heading-logo
ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் - ஒரு கண்ணோட்டம்

தங்கள் குழந்தைச் செல்வங்களின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், குழந்தைகளின் நன்னடத்தையை உருவாக்கும் பொறுப்பை ஏற்று, மனித ஒருமைப்பாட்டினை வலியுறுத்தும் பாரதத் திருநாட்டின் செழிப்பான பண்பாடு மற்றும் ஆன்மீகப் பாரம்பரியத்தினை அவர்களுக்கு எடுத்துரைப்பதற்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, பெற்றோர்களுக்கு விடுத்த அழைப்புதான், “மனித மேம்பாட்டின் மலர்ச்சி” எனும் பொருள் பொருந்திய ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் ஆகும்.

இவ்வாறாக, அறநெறிப்படி வாழ்க்கை வாழ்ந்திடுவதற்காக, உலகம் தழுவிய தனிமனித அர்ப்பணிப்பைச் சாத்தியம் ஆக்குவதற்காக, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களால் ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் தோற்றுவிக்கப்பட்டது. இதனைக் கருத்தில் கொண்டு, வாரந்தோறும் ஒரு மணி நேரம் நடத்தப்படும் ஒவ்வொரு பாலவிகாஸ் வகுப்பிலும், எளிமையான, ஆனால் மிகவும் பயன்முனைப்புள்ள, பின்வரும் கற்பித்தல் முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

பாடத்திட்டத்தின் சிறப்பு

ஐந்திலிருந்து-பதிமூன்று வயது வரையிலான குழந்தைகளுக்கு, மூன்று பிரிவுகளாக, ஒன்பது வருடங்களுக்கு இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அடிப்படை மனித மேம்பாட்டு குணங்களான சத்தியம், தர்மம், சாந்தி, பிரேமை மற்றும் அஹிம்சை ஆகியவற்றைக் குழந்தைகள் கற்று, அவற்றைத் தம் வாழ்க்கையில் பின்பற்றுவதற்கேற்றவாறு இப்பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முதல் பிரிவு: 5-7 வயது

இந்த பருவத்தில் குழந்தைகள் தானாகவே செய்தல், உருவாக்குதல் போன்றவற்றை விரும்புகிறார்கள். “சீக்கிரம் கிளம்பு-நிதானமாகச்செல்; பத்திரமாகச் சென்றடை” என்பது ஸ்வாமியின் தெய்வீக வாக்கு. இதனைக் கருத்தில் கொண்டு குழந்தைகள் ஆறு வயது முதல் இவ்வகுப்புகளில் சேர்க்கப்படுகிறார்கள். மனித நற்பண்புகள் குழந்தைகளிடம் ஆழப்பதிந்து தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைவு கூர்ந்து பின்பற்றிடும் வகையில் சிறு வயதிலேயே உயர்வான குணங்கள் வித்திடப்படுகின்றன. எனவே பாலவிகாஸ் குரு, படங்கள் மூலமாக விளக்கிக்கூறல் (Pictorial Demonstrations), விளையாட்டுகள் (Games), வரைபடங்கள் (Charts) பலருடன் சோ்ந்துசெயற்படுதல் (group activities), நடித்துக்காட்டல் (Role play), மனோபாவத்தைச் சோதித்தல் (Attitude testing), கூட்டமாகப்பாடுதல் (group singing), கதைகூறல் (story telling) பிரார்த்தனை (prayer), மௌனமாக அமர்தல் (silent sitting) இவற்றின் மூலமாகக் கற்பிக்க வேண்டுமே தவிர போதிப்பதன் மூலமாகஅல்ல.

இரண்டாம் பிரிவு: 8 -10 வயது

தானாகவே செய்தல், திட்டமிடுதல் நிறைந்த பருவம். இந்தப் பருவத்தில் கதைகள், பாட்டுக்கள், குழுவிளையாட்டுகள் இவற்றில் சிறுவா் சிறுமியரின் கவனம் செல்வதில்லை.பிரிவு-1 இல் இடப்பட்ட அடித்தளம் பிரிவு-2 இல் வடிவெடுக்கத் தொடங்குகிறது. மாணவர்களின் கற்பனையும் ஆா்வமும் தூண்டப்பட வேண்டும். அவர்கள் ஆழ்ந்து சிந்திக்க ஏதாவது தேவை. ஆகவே, 5 உத்திகளும் (Techniques) அவன் தன்மனதின் மேல் ஆதிக்கம் கொள்ள, புலன்களைக் கட்டுப்படுத்த 5D’க்களை வளா்க்க உதவ வேண்டும். இந்நிலையில் எண்ணம், சொல், செயல் இவற்றின் இசைவுக்கான அடித்தளம் இடப்படுகிறது. பாலவிகாஸ் குருவின் கவனம், அவா்களது ஆா்வத்தையும், கற்பனையையும் தூண்டும் வகையில் வேறுவிதமாக அமைய வேண்டும்.

மூன்றாம் பிரிவு: 11-13 வயது

திட்டமிட்டு, சாதனைகள் புரியும் வயது. நிஜவாழ்க்கை சம்பவங்களில் நற்பண்புகளை உண்மையாகப் பயன்படுத்தத் தொடங்கும் பருவமிது.இப்பருவத்தில் மாணவன் தான் கற்றுக்கொண்டதைப் பரீட்சித்துப் பார்க்க ஒரு பயிற்சிக்களம் (Practice ground) தேடுகிறான். ஆகவே குரு அவனுக்கு வகுப்பில் கற்றுக்கொண்டதை முகாம்களிலோ (Camp), நிறுவனத்தின் சேவைப்பணிகளிலோ, அல்லது திட்டங்களிலோ (Projects) கருத்தரங்கங்களிலோ (Seminars) பரிட்சித்துப் பார்க்க இடந்தரவேண்டும். மூன்றாம்பிரிவு நிலையில் குரு, தாய்க்கும் ஆசிரியருக்கும் மேலாக நடந்து கொள்ள வேண்டும். அவன் மாணவனுக்கு நண்பராக, அந்தரங்கப்பிரச்சனையைக் கேட்டுக் கொள்பவராக (confidante) இருக்க வேண்டும். குருவின் கவனம், மாணவனின் தேவைகளுக்கு இசைந்தவாறு இருத்தல் வேண்டும்.

