அமைதி (சாந்தி)
“மனித உணர்ச்சிகளின் போராட்டங்களையும் குழப்பங்களையும் அமைதியின் அடிப்படையான மனோநிலையில் சீர்படுத்தி அமைத்தலே சாந்தி”என பாபா விளக்கியருளி இருக்கின்றார். ஆசைகளே, மனமென்ற ஏரியின் மேற்பரப்பினில் கொந்தளிப்புகளை உருவாக்கி, ஓய்வற்ற அலைகளை ஏற்படுத்துகின்றன. ஆசைகளிலிருந்து விடுபட்ட மனமானது அமைதி நிலைக்குத் திரும்புகிறது. என்றும் சலனமுறாது, அலைப்புறாது இருக்கும் மனத்தில் தான் ஞானத்தெளிவு பிறக்கும், ஞானத்தெளிவு பெற்ற புத்தி (அறிவுப்பலன்) மூலந்தான் ஒப்பற்ற பேரமைதி (பிரசாந்தி) யினை அடையப்பெற்று, அனுபவிக்க இயலும், இந்த ஒப்பற்ற பேரமைதியே ஆனந்தமாகும்.
சகிப்புத்தன்மை(Forbearance)யினை பொறையினை வளர்த்தல், மனத்தின் நடுநிலையினைத் தாக்கச் செய்யாமல் இன்ப துன்பங்களை ஒரேவிதமாக ஏற்றுக்கடத்தல் ஆன்மசக்தியிலும் இறைவன் எந்தச் சூழ்நிலையிலும் காப்பாற்றவல்லவர் என்பதிலும் அசையாத நம்பிக்கையினை வளர்த்தல், உலகத்தில் பற்றற்று இருத்தலை வளர்த்தல், இறைவனிடம் உள்ள பற்றினை வளர்த்தல், அனுதினமும் இறைவனை தியானித்தல் ஆகிய இம்முயற்சிகளனைத்தும் ஒப்பற்ற அமைதியினை அடைவதற்கு உதவி செய்வனவாகும்.
[/vc_column_text][/vc_column][/vc_row]- [Image]: #