ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ்

ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ், உலகளாவிய அளவில் ஒரு தனிமனிதன் ஒழுக்கமான வாழ்க்கையில் முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களால் தொடங்கப்பட்ட திட்டமாகும். பகவான் கூறுகிறார், ”நீ உறுதியாக இருப்பதற்குப் படிக்கிறாய். உன் மனதில் உள்ள தெய்வீக அன்பு நிலையாக இருக்கிறதா என்பதில் கவனமாக இரு. நீ கற்கும் கல்வி ஏட்டறிவாக மட்டும் அல்லாமல் உனது வாழ்க்கையில் செயல்படுத்தப்படுவதாகவும் இருக்க வேண்டும். பறவைகளும் மிருகங்களும் கல்வி அறிவு இல்லாமல் வாழ்க்கை நடத்துகின்றன. ஆனால் உன் கல்வி அறிவு ஒரு உறுதியான நல்லொழுக்கத்தை உன்னுள் வளா்க்கக் கூடியதாக அமைய வேண்டும்.”

ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ், பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களால் ‘கல்வியின் முடிவு நல்லொழுக்கமே’ என்ற தெய்வீகக் கருத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

பாலவிகாஸ் என்ற சொல் ‘குழந்தையின் ஆளுமைத் திறமைகள் மலர்ந்து விரிவடைதல் வேண்டும்’ என்பதைக் குறிக்கிறது. மனித மதிப்பீடுகள், பாடப்புத்தகங்கள் மூலமாகவோ பரிசுகள் பெறுவதாலோ கிரஹித்துக் கொள்ள முடியாது. அது ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இயற்கையாய் அமைந்த ஒன்றாகும். இந்த உள்ளுறையும் மனித மதிப்புக்கள் மலர ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் சரியான சூழலை ஏற்படுத்துகிறது. இக்கல்வி, ஒவ்வொரு குழந்தையின் உள்ளிருக்கும் தெய்வீக சக்தியைப் பயன்படுத்துவதற்கும் மற்றும் உள்மறைந்திருக்கும் மனித மேம்பாடுகளை வெளிக்கொண்டு வருவதற்கும் தேவையான திறமைகளை வளர்ப்பதற்கு உதவிசெய்கிறது.

ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் உள்ளார்ந்த மாற்றத்தைக் கொண்டு வருவதுதான், இது போன்ற பாலவிகாஸ் வகுப்புக்கள் நடத்தப்படுவதன் நோக்கம் ஆகும். உலகளாவிய நோக்கம் கொண்ட ஸ்ரீ சத்ய சாயி நிறுவனத்தின் பல பணிகளில் ஒன்றான இக்கல்விப்பணி (பாலவிகாஸ் வகுப்புகள்) குழந்தைகளுக்கு ஆன்மீகத் தேடல் மற்றும் ஆத்ம விசாரம் கூடிய பாதையில் நடந்து செல்ல பயிற்சி அளிக்கிறது. இன்றைய குழந்தைகள் நாளைய சமுதாயத்தின் வழிகாட்டிகள் அல்லவா!

இத்தகைய உறுதியான கருத்துக்களை அடித்தளமாகக் கொண்டு குழந்தைகளுக்கு, அடிப்படை மனித மேம்பாடுகளான சத்யம், தா்மம், சாந்தி, பிரேமை, அகிம்சைஆகிய பண்பாடுகளைப் பழக்கத்தில் கொண்டு வருவதற்காக ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரார்த்தனை, குழுப்பாடல், தியானம், கதை சொல்லுதல் மற்றும் குழுசெயல்பாடுகள் போன்ற உத்திகளை பாலவிகாஸ் குருமார்கள் விவேகத்துடன் பயன்படுத்தி, குழுந்தைகளுக்குள் மறைந்துள்ள திறமைகள் பற்றி அவர்கள் அறிந்து கொள்ளவும், மனித மேம்பாடுகளுடன் கூடிய வாழ்க்கைப் பாதையில் அவர்கள் செல்லவும் ஊக்குவிக்கிறார்கள். இதுவே ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் திட்டத்தின் சாராம்சம் ஆகும்.

புதியது என்ன

இன்றைய சிந்தனைக்கு

கொடுப்பதும் மன்னிப்பதும் அன்பு பெறுவதும் மறப்பதும் சுயநலம்

அறிவிப்புகள்

எளிதில் அணுக

சுவரொட்டிகள்

#iguru_dlh_66e4d2683e216 .dlh_subtitle {color: #114c56;}#iguru_dlh_66e4d2683e9f2 .dlh_subtitle {color: #114c56;}#iguru_dlh_66e4d26847c9a .dlh_subtitle {color: #114c56;}#blog_module_66e4d2684faa8.blog-posts .blog-post_title, #blog_module_66e4d2684faa8.blog-posts .blog-post_title a { font-size:19px; line-height:32px; font-weight:700; }@media only screen and (max-width: 480px){ #iguru_spacer_66e4d26851473 .spacing_size{ display: none; } #iguru_spacer_66e4d26851473 .spacing_size-mobile{ display: block; } }#iguru_carousel_66e4d26851bfc.pagination_circle .slick-dots li button, #iguru_carousel_66e4d26851bfc.pagination_square .slick-dots li button, #iguru_carousel_66e4d26851bfc.pagination_line .slick-dots li button:before { background: #e8e8e8; }#iguru_carousel_66e4d26851bfc.iguru_module_carousel .slick-next, #iguru_carousel_66e4d26851bfc.iguru_module_carousel .slick-prev{ top: 50%; }
error: