தாமஸ் ஆல்வா எடிசன், இறைவன் அருள் பெற்ற ஒரு குழந்தை. பிறரிடம் கேள்விகள் கேட்டும், மேலும் சுயமாக சோதனைகள் செய்தும், தம்மைச் சுற்றியுள்ள பொருட்களை பற்றி எப்படி எதற்கு என்றறியும் ஆவல் உடையவர். அவர் என்ன செய்ய விரும்புகிறார் என்று எவராலும் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. ஆனால் அவரது பொறுமை மற்றும் சுய முயற்சி அவரை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றது. அதன் மூலம் சிறந்த கண்டுபிடிப்பாளர் என்ற புகழை அடைந்தார். ஒருநாள் குழந்தை தாமஸ் ஆல்வா எடிசன் பள்ளியில் இருந்து அழுது கொண்டே வீட்டிற்கு வந்தான். அவன் அம்மாவிடம் ஒரு காகிதத்தைக் கொடுத்து படிக்கச் சொன்னான். “இந்தக் காகிதத்தை என் ஆசிரியர் தங்களிடம் மட்டுமே கொடுக்கச் சொன்னார்” என்றான். அந்த காகிதத்தில் அவன் பள்ளிக்கு வரக்கூடாது என்றும் அவன் தேவையில்லாத கேள்விகளைக் கேட்டு ஆசிரியர்களை தொந்தரவு செய்வதாகவும், அவன் ஒரு முட்டாள் என்றும் எழுதியிருந்தது. குழந்தை தாமஸ் ஆல்வா எடிசன் முட்டாள் என்று முத்திரை குத்தப்பட்டான். ஆனால் அவனுடைய அம்மா அதைப் பற்றி கவலைப்படவில்லை. http://demo3.esales.in:8081/ அவள் கண்ணீர் வழிய அந்தக் காகிதத்தில் இருந்ததை படித்தவுடன் அவள் பையனிடம் சத்தமாக “தங்கள் குழந்தை படிக்க ஒருவேளை இந்தப் பள்ளி மிகவும் சிறியது, இதில் அவனுக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு போதிய நல்ல ஆசிரியர்கள் இல்லை. எனவே, நீங்களே அவனுக்கு கற்றுத்தாருங்கள்” என்று எழுதி உள்ளதாகக் கூறினாள். மேலும் அவள் அவனை சமாதானப்படுத்தி விட்டு “மகனே அழாதே. நான் தான் இனி உன்னுடைய ஆசிரியர்” என்றாள். அவள் மகன் முட்டாள் அல்ல எனவும் அவனை சுற்றியுள்ள பொருட்களை பற்றி அறியவே அவன் பல கேள்விகளை கேட்கிறான் என்றும் அவள் அறிவாள். ஒரு முறை சில முட்டைகளில் கோழி அமர்வது போல் அமர்ந்து அது குஞ்சு பொரிக்கும் என்று நினைத்தான். ஆனால் அந்த முட்டை குஞ்சுகள் பொரிக்காமல் உடைந்து போனதை நினைத்து பார்த்தான். மற்றொரு முறை நெருப்பின் சக்தியை பற்றி அறிந்து கொள்ள நெருப்பினை உருவாக்கினான். ஒருமுறை சில புழுக்களை நசுக்கி பாலில் கலந்து குடிக்க செய்தான் குழந்தை எடிசன் பறவைகள் புழு, பூச்சிகளை உண்பதால் தான் பறக்கின்றது என நினைத்து அவன் வேலைக்காரிக்கு பாலில் அரைத்த புழுக்களை கலந்து குடிக்கச் செய்வதனால் அவளும் பறவைகளைப் போல கைகளை விரித்து பறக்கத் துவங்கி விடுவாள் என்று நினைத்தான்.

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் மோசமானதாக இருந்தாலும் குழந்தை எடிசனின் அனைத்தையும் அறியும் ஆர்வமும், ஒவ்வொரு விஷயமும் எப்படி நடந்தது, ஏன் நடந்தது என்று சிந்தித்தறியும் திறனும் வெளிப்பட்டது. மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம், கடுமையாக ஆராய்ச்சி செய்தான். சக மாணவர்களால் முட்டாள் என்றும் சமுதாயத்தால் கனவு காண்பவன் என்றும் அழைக்கப்பட்ட இதே சிறுவன்தான், இன்று ஒரு சிறந்த விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசனாக ஆனான். பல வருடங்கள் கழித்து அவருடைய அம்மா இறந்த பிறகு அந்த நூற்றாண்டின் மிகப்பெரிய விஞ்ஞானியான எடிசன் ஒரு நாள் பழைய பொருட்களை பார்த்துக்கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு மடிக்கப்பட்ட காகிதம் ஒரு மூலையில் இருந்ததை பார்த்து அதை எடுத்து பிரித்துப் படித்தார். எடிசன் ரொம்ப நேரமாக அழுது விட்டு அவர் டைரியில் எழுதினார்.