- Sri Sathya Sai Balvikas - https://sssbalvikas.in/ta/ -

சுற்றி விளையாடு

Print Friendly, PDF & Email [1]
[vc_row][vc_column el_class=”ta-baloo-thambi2″][vc_column_text el_class=”ta-baloo-thambi2″]

வட்ட விளையாட்டுகள், குழந்தைகள், தங்கள் ஆற்றலை ஒரு அர்த்தமுள்ள வழியில் செலுத்துவதற்கும், அவர்களின் சகக் குழுவுடன் திறம்பட தொடர்பு கொள்வதற்கும் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகின்றன.

குழந்தைகளை சமுதாயத்தில் மற்றவர்களுடன் பழகச்செய்வதன் மூலம் அவர்களின் முழுமையான பன்முக வளர்ச்சியினை இவ்விளையாட்டுகள் வளர்க்கின்றன.

இதன் மூலம் அவர்களின் கூச்சம், தடை, தயக்கம் ஆகியவை வெற்றி கொள்ளப் படுகின்றன. மேலும் இவ்விளையாட்டுகள் குழந்தைகளின் கேட்கும் திறன் மற்றும் தகவல் தொடர்பு திறன்களை வளர்த்து ஒருங்கிணைப்பு, ஒத்திசைவு, சாமார்த்தியம், சுறுசுறுப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் மொத்த பெருந்தசை இயக்கத்திறன்களை மேம்படுத்த உதவுகின்றன. இவ்விளையாட்டுகள் மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதற்கு கற்றுக் கொடுக்கின்றன.மேலும், வாழ்வியல் சூழல்களை திறமையாக சமாளிக்கத் தேவையான சமுதாயத் திறன்களை அடைய கற்றுக் கொடுக்கின்றன. அவை, புரிதல் உணர்வு, பொறுமை ஆகியவற்றைத்திரும்பத் திரும்ப குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதிய வைக்கின்றன.

வட்ட விளையாட்டுகள் குழு உறுப்பினர்களுக்குள் ஒரு குறிப்பிட்ட அளவிலான நெருக்கத்தை உருவாக்குகின்றன. அவை குருவால் எளிதில் கண்காணிக்க இயலுகிறது. மற்றும், ஒவ்வொரு குழந்தையும் ஒருவரை ஒருவர் பார்க்கவும் கேட்கவும் அவை உதவுகின்றன. இசை அல்லது இசை துடிப்பு விளையாட்டுகள் குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட துடிப்பு அல்லது தாள லயத்துடன் ஒருங்கிணைக்க உதவுகின்றன. அதே நேரத்தில்
மிகுதியான வேடிக்கைகளையும் அவை வழங்குகின்றன. அவை அனைவரும்
சொந்தம் என்ற உணர்வைக்கூட வளர்க்கின்றன.

இவ்வாறாக வட்ட விளையாட்டுகள் குழந்தைகளின் சலிப்பான வழக்கத்திலிருந்து அவர்களுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் உற்சாகத்தை உருவாக்க முனைகின்றன.

[/vc_column_text][/vc_column][/vc_row]