கதை : ஒரு மாபெரும் கார் பந்தயம்.

ஒரு ஊரில் ஒரு வகையான வித்தியாசமான கார் ஒன்று இருந்தது. கிராமப் புறங்களில் ஓட்டப்பட்டுக் கொண்டிருந்தது. அது ஓடுவதற்கு நெடுஞ்சாலைகளோ, பெட்ரோலோ தேவைப்படாது. ஏனெனில் அதை ஓட்டுவதற்கு நல்ல எண்ணங்களும் நற்குணங்களுமே தேவை. இதுதான் அந்த கிராம மக்களின் கண்டுபிடிப்பு.

அந்த கார்கள் சில நாட்களில் பிரலமானது. அந்தக் காரில் பந்தயம் வைப்பது அனைவருக்கும் சிறந்த ஒரு ஓய்வு நேர விளையாட்டாக இருந்தது. அந்த காரை ஓட்டுவது, அவ்வூரில் இருந்த ஒவ்வாரு சிறுவனின் கனவாக இருந்தது. அவர்களது குறைந்த எடையும், நேர்மையான உழைப்பு மற்றும் நல்லொழுக்கமும் அவர்களை நல்ல ஒட்டுனராக மாற்றியது. அப்படி நல்ல மனமுள்ள குழந்தைகளைக் கண்டு பிடிப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஏனென்றால் அந்த பந்தயம் முடியும் வரை அவர்களால் நல்ல எண்ணங்களின் மேல் கவனம் செலுத்தமுடியவில்லை. அங்கே அடிக்கடி பல திறமைகளை வெளிப்படுத்தும் போட்டிகள் நடத்தப்பட்டன. அவ்வப்போது ஒவ்வொரு பையனுக்கும் அவனது தனித்திறமையை வெளிக்காட்ட ஒரு நல்ல வாய்ப்பு அந்த மாபெரும் காரினால் அமைந்தது.

ஒரு நாள் அந்த தேர்வுக்குழு “நிக்கி” என்ற சிறுவன் வாழும் ஒரு சிறு கிராமத்திற்குச் சென்றது. நிக்கி ஒரு நல்ல பையன் மற்றவர்களைப் போல அவனும் அன்று இரவு தூங்கவில்லை. வரிசையில் நிற்கும்போது தனது நற்குணங்களைப் பயிற்சி செய்து கொண்டிருந்தான். அனைவரும் தங்களது முறை வரும் வரை காத்திருந்தனர். அந்த கதவு திறந்தவுடன் ஒவ்வாருவரும் உள்ளே செல்வதற்கு முந்தியடித்துக் கொண்டனர். இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் ஒருவர் கூட நல்லவர் இல்லை என்று தெரிகிறது. ஆனால் அந்த போட்டி நடத்துபவர்கள் இதை எதிர்பார்த்தனர். சில எளிமையான போட்டிகளின் மூலம் நல்ல குணமுடைய குழந்தைகளைக் கண்டுபிடித்தனர். அந்த எளிமையான போட்டிகளில் மிட்டாய் கொடுத்ததற்கு நன்றி கூறுவது, அந்த போட்டியை துவங்குவதற்கான உதவிகள் செய்வது போன்றவை இருந்தது. இந்த எளிய போட்டிகளில் மிகவும் சில குழந்தைகள் மட்டுமே தேறினர். அதில் நிக்கியும் ஒருவன். அந்த குழந்தைகளுக்கு அந்த காரை ஓட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. நிக்கி அனைவரது ஓட்டும் திறமையையும் கண்டு மகிழ்ந்தான். அவனது வாய்ப்பு வரும் வரை பொறுமையாகக் காத்திருந்தான். கடைசியாக அவனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ஒரு கால் நடக்கமுடியாத சிறுவன் ஒருவன் அவனுக்குப் பிறகு பந்தயத்தில் இருந்ததைக் கவனித்தான். அந்த சிறுவனிடம்,போட்டி நடத்துபவர்கள், “ஒரே ஒரு கார் தான் இருக்கிறது. அதனால் உனக்கு வேறொரு நாள் வாய்ப்பு கிடைக்கும்” என்று கூறினர். அதைக் கேட்ட நிக்கி மனமிரங்கி விட்டுக் கொடுத்தான். அவன் அந்த காரை விட்டு இறங்கியதும் அந்த கார் எப்போதும் போல் இல்லாமல் சத்தம் போட்டது. நிக்கி அந்த காரின் சத்தத்தால் மகிழ்ச்சியடைந்தாலும் அதனை ஓட்ட முடியவில்லையென்று வருத்தமடைந்தான். அதை கவனித்த அந்த பையன் நிக்கியையும் தன்னுடன் வருமாறு அழைத்தான். இருவரது நற்குணங்களால் அந்த கார் மிகவும் வேகமாக சென்றது. அதன் பிறகு அவர்கள் நல்ல நண்பர்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இருந்தனர். அவர்கள் கலந்துகொண்ட அனைத்து போட்டிகளிலும் வென்றனர்.