Curriculum Highlights
(முதல் மூன்று வருடங்கள் – இறுதி வரை இருப்பது)
  • வெவ்வேறு தெய்வங்கள் மீதான எளிமையான ஸ்லோகங்கள்.
  • நீதிக் கதைகள்.
  • நாமாவளி பஜனைப் பாடல்கள் / நீதி நெறிப் பாடல்கள்.
  • பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் அறிமுகம்
(இரட்டை இலக்க வயது – செருவூட்டதிற்கான வயது)
  • வெவ்வேறு தெய்வங்கள் மீதான எளிமையான ஸ்லோகங்கள் (பகவத் கீதை மற்றும் பஜகோவிந்தத்திலிருந்து சில ஸ்லோகங்கள்)
  • இராமாயணம் மற்றும் மகாபாரதத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில அத்தியாயங்கள்
  • பஜனைப் பாடல்கள் / நீதி நெறிப் பாடல்கள்
  • மஹான்கள் மற்றும் இறைத்தூதர்களின் கதைகள்
  • மதங்களின் ஒற்றுமை
  • பகவான் ஶ்ரீ சத்ய சாய் பாபாவின் வாழ்க்கையும், அருள் நெறிகளும்.
(பதின்ம பருவம் சிக்கலான பருவம்)
  • பகவத் கீதையின் உபதேசங்களை தினசரி வாழ்க்கையில் பின்பற்றுதல்.
  • ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் போன்ற சிறந்த ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகள்.
  • பஜனைப் பாடல்கள் / நீதி நெறிப் பாடல்கள் மற்றும் பாரதக் கலாசாரமும் ஆன்மீகமும்
  • ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்களின் மானிட சேவைப் பணிகளைப் பற்றிக் கற்றுக் கொண்டு அச்சேவைப் பணிகளில் ஈடுபடுதல்
மனமாற்றம் சார்ந்ததேயன்றி வெறும் தகவல் சார்ந்ததல்ல
  • ஸ்ரீ ஸத்ய ஸாயி பாலவிகாஸின் இலட்சியமானது தூய மற்றும் தெளிவான மனச்சான்றினையுடைய மாணவத் தலை முறையினை உருவாக்குவதுதான்.
  • இங்கு, அதிகப்படியான தகவல்களைத் திணிப்பதில் கவனம் செலுத்தப்படுவதில்லை. மாறாக, உள் மனமாற்றதிற்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • இதன் தொடர்ச்சியாக, முடிவுகள் முன்னேற்ற அறிக்கை அட்டைகளையோ, மதிப்பீட்டுத் தாள்களையோ சார்ந்து பார்க்கப்படுவதில்லை.மாறாக முடிவுகள் கண்ணுக்கு புலப்படாதவையாக அமைகின்றன. மேலும் அவை குழந்தைகளின் அன்றாட நடத்தைகளில் ஏற்படும், அவர்களுக்கு உள்ளேயும் அவர்களைச் சுற்றியும் ஒரு நல்லிணக்கம் ஏற்படுத்தக்கூடிய, குறிப்படத்தக்க மாற்றங்களினால் அறியப்படுகின்றன.
  • ஒரு குழந்தை, முறையாக தொடர்ந்து வாராந்திர பாலவிகாஸ் வகுப்புகளில் தவறாமல் கலந்து கொள்வது என்பது கீழே குறிப்பிட்டபடி இயல்பான நடத்தை மாற்றங்கள், மற்றும் அணுகுமுறைப் பிரதிபலிப்புகள் ஆகியவற்றை அக்குழந்தையிடம் உருவாக்கும்.
முதல் பிரிவின் இறுதியில் குழந்தைகள் கற்றுக்கொள்பவை
  • புற ஒழுக்க நெறிகளான உடைக்கட்டுப்பாடு, சிறுவர்-சிறுமியர் வகுப்பில் தனித்தனியாக அமர்தல், வகுப்பறைக்கு வெளியே காலணிகளை ஒழுங்குபடுத்தி வைத்தல்
  • இதே ஒழுக்க நெறிகளை, வீடு மற்றும் பிற வகுப்புகள் போன்ற மற்ற இடங்களிலும் கடைபிடித்தல்
  • பெற்றோர்களின் மேல் மரியாதை
  • பிரார்த்தனைகள் மூலமாக நாள் முழுவதும் கடவுள் சிந்தனை கொள்ளுதல் (காலை / உணவருந்தும் முன் / இரவு)
  • பகிர்ந்து கொள்ளுதல், அக்கறை காட்டுதல் போன்ற நல்ல பண்புகளைப் பெறுதல் மற்றும்
  • கடவுள் ஒருவரே உண்மையான நண்பர் என்பதை ஏற்றுக்கொள்ளுதல்
இரண்டாம் பிரிவின் இறுதியில் குழந்தைகள் கற்றுக்கொள்பவை
  • பகவத் கீதையின் உபதேசங்களை தினசரி வாழ்க்கையில் பின்பற்றுதல்.
  • பிற மதங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் சடங்குகளைப் பற்றியும் அவர்களின் பண்டிகைகளைப் பற்றியும் கற்று அவற்றைப் போற்றுதல்.
  • மனசாட்சியின் குரலைக் கேட்டு, எது சரி, எது தவறு என்று பகுத்தறிதல்
  • தினசரி வாழ்க்கையில் பின்வரும் 5 ‘க’கரங்களைப் பின்பற்றுதல்- Devotion –கடவுள் பக்தி, Discrimination – கூர்ந்து நோக்கி பகுத்தறிதல்,Discipline- கட்டுப்பாட்டுடன் கூடிய ஒழுக்கம், Determination – கடும் மன உறுதி, Duty – கடமையுணர்வு
  • நம்மை எக்கணமும் பார்த்துக் கொண்டு நமக்கு வழிகாட்டும் கடவுளைத் தன் ஆலோசகராகவும், குருவாகவும் ஏற்றுக் கொள்ளுதல்
மூன்றாம் பிரிவின் இறுதியில் குழந்தைகள் கற்றுக்கொள்பவை
  • சுற்றியுள்ள அனைத்திலும், அனைவரினுள்ளும் தெய்வீகத்தைக் காண்பதற்குக் கற்றுக் கொள்ளுதல்
  • மனித வாழ்க்கையின் சாராம்சத்தையும் குறிக்கோளையும் ஆய்வு செய்தல் (பஜகோவிந்தம் ஸ்லோகங்களை நடைமுறைப்படுத்துதல்)
  • வாழ்க்கையில் மேன்மை அடைய விழைதல் மற்றும் அதனை நோக்கிச் செயல்படுவதற்குத் தேவையான வழிவகைகளைப் பின்பற்றுதல் (பகவத் கீதை ஸ்லோகங்களை நடைமுறைப்படுத்துதல்).
  • தேசப்பற்று கொள்ளுதல், மற்றும் தேசிய முன்னேற்றத்திற்காக முனைதல்; சமூக சேவைப்பணிகளில் ஈடுபடுவதன் மூலம் சமூக உணர்வுகளை தம்முள் பேணுதல்.
  • எண்ணம், மூச்சு மற்றும் நேரம் ஆகியவற்றின் மேல் ஒரு சுயக்கட்டுப்பாடு கொண்டும், பள்ளியிலும், வீட்டிலும், சமுதாயத்திலும் தன் கடமைகளைச் சரிவரச் செய்வதன் மூலமும், தன் ஆளுமைத் திறனை முன்னேற்றுவதற்குத் தேவையான திறன்களைக் கற்றுக் கொள்ளுதல்
  • சிக்கல்களைத் தீர்த்தல் மற்றும் நிர்வாகத் திறன் மற்றும் ஆளுமைத் திறனை வளர்த்துக் கொள்ளுதல்; “வாழ்க்கை ஒரு விளையாட்டு, அதனை விளையாடு” மற்றும் “வாழ்க்கை ஒரு சவால், அதனை எதிர்கொள்” என்பனவற்றின் உட்கருத்தைப் புரிந்து கொண்டு, “அஹம் ப்ரஹ்மாஸ்மி” என்பதில் நிறைவுறும் மஹாவாக்கியங்களின் உட்கருத்தை உள்வாங்கிக் கொள்ள முயற்சி செய்தல்.

மேலே உள்ள சிறப்பம்சங்கள் இந்த கட்டமைக்கப் பட்ட தெய்வீகத்திட்டத்தின் ஒவ்வொரு மட்டத்திலும் குழந்தையிடம் எதிர்பார்க்கும் முக்கிய அம்சங்கள் மட்டுமேயன்றி முழுமையான பட்டியல் அல்ல. எனவே ஸ்ரீஸத்ய ஸாயி பாலவிகாஸின் பரந்துபட்ட குறிக்கோள் என்பது ஒவ்வொரு குழந்தையிடமும்

  • மனித மேம்பாட்டு குணநலன்களை மேம்படுத்துவது,
  • இந்த குணநலன்களை தினந்தோறும் நடைமுறைப் படுத்துவதற்கு தேவையான திறன்களை வளர்ப்பது,
  • அதன் மூலம் தனிமனித, குடும்ப, சமுதாய, மற்றும் தேசீய நல்லிணக்கம் வளர ஊக்குவிப்பது.

ஸ்ரீ ஸத்யஸாயி நிறுவனத்தின் உலகளாவிய பணித்திட்டத்தின் ஒரு அங்கமாக பாலவிகாஸ் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.இவ் வகுப்புகள் இன்றைய குழந்தைகளை சுய விசாரணை மற்றும் சுய கண்டுபிடிப்பு ஆகியவற்றின் பாதையில் நாளைய சமுதாயத்தின் வழிகாட்டும் ஒளி விளக்காக மாறிட வழிகாட்டுகின்றன. எனவே இவ்வகுப்புகள் எந்தவிதமான கட்டணமும் இன்றி இலவச சேவையாக நடத்தப் படுகின்றன.

மேலும் பாலவிகாஸின் ஒன்பது வருட பாடத்திட்ட வகுப்புகளில் ஒழுங்காக தவறாது கலந்து கொண்டு முழுமையாக முடிக்கும் குழந்தைகளுக்கு ஒன்பதாவது வருட முடிவில் “ஸ்ரீ ஸத்ய ஸாயி கல்வி” பட்டையச் சான்று வழங்கப்படுகிறது.

ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் திட்டத்தில் பெற்றோர்களின் பங்கு

இன்றைய சமுதாயத்தில் பெரும்பாலான பிரச்சனைகள் இருப்பதற்குக் காரணம், மனித மேம்பாட்டு குணங்களுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் கல்வியின் முன்னேற்றத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுவது தான். இளைஞர்களின் இப்படிப்பட்ட துரதிருஷ்டவசமான நிலையை மாற்றியமைப்பதே ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் திட்டத்தின் உயரிய நோக்கமாகும். பெற்றோர்களின் குழந்தை வளர்ப்பு முறை ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் திட்டத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது.ஊடகங்கள் மற்றும் நுகர்வியல் ஆகியவைகளால் ஏற்படும் விளைவுகளால் தம் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்களைச் சுட்டிக் காண்பித்து, அவர்களே நற்பண்புகளைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பெற்றோர்களுக்கு ஸ்ரீ சத்ய சாயி பெற்றோர் பயிற்சித் திட்டம் கோடிட்டுக் காண்பிக்கிறது. ஆகையால், இந்தத் திட்டம் வெற்றியடைவதற்குப் பின்வருவனவற்றை மட்டுமாவது பெற்றோர்கள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும்.

  • இந்த 9 வருட திட்டத்தில் முழு ஈடுபாட்டுடன் இருப்பது
  • குழந்தைகளை வகுப்பிற்குத் தவறாமல், நேரம் தவறாமல் பங்குகொள்ள வைப்பது
  • நற்பண்புகளைக் கற்றுக் கொடுக்கும் பாலவிகாஸ் திட்டத்தின் மீது முழு நம்பிக்கை கொள்ளுதல். வீட்டிலும் அப்பண்புகளை பின்பற்றச் செய்தல்.
  • சற்றும் விலையில்லாத (முழு இலவசமான) இந்த சேவைப்பணியின் பெருந்தன்மையைப் புரிந்துகொள்ளல்.
  • குழந்தைகளின் செயல்பாடுகள் பற்றியும் வகுப்புகளைப் பற்றியும் தவறாமல் அடிக்கடி கருத்து தெரிவித்தல்.
  • முன்னேற்றத்தைப் பற்றிக் கலந்தாயப்படும் பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்குகொள்ளல்.
  • குடும்பத்திற்குள் உறவுகள் மேம்படுவதற்கு விழையும் பெற்றோர் பயிற்சித் திட்டத்தில் பங்குகொள்ளல்.
முழுமையான ஒருங்கிணைந்த ஆளுமை மேலாண்மை

இவ்வாறாக ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் திட்டம் குழந்தைகளின் முழுமையான ஒருங்கிணைந்த ஆளுமையைப் பின்வரும் ஐந்து நிலைகளில் மலரச் செய்கிறது:

  • உடல் சார்ந்த நிலை,
  • புத்தி சார்ந்த நிலை,
  • மனம் சார்ந்த நிலை,
  • உள்ளம் சார்ந்த நிலை,
  • ஆன்மீக நிலை.

இது போன்ற பன்முக அணுகுமுறை கொண்ட ஸ்ரீ சத்ய சாயி பாலவிகாஸ் திட்டம் இவ்வாறாக ஒவ்வொரு குழந்தையினுள்ளும், மாணவ-மாணவியினுள்ளும், இளைஞரினுள்ளும் உள்ள மனித மேன்மையை வெளிக்கொணர்ந்து, தாம் ஒவ்வொருவரும் தெய்வீகமானவர்கள் என்பதனை உணரவைத்து, அவர்களுள் புதைந்திருக்கும் மனித மேம்பாட்டு நற்பண்புகளை வெளிக்கொணர்ந்து, அவற்றைத்தம் தினசரி வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த வைக்கின்றது. இதுவே ஸ்ரீ சத்ய சாயி விழுக்கல்வியின் மூலம் பகவான் பாபா அவர்கள் அளிக்கும் உபதேசமாகும்.

ஆகையால் நாம் கைகோர்த்து, சேர்ந்து இதற்காகப் பணி புரிவோம்...

[Image reference: Sai Spiritual Education Teacher’s Manual, USA – 3rd edition, Revision 20211]தமிழில் மொழி பெயர்ப்பு செய்யப்பட்டது

#iguru_dlh_670d8fd4075e6 .dlh_subtitle {color: #114c56;}#iguru_dlh_670d8fd40c3fc .dlh_subtitle {color: #ffa64d;}#iguru_dlh_670d8fd411eb1 .dlh_subtitle {color: #ffa64d;}#iguru_dlh_670d8fd413761 .dlh_subtitle {color: #ffa64d;}#iguru_dlh_670d8fd41d45d .dlh_subtitle {color: #ffa64d;}#iguru_dlh_670d8fd41dcb5 .dlh_subtitle {color: #ffa64d;}#iguru_dlh_670d8fd41e6d1 .dlh_subtitle {color: #ffa64d;}
error: