கதை
கர்வம் கொண்ட சிவப்பு ரோஜா

அழகிய வசந்த காலத்தில் ஒருநாள், ஒரு வனப்பகுதியில் ஒரு சிவப்பு ரோஜா மலர்ந்தது. ரோஜாத் தன்னைச் சுற்றிப் பார்த்தது. அருகில் இருந்த தேவதாரு மரம், ” ஆஹா! எவ்வளவு அழகான மலர்?

நானும் அவ்வளவு அழகாக இருக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது” என்றது. மற்றொரு மரம், ” கவலைப் படாதே மரமே. நாம் அனைத்தையும் பெறமுடியாது” என்றது. அந்த ரோஜா திரும்பிப் பார்த்து, ” இந்த வனத்திலேயே நான் தான் மிகவும் அழகான மலர் போலிருக்கிறது” என்றது.

உடனே ஒரு சூரியகாந்திப் பூ தன் மஞ்சள் நிற தலையை உயர்த்தி, ” ஏன் அப்படிச் சொல்லுகிறாய்? இவ்வனத்தில் பல மலர்கள் அழகாக உள்ளன. அவற்றில் நீயும் ஒன்று” என்றது. அதற்கு ரோஜா, ” அனைவரும் என்னையேப் பார்க்கிறார்கள். ரசிக்கிறார்கள். நான் கவனித்தேன்” என்றது. பின்னர் ஒரு கள்ளிச் செடியைப் பார்த்து, ” முட்கள் நிறைந்த அந்த அழகற்றச் செடியைப் பாருங்கள்” என்றது.

அதற்கு அந்த தேவதாரு மரம், ” சிவப்பு ரோஜாவே! என்ன பேச்சு இது? எது அழகு என்று எவரால் கூறமுடியும்? உனக்குக் கூடத்தான் முட்கள் இருக்கின்றன” என்றது.http://demo3.esales.in:8081/

அந்த கர்வம் பிடித்த சிவப்பு ரோஜா தேவதாரு மரத்திடம், ” உன் ரசனை நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். உனக்கு அழகு என்றால் என்னவென்றே தெரியவில்லை . என் முட்களை கள்ளிச் செடியின் முட்களோடு ஒப்பிடக்கூடாது. “எவ்வளவு கர்வம் பிடித்த மலர் இது” என்று மரங்கள் நினைத்தன.

ரோஜா தன் வேர்களை கள்ளிச் செடியில் இருந்து நகர்த்த முயற்சித்தது ஆனால் முடியவில்லை நாட்கள் செல்லச் செல்ல சிவப்பு ரோஜா கள்ளிச் செடியை பார்த்து மனதை வருடும் வகையில் பேச ஆரம்பித்தது இது ஒரு பயனற்ற செடி இதன் அருகில் இருப்பதே எனக்கு பிடிக்கவில்லை என்றெல்லாம் கூறியது.

அந்த கள்ளிச்செடி அதற்காக வருந்த வில்லை மாறாக கடவுள் படைப்பு ஒன்றுக்கு ஒரு காரணம் இருக்கும் என்று ரோஜாவுக்கு அறிவுரை கூறியது

வசந்த காலம் கடந்தது. கோடை துவங்கியது. வனத்தில் வாழ்க்கை மிகவும் கடினம் ஆகியது. சிவப்பு ரோஜா வாடத்துவங்கியது. ஒருநாள் சில சிட்டுக்குருவிகள் கள்ளிச்செடிக்குள் தம் அலகை நுழைத்து விட்டுப் புத்துணர்ச்சியுடன் கிளம்பிச் சென்றதை ரோஜா கண்டது. அது தேவதாரு மரத்திடம், ” அந்தப் பறவைகள் என்ன செய்கின்றன?” என்று கேட்டது. அதற்கு அந்த மரங்கள், ” அவைக் கள்ளிச் செடியடமிருந்துத் தண்ணீர் பெற்றுச் செல்கின்றன” என்று விளக்கம் கூறின. ” அவைத் துளையடும்போதுக் கள்ளிக்கு வலிக்காதா?” எனறது ரோஜா. ஆமாம். ஆனால் பறவைகள் துனபுறுவதைக் கள்ளிச் செடி விரும்பவில்லை” என்றது அம்மரம். ரோஜா, கண்களை விரித்துக்கொண்டு,” என்ன, கள்ளியிடம் தண்ணீர் இருக்கிறதா?” என்று ஆச்சர்யமாக் கேட்டது. ஆம். நீ கூட நீர் அருந்தலாம். நீ கள்ளிச் செடியிடம் உதவி கேட்டால, சிட்டுக்குருவிகள் நீர் எடுத்து வந்து கொடுக்கும்” என்றது மரம். சிவப்பு ரோஜாவிற்குக் கள்ளிச் செடியிடம் உதவி கேட்க வெட்கமாக இருந்தது. ஆனாலும், இறுதியில் உதவி கேட்டது. கள்ளி அன்புடன் ஒப்புக்கொண்டது. பறவைகள் தம் அலகில் நீர் நிரப்பி வந்து ரோஜாச் செடியின் வேர்களுக்கு நீர் ஊற்றின. இதன் மூலம் ரோஜா ஒரு நல்ல பாடம் கற்றது. மேலும் அதன்பிறகு, தோற்றத்தை வைத்து எவரையும் மதிப்பிடுவதில்லை.