வனம்
வனத்தில் ஒரு நடைப் பயணம்
குழந்தைகளே, வசதியான நிலையில் உட்காருங்கள். உங்கள் தலை, முகம், கைகள் மற்றும் கீழ் பாதங்கள் வரை, நிம்மதியை, நிதானமாக உணருங்கள். நீங்கள் அமைதியையும் மகிழ்ச்சியையும் உணர்கிறீர்கள். இப்போது நாம் ஒரு வனத்திற்குள் செல்வோம்.
நாம் மென்மையான நடை காலணிகளை அணிந்துள்ளோம். மரங்களுக்கு நடுவே குளிர்ந்த காற்றை சுவாசிக்கிறோம். இங்குள்ள மரங்கள் வானத்தை தொடும் அளவிற்கு மிகவும் உயரமானவை. உதிர்ந்த இலைகளால் பாதை மென்மையாக இருக்கிறது. உயரமான மரங்களின் கிளைகளின் மென்மையான சலசலப்புகளையும், பறவைகளின் கீச்சொலிகளையும் நாம் கேட்கலாம்.ஒரு நல்ல மகிழ்ச்சியான நாளின் தொடக்கத்திற்காக பாடுகிறார்கள் என்று தோன்றுகிறது. காலை சூரியனின் கதிர்கள் மரங்கள் வழியாக தங்கள் வழியைக் கண்டுபிடித்து பாதையில் பிரகாசமான திட்டுகளை உருவாக்குகின்றன; அவை பளபளக்கும் வைரங்களைப் போல பிரகாசிக்கின்றன.
பல வண்ண காட்டு பூக்கள் மிகவும் அழகாக இருக்கிறது. இலைகளின் நறுமணமும் பூக்களின் வாசனையும் மிகவும் புத்துணர்ச்சியூட்டும் வகையில் இருக்கிறது. அணில், முயல் அல்லது பறவைகளை நீங்கள் கவனிக்கிறீர்களா? அவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், காட்டில் அமைதியை அனுபவிக்கிறார்கள். மேலும் காட்டில், நீரோடையின் முணுமுணுப்பு சத்தத்தை கேட்கலாம். தூய்மையான, சுத்தமான மற்றும் ஜொலிக்கும் நீர் கீழே பாய்ந்து ஒரு பாடலை போல இசைத்து அனைத்து பறவைகளையும் விலங்குகளையும் தனது தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள அழைக்கிறது. இது ஒரு சொர்க்கம். இங்கே சிறிது நேரம் ஓய்வெடுத்து, ஆழமாக சுவாசிப்போம்.
இப்போது திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. புதிய நண்பர்கள், பறவைகள் மற்றும் விலங்குகளை சந்திக்க நாங்கள் நிச்சயமாக ஒரு நாள் வருவோம். இப்போது நீங்கள் மீண்டும் அறைக்கு வந்துவிட்டீர்கள். படிப்படியாக உங்கள் கண்களைத் திறக்கவும். காட்டின் புத்துணர்ச்சியையும் அமைதியையும் உணர்கிறோம், நாள் முழுவதும் அதை உங்களுடன் வைத்திருக்கவும்.
செயற்பாடு:
வனத்தில் கண்ட காட்சியை வரையவும்
[ஆதாரம்: Silence to Sai-lens – A Handbook for Children, Parents and Teachers by Chithra Narayan & Gayeetree Ramchurn Samboo MSK – A Institute of Sathya Sai Education – Mauritius Publications]தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது