானின் நிறுவனத்தைச் சாராதவர்கள் அவர்கள் குழந்தைகளைப் பாலவிகாஸ் பிரிவில் சேர்த்திருக்கலாம். அவர்கள் பகவானைப்பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாதிருக்கலாம். அவர்களுக்குப் பகவானின் வாழ்க்கை வரலாற்றையும் மனிதசமுதாயத்தின் நல்வாழ்விற்கு அவர் ஆற்றிவரும் அரியபணிகளையும் போதனைகளையும் எடுத்துரைக்கவும்,
  3. தற்கால விஞ்ஞான முன்னேற்றத்திற்கேற்ற வகையில் தக்க உதாரணங்களுடன் அதாவது இப்போதைய மனிதர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பகவான் பாபா பராமரிப்பு வழிமுறைகளைப் பற்றி வெளியிடும் அரிய கருத்துக்களை எல்லோருக்கும் எடுத்துரைக்கும் பணியையும் சாயிபக்தர்கள் என்ற முறையிலும்,பயிற்சியளிப்பவர்கள் என்ற முறையிலும் சாயி நிறுவனத்தைச்சார்ந்தவர்கள் என்ற முறையிலும் செய்திட வேண்டும்.

பாபாவைப் பற்றி நம்மை விளக்கும்படி கூறினால், கண்டிப்பாக “பகவான் பாபா மனிதகுல மேன்மைக்காகவே பாடுபடுகிறார்” என்பதே நமது ஏகோபித்த கூற்றாக இருக்கும்.(Excellence) ‘மேன்மை’ என்றால் பகவான் பாபா செய்திடும் ஒவ்வொரு பணியிலும், அவரது நடைமுறையிலும் , சொல்லிலும் அதைவிடச் சிறப்பாக அல்லது மேலாக எவராலும் செய்ய முடியாது என்பதே. “ என் வாழ்க்கையே எனது செய்தி அல்லது உபதேசம்” என்கிறார் பாபா. நாம் ‘மேன்மை’ என்றால் மற்றோருடன் நம்மை ஒப்பிட்டு அவரைவிட நான் மேல் என்றவகையில் தான் புரிந்துகொள்வோம். ஆனால் பாபா மேன்மையைப்பற்றிக் குறிப்பிடும் போது நம்முடைய சொந்த சாதனைகளையும் செயல்களையும் நமக்கு நாமே ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமென்பார். அதாவது காலையில் நான் எப்படி இருந்தேன். மீண்டும் மாலையில் எப்படிச் செயலாற்றினேன் என்பதேமுக்கியமாகும். காலத்தை வீணாக்காமல் நல்லசெயல் செய்திருந்தால் அதுவே சிறந்தது என கருதப்பட வேண்டும். ‘மேன்மை’ என்பது ஏதோ சில செயற்கரிய செயல்களைச் செய்வது அல்ல. சாதாரண செயல்களையே தனிச்சிறப்புடன் அசாதாரண நல்ல முறையில் செய்தலேயாகும்.

விவேகானந்தர் கூட இந்தக் கருத்தையே மிக அழகாக “ஒளிவீசும் வண்ண விளக்குகளின் மாயாஜாலத்தில் நாடகமேடையில் ஒரு முட்டாள் கூட சிறப்பாகப் பிரகாசிக்கக்கூடும்” என்றுகூறுவார். சின்னஞ்சிறு சாதாரண செயல்களிலே தான் ஒருவருடைய மேன்மை கணிக்கப்பட வேண்டும். சிறு விஷயங்களை நாம் கவனத்துடன் செய்துவந்தால் பெரிய விஷயங்கள் தாமாகவே சரியாக அமைந்துவிடும். இந்தக் கருத்தையே பாலவிகாஸ் அமைப்பில் சரியான முறையில் புகுத்த வேண்டும்.

நாம் இதுவரை பாலவிகாஸ் “பிரி சேவாதள்” பிரிவினரை சரியானபடி நமது நிறுவனத்தில் முக்கிய பங்கேற்கச் செய்யத் தவறிவிட்டோம். மேன்மைக்கான பொறியைத் தூண்டி விடுவதில் நாம் பின்தங்கி விட்டோம். உலக வாழ்க்கையிலும் ஆன்மிக வாழ்க்கையிலும் பகவானின் இந்த அரிய உபதேசத்தைப்பின்பற்றினால் மேன்மை பெறலாம்.

ஒரே ஒரு பணியை மேலும் நூறு சதவிகிதம் (100%) மேலானமுறையில் செய்வதைவிட நூறு பணிகளை 1 சதவிகிதம் (1%) மேலாகச் செய்வது சாலச்சிறந்தது. கலைஞராயினும்,விஞ்ஞானியாயினும் மற்ற எந்தத் துறையினராயினும் அவர்களுக்கு இது பொருந்தும்,

உலகில் ஒவ்வொருவரும் வெற்றியையும் ஆனந்தத்தையும் கோருகின்றனர். அதற்கான முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். இதை அடையும் இரகசியம் என்ன? நாமே நம்மால் இயலாதென்று எண்ணியதையும் பிறரும் அசாத்தியம் என்று எண்ணியதையும் பகவானின் அருளால் சாதிக்க முடிவதே இந்த இரகசியம். ஒரே தூரத்திலுள்ள ஒரு இடத்தை அடைய ஒரே ஆகாய விமானம் சிலநாட்கள் மிகத் துரிதமாகவும் சில நாட்கள் தாமதமாகவும் சென்றடைகிறது. இதற்குக் காரணம் பல்வேறு உண்டு. குறிப்பாக,காற்று அடிக்கும் திசை சாதகமாக இருப்பின் துரிதமாகச் செல்ல முடிகிறது. சூழ்நிலை சரியில்லாமல் வானிலையில் கொந்தளிப்பு‌ இருந்தால் தாமதமாகிறது. அதேபோல் ‘மனிதனின் முயற்சிக்கு பகவானின் அருள்’ என்பது சாதகமான காற்றைப் போன்றது.

மனித வாழ்க்கையில் அத்தியாவசியமான தேவை மூன்று உள்ளன. இவையன்றி மனிதன் உயிர்வாழ முடியாது. அவை முறையே

  1. மூச்சு: மூச்சுவிடுதல் நின்று விட்டால் மனிதனின்வாழ்க்கை முடிந்து விடுகிறது
  2. மூச்சுக் காற்றை உள்ளிழுத்துவெளியே அனுப்பிக் கொண்டிருக்கும் வரை மனிதனின் மனதில் எண்ணங்கள் இருந்து கொண்டிருக்கும். மூளையிலிருந்தே மூச்சுக்காற்று இயக்கப்படுகிறது. மண்டையில் அடிபட்டு இந்தப்பாகம் பழுதடைந்தால் சுவாசம் பாதிக்கப்படுகிறது. சுவாசப்பையை இயக்குவது இந்த மூளையே! மூளையில் எண்ணங்கள் எப்போதும் உதித்துக்கொண்டே இருக்கும்.
  3. நமதுவாழ்க்கையின் அடிப்படையே ‘காலம்’. ‘காலம்’ இல்லையேல் வாழ முடியாது. மடிந்தவரை ‘காலஞ்சென்றார்’ ‘காலமானார்’ என்கிறோம்.

ஒருவருக்குச் செல்வம் , அறிவாற்றல், தொழில்நுட்பம் இவைகள் இருந்தாலும் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். மேற்கூறிய மூன்றும் இன்றி மனிதன் உயிர் வாழ முடியாது. இவற்றைப் பலரும் பல வகைகளில் உபயோகிக்கலாம். அந்த அளவுக்கு இதில் ஒருவருக்கொருவர் மாறுபடலாமேயன்றி எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இவற்றை உபயோகித்தே தீரவேண்டும். வாழ்க்கை மேன்மையானதாக அமையவேண்டுமாயின் இவற்றை நல்ல முறையில் பராமரித்தல் வேண்டும். மூச்சு, எண்ணம், காலம் ஆகிய மூன்றையும் நல்ல முறையில் பராமரித்தால் வாழ்க்கையில் வெற்றியும் சுகமும் ஆனந்தமும் அடையலாம். இதுவே பகவானின் எளிய உபதேசம். பராமரித்தல் (Management) என்பது ஒரு பொருளையோ ஒரு திறனையோ, ஆற்றலையோ, சக்தியையோ எப்படி முழு அளவில் உபயோகப்படும் படியாகச் செய்வது என்பதே. மூச்சு, எண்ணம்,காலம் இந்த மூன்றையும் நன்கு பராமரிப்பதால் முழுமேன்மையை எட்ட முடியுமென்பதே பகவானின் வாக்கு. இதை எப்படிச் செயலாக்குவது என்பதைப் பார்ப்போம்.

[/vc_column_text][/vc_column][/vc_row]