குருமார்கள்

முதல் மூன்று வருடங்கள் – இறுதி வரை இருப்பது

இந்த பருவத்தில் குழந்தைகள் தானாகவே செய்தல், உருவாக்குதல் போன்றவற்றை விரும்புகிறார்கள். “சீக்கிரம் கிளம்பு-நிதானமாகச்செல்; பத்திரமாகச் சென்றடை” என்பது ஸ்வாமியின் தெய்வீக வாக்கு. இதனைக் கருத்தில் கொண்டு குழந்தைகள் ஆறு வயது முதல் இவ்வகுப்புகளில் சேர்க்கப்படுகிறார்கள். மனித மதிப்பீடுகள் குழந்தைகளிடம் ஆழப்பதிந்து தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்ந்து பின்பற்றிடும் வகையில் சிறு வயதிலேயே உயர்வான மதிப்பீடுகள் வித்திடப்படுகின்றன. எனவே பாலவிகாஸ்குரு, படங்கள் மூலமாக விளக்கிக்கூறல் (Pictorial Demonstrations), விளையாட்டுகள் (Games), வரைபடங்கள் (Charts) பலருடன் சோ்ந்துசெயற்படுதல் (group activities), நடித்துக்காட்டல் (Role play), மனோபாவத்தைச் சோதித்தல் (Attitude testing), கூட்டமாகப்பாடுதல் (group singing), கதைகூறல் (story telling) பிரார்த்தனை (prayer), மௌனமாகஉட்கார்ந்திருத்தல் (silent sitting) இவற்றின் மூலமாகக் கற்பிக்க வேண்டுமே தவிர போதிப்பதன் மூலமாகஅல்ல.

இரட்டை இலக்க வயது – செருவூட்டத்திற்கான வயது

தானாகவே செய்தல், திட்டமிடுதல் நிறைந்த பருவம். இந்தப் பருவத்தில் கதைகள், பாட்டுக்கள், குழுவிளையாட்டுகள் இவற்றில் சிறுவா் சிறுமியரின் கவனம் செல்வதில்லை.பிரிவு-1 இல் இடப்பட்ட அடித்தளம் பிரிவு-2 இல் வடிவெடுக்கத் தொடங்குகிறது. மாணவர்களின் கற்பனையும் ஆா்வமும் தூண்டப்பட வேண்டும். அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க ஏதாவது தேவை, ஆகவே 5 உத்திகளும் (Techniques) அவன் தன்மனதின் மேல் ஆதிக்கம் கொள்ள, புலன்களைக் கட்டுப்படுத்த 5D’க்களை வளா்க்க உதவ வேண்டும். இந்நிலையில் எண்ணம், சொல், செயல் இவற்றின் இசைவுக்கான அடித்தளம் இடப்படுகிறது. பாலவிகாஸ்குருவின் கவனம், அவா்களது ஆா்வத்தையும், கற்பனையும் தூண்டும் வகையில் வேறுவிதமாக அமைய வேண்டும்.

பதின்ம பருவம் – சிக்கலான பருவம்

திட்டமிட்டு, சாதனைகள் புரியும் வயது. நிஜவாழ்க்கை சம்பவங்களில் மதிப்பீடுகளை உண்மையாக பயன்படுத்தத் தொடங்கும் பருவமிது.இப்பருவத்தில் மாணவன் தான் கற்றுக்கொண்டதைப் பரீட்சித்துப் பார்க்க ஒருநிலைக்களம் (Practice ground) தேடுகிறான். ஆகவே குரு அவனுக்கு வகுப்பில் கற்றுக்கொண்டதை முகாம்களிலோ (Camp), நிறுவனத்தின் சேவைப்பணிகளிலோ, அல்லது திட்டங்களிலோ (Projects) கருத்தரங்கங்களிலோ (Seminars) பரிட்சித்துப் பார்க்க இடந்தரவேண்டும். மூன்றாம்பிரிவு நிலையில் குரு, தாய்க்கும் ஆசிரியருக்கும் மேலாக நடந்து கொள்ள வேண்டும். அவன் மாணவனுக்கு நண்பராக, அந்தரங்கப்பிரச்சனையைக் கேட்டுக் கொள்பவராக (confidante) இருக்க வேண்டும். குருவின்கவனம், மாணவனின் தேவைகளுக்கு இசைந்தவாறு இருத்தல் வேண்டும்.