தங்கள் குழந்தைச் செல்வங்களின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், குழந்தைகளின் நன்நடத்தையை உருவாக்கும் பொறுப்பை ஏற்று, மனித ஒருமைப்பாட்டினை வலியுறுத்தும் பாரதத் திருநாட்டின் செழிப்பான பண்பாடு மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தினை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, பெற்றோர்களுக்கு விடுத்த அழைப்புதான், “மனித மேம்பாட்டின் மலர்ச்சி” எனும் பொருள் பொருந்திய ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் ஆகும். இவ்வாறாக, அறநெறிப்படி வாழ்க்கை வாழ்ந்திடுவதற்காக, உலகம் தழுவிய தனிமனித அர்ப்பணிப்பைச் சாத்தியம் ஆக்குவதற்காக, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களால் ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் தோற்றுவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, வாரந்தோறும் ஒரு மணி நேரம் நடத்தப்படும் ஒவ்வொரு பாலவிகாஸ் வகுப்பிலும், எளிமையான, ஆனால் மிகவும் பயன்முனைப்புள்ள, பின்வரும் கற்பித்தல் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன
இந்த விதமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தெய்வீகமான திட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய உயர்மனமாற்றத்தின் சில முக்கிய அம்சங்களே இங்கு தொகுத்து வழங்கப்பட்டுள்ளன, இந்தப் பட்டியல் நிறைவானதல்ல. ஒவ்வொரு குழந்தையினுள்ளும் மனித மதிப்பீடுகளை வளர்க்கவும், அவற்றை தினசரி வாழ்க்கையில் பின்பற்றுவதற்கானத் திறன்களை வளர்க்கவும், அவ்வாறு வளர்ப்பதன் மூலம் தனி மனித இணக்கத்தையும், குடும்ப இணக்கத்தையும், சமுதாயஇணக்கத்தையும், தேசம் தழுவிய இணக்கத்தையும்பேணுவதற்காகச் செயல்படுவதே ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸின் பரந்த குறிக்கோளாகும்.
“ஒரு சிறிய கல்லை ஏரியில் எரியும் போது, அதிர்வலைகள் ஏரி முழுவதிலும் பறந்து செல்கிறது. அது போன்றே நம் மனமாகிற ஏரியில் ஒரு எண்ணம் என்ற கல்லைப் போடும் போது அது எல்லா புலன்களிலும்பரவுகிறது.நல்ல எண்ணம் என்பது வாயை வந்து அடையும்போது, நாம் நல்ல வார்த்தைகளையே பேசுகிறோம். அதுவே கெட்ட எண்ணமானால் நாம் கெட்டசொற்கள் பேசுகிறோம்.நீ எதைப் பார்க்கிறாயோ, கேட்கிறாயோ அல்லது செய்கிறாயோ அது நீ ஏற்றுக்கொள்ளும் எண்ணத்தைப் பொறுத்தது.ஒரு மனிதன் நல்லவனாகவோ அல்லது கெட்டவனாகவோ இருப்பது அவனது எண்ணத்தைப் பொறுத்து அமைகிறது” – பாபா ஆதாரம்:தெய்வீகப் பேருரை -11.10.1998 (சத்திய சாயிப் பேருரைகள் – தொகுதி-31
இன்றைய சமுதாயத்தில் பெரும்பாலான பிரச்சனைகள் இருப்பதற்குக் காரணம், மனித மதிப்பீடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கல்வியின் முன்னேற்றத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவது தான்.இளைஞர்களின் இப்படிப்பட்ட துரதிருஷ்டவசமான நிலையை மாற்றியமைப்பதே ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் திட்டத்தின் உயரிய நோக்கமாகும். பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறை ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் திட்டத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது.ஊடகங்கள் மற்றும் நுகர்வியல் ஆகியவைகளால் ஏற்படும் விளைவுகளால் தம் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களைச் சுட்டிக் காண்பித்து, அவர்களே மனித மதிப்பீடுகளைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தை பெற்றோர்களுக்கு ஸ்ரீ சத்ய சாயி பெற்றோர் பயிற்சித் திட்டம் கோடிட்டுக் காண்பிக்கிறது.ஆகையால், இந்தத் திட்டம் வெற்றியடைவதற்குப் பின்வருவனவற்றை மட்டுமாவது பெற்றோர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறாக ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் திட்டம் குழந்தைகளின் முழுமையான ஒருங்கிணைந்த ஆளுமையை பின்வரும் ஐந்து நிலைகளில் மலரச் செய்கிறது: