உண்மையே பேசும் திருடன் – நாடகம்
உண்மையே பேசும் திருடன் – நாடகம்
சின்ன கதை புத்தகத்திலிருந்து “ஏதாவது ஒரு தீய வழக்கத்தையாவது விட்டுவிடு” என்ற கதையைச் (கதை கீழே கொடுக்கப்பட்டுள்ளது) சொல்லவும். குழந்தைகளை அந்தப் பாத்திரங்களில் நடித்துக் காட்டச் சொல்லவும்.
கதை – ஒரு தீய பழக்கத்தையாவது விட்டு விடு
ஒரு முறை, தீய நடத்தை உடைