கதை – அன்பும் காலமும்

ஒரு சமயம், அனைத்து உணர்வுகளும், உணர்ச்சிகளும் தங்கள் விடுமுறை காலத்தை கழிக்க ஒரு கடற்கரை தீவுக்குச் சென்றன. அதனதன் இயல்புக்கேற்ப அனைத்தும் பொழுதை நன்கு கழித்தன. திடீரென ஒரு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அனைவரும் உடனடியாக தீவை காலி செய்து வெளியேற அறிவுறுத்தப்பட்டது.

இந்த அறிவிப்பு திடீரென ஒரு பீதியை கிளப்பியது. எல்லோரும் அவரவர் படகுக்கு விரைந்தனர். பழுதடைந்திருந்த படகுகள் கூட விரைந்து பழுது பார்க்கப்பட்டு பணிக்கு அனுப்பப்பட்டது.

இருப்பினும், அன்பு மட்டும் சீக்கிரம் பறந்து செல்ல விரும்பவில்லை. செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருந்தன ஆனால் மேகம் கருக்க ஆரம்பித்தவுடன். கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டதை உணர்ந்தது. ஐயோ, ஒரு படகு கூட அங்கு இல்லையே. http://demo3.esales.in:8081/ அன்பு நம்பிக்கையுடன் சுற்றுமுற்றும் பார்த்தது.

அப்போதுதான் செல்வவளம் ஒரு ஆடம்பரமான படகில் கடந்து சென்றது.

அன்பு, “செல்வவளமே, என்னை தயவு செய்து உனது படகில் ஏற்றிச்செல்கிறாயா?” என்று கத்தியது.

“முடியாது! என்னுடைய படகு முழுவதும் விலைமதிப்பற்ற பொருட்கள், தங்கம், வெள்ளி ஆகியவைகளால் நிரம்பியுள்ளன. உனக்கு இங்கு இடம் கிடையாது.” என்று பதில் சொல்லியது செல்வவளம்

சிறிது நேரம் கழித்து, ஜம்பம், ஒரு அழகான படகில் வந்தது. மீண்டும் அன்பு, “ஜம்பமே, நான் நிராதரவாக இருக்கிறேன். உதவி தேவைப்படுகிறது. என்னை உன்னுடன் அழைத்துச் செல்.”

ஜம்பம் பெருமையுடன் கூறியது, “முடியாது, உன்னை என்னுடன் அழைத்துச்செல்ல முடியாது. உன் மண் படிந்த கால்களால் என் படகு மண்ணாகி விடும்.”

அடுத்ததாக, துன்பம், சிறிது நேரத்துக்குப் பிறகு, அந்த வழியாகக் கடந்து சென்றது. மீண்டும் அன்பு, உதவி கேட்டது. ஆனால் பிரயோசனமில்லை. “முடியாது, உன்னை என்னுடன் அழைத்துச்செல்ல முடியாது. நான் மிகவும் வருத்தமாக இருக்கிறேன். நான் தனிமையில் இருக்க விழைகிறேன்.” என்று துன்பம் சொல்லியது.

பின்னர், சந்தோஷம் கடந்து சென்றது. சில நிமிடங்கள் கழித்து, அன்பு, மீண்டும் உதவி கோரியது. ஆனால் சந்தோஷம் மிகவும் சந்தோஷமாக இருந்தபடியால், அது சுற்றுப்புறத்தையே பார்க்கவில்லை. யாரைப்பற்றியும் கவலைப்படவுமில்லை. அன்பு நிம்மதியிழந்தது; வெறுப்புற்றது. அதற்குள் யாரோ ஒருவர் கூப்பிட்டார்கள், “அன்பே! வா, நான் உன்னை என்னுடன் அழைத்துப்போகிறேன். அன்பிற்கு அவ்வளவு பெருந்தன்மையுடன் உள்ளது யார் என்று தெரியவில்லையாயினும், படகிற்குள் குதித்தது. ஒரு பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விடுவோம் என்று நிம்மதியடைந்தது

படகை விட்டு இறங்கியவுடன் அன்பு அறிவை சந்தித்தது. குழப்பத்துடன் அன்பு வினவியது, அறிவே! எனக்கு யாரும் உதவி செய்ய முன் வராதபோது என்னை படகில் ஏற்றி உதவி செய்தது யார் என்று உனக்குத் தெரியுமா? அறிவு கூறியது ”ஓ, அதுவா, காலம்தான் அது.

“ஏன் காலம் என்னை நின்று ஏற்றிக்கொண்டு பாதுகாப்புக்குக்கு அழைத்துச் சென்றது.” அன்பு ஆச்சரியப்பட்டது.

அறிவு, ஆழ்ந்த ஞானத்துடன் புன்னகைத்து பதில் கூறியது, ”ஏனென்றால், காலத்திற்குத்தான் உன்னுடைய உயர்வும் திறமையும் தெரியும். அன்பு ஒன்றினால் மட்டுமே இவ்வுலகில் அமைதியையும் ஆனந்தத்தையும் கொண்டு வர முடியும்.”

முக்கியமான செய்தி என்னவென்றால், நாம் செல்வம் படைத்தவர்களாக இருக்கும்போது அன்பை உதாசீனம் செய்கிறோம். நாம் நம்மை முக்கியமானவர்களாக கருதும் போது அன்பை மறக்கிறோம். இன்பத்திலும், துன்பத்திலும் கூட அன்பை மறக்கிறோம். காலத்தினுடன் தான் நாம் அன்பின் முக்கியத்துவத்தை உணர்கிறோம்.