தாமரை
தாமரை
அன்புள்ள குழந்தைகளே! நீங்கள் ஒரு குளத்தின் அருகே நடந்து செல்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அருகில் ஒரு கோவில் உள்ளது. குளத்தில் எத்தனையோ தாமரை மலர்களைப் பார்க்கிறீர்கள். லக்ஷ்மி தேவிக்கு தாமரை மிகவும் பிரியமானது. தாமரை இளஞ்சிவப்பு நிறத்தில் உள்ளது. தாமரை நமது தேசிய மலர் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
உங்கள் இதயம் தாமரை மலர் போன்றது, மிகவும் மென்மையாக இருக்கிறது. தாமரை சூரியனைப் பார்க்கும்போது அதன் இதழ்களை ஒவ்வொன்றாகத் திறக்கிறது. அதுபோல நாமும் கடவுளிடம் இதயத்தைத் திறக்க வேண்டும். இது பற்றின்மை மற்றும் தூய்மையின் பாடத்தையும் நமக்குக் கற்பிக்கிறது. குளத்தில் தண்ணீர் தேங்கினாலும், அங்கேயும் தாமரைப் பூ நன்றாக பூக்கும். இது அதன் தண்டுக்கு அடியில் இருக்கும் சேற்றால் பாதிக்கப்படாமல், சுத்தமாகவும் புதியதாகவும் வெளிப்படுகிறது. எனவே நல்லதாகவும் தூய்மையாகவும் இருப்பதற்கு சுற்றுப்புறம் முக்கியமில்லை. தாமரை இலையில் நீர்த்துளி ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்வதைக் காணலாம். இது நமக்கு நெருக்கமாக ஆனால் விலகி இருத்தல் ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்கிறது.
நாம் நல்லவர்களாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும், நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் மகிழ்ச்சியைப் பரப்ப வேண்டும்.
சூரியனைப் பார்த்தவுடன் தாமரை மலர் திறக்கிறது. தாமரை மலர் போல் இருந்து, உங்கள் இதயத்தை கடவுளிடம் திறக்கவும்.
செயற்பாடு:
குரு குழந்தைகளிடம், கற்பனை செய்த சித்திரத்தை வரையச் சொல்ல வேண்டும்.
[ஆதாரம் : Early Steps to Self Discovery Step – 2, Institute of Sathya Sai Education (India), Dharmakshetra, Mumbai.மொழி பெயர்க்கப்பட்டது]