பணிவாய் இரு

Print Friendly, PDF & Email
பணிவாக இரு
குரு, இடையிடையே நிறுத்தி, மெதுவாகப் படிக்க வேண்டும்.
திமிங்கலங்களின் ஒலிகள் போன்ற நீர் மற்றும் இயற்கை ஒலிகளின் சில இசையை இசைக்கவும்.

மெதுவாக உட்கார்ந்து உங்கள் கால்களைக் மடக்கவும். (குழந்தைகள் அவர்கள் நின்ற இடத்தில் அமர வேண்டும்).

உங்கள் முதுகை நேராக வைத்து உட்காரவும்.

உங்கள் முழங்கால்களில் கைகளை வையுங்கள்.

அனைவரும் ஆழ்ந்த மூச்சை உள்ளிழுக்கவும் பின்பு வெளியே விடவும்.

இந்த முறை, அதையே அமைதியாக முயற்சிப்போம்.

உங்கள் உடலின் ஒவ்வொரு பகுதியையும் அசையாமல் வைத்து, அறை எவ்வளவு அமைதியாக இருக்கிறது என்பதைக் கேளுங்கள்.

நீங்கள் விரும்பினால், கண்களை மூடலாம் (5 வினாடிகள் இடைநிறுத்தவும்)
வகுப்பறைக்கு வெளியே உள்ள ஒலிகளைக் கேளுங்கள்.

மழைத்துளிகள்… காற்று… பறவைகள்… நாய் குரைக்கிறது…

பேசும்போது நீங்கள் பணிவாக இருக்கக்கூடிய வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்…

செயல்கள் செய்யும்போது நீங்கள் பணிவாக இருக்கக்கூடிய வழிகளைப் பற்றி சிந்தியுங்கள்…

மெதுவாக உங்கள் உடலைத் தளர்த்தி, கண்களைத் திறந்துப் புன்னகைக்கவும்.

இப்போது அமைதியாக எழுந்து, நெருங்கி வந்து உட்காருங்கள்.

விவாதம்:
  1. நீங்கள் என்ன சத்தம் கேட்டீர்கள்? என்பதை விவாதிக்கவும்.
  2. நீங்கள் அமைதியாக உட்கார்ந்திருக்கும்போது நீங்கள் என்ன நினைத்தீர்கள்?
  3. எப்படி உணர்ந்தீர்கள்?
  4. நீங்கள் அமைதியான நேரத்தை அனுபவித்திருந்தால் உங்கள் கையை மேலே உயர்த்தவும்.

[ஆதாரம்: தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: