கதை : ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்

ஒரு ஒன்பது வயதுச் சிறுவன் ஐஸ்க்ரீம் கடைக்குச் சென்றான். கடை உதவியாளர்: உனக்கு என்ன வேண்டும்? சிறுவன்: ஒரு கோன் ஐஸ் கிரீம் எவ்வளவு ரூபாய்? உதவியாளர் :15 ரூபாய். சிறுவன் தன் பையைச் பரிசோதித்து விட்டு அந்த சிறிய கோன் எவ்வளவு ரூபாய்க்கு என்று கேட்டான். ஆத்திரமடைந்த உதவியாளர் கோபத்துடன் 12 ரூபாய் என்றார். சிறுவன் சிறிய கோன்வாங்கி உண்டுவிட்டு ரூபாய் கொடுத்துவிட்டு சென்றுவிட்டான். அந்த உதவியாளர் சிறுவன் விட்டுச் சென்ற தட்டை எடுத்து சுத்தம் செய்யச் சென்றபோது, காலித் தட்டிர்கடியில் ரூ. 3/- இருந்ததைக் கண்டார். சிறுவன் அவருக்கு டிப்ஸ் வைத்திருக்கிறான் என்றுணர்ந்ததும் அவர் கண்களில் நீர் வழிந்தது. “உன்னிடம் இருப்பதை வைத்து நீ ஒவ்வொருவரையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்” அதுதான் வாழ்க்கை.

விளையாட்டு : பரோபகாரி – நடித்துக்காட்டும் விளையாட்டு

கீழ்க்காணும் வரிகளைப் போன்ற சில வரிகளைத் துண்டுச் சீட்டுகளில் எழுதி ஒரு கூடையில் போடவும். ஒரு குழந்தையை வந்து ஒரு சீட்டு எடுக்கச் சொல்லவும். அதில் எழுதப்பட்டதை நடித்துக் காட்டச் சொல்லவும். மற்றொரு குழந்தையைத் தேர்ந்தெடுத்துப் பரோபகாரியாக செயல்படச் சொல்லவும்.

உதாரணம்
  • எனக்கு நடுக்கமாயிருக்கிறது
  • எனக்குக் கண் பார்வையில்லை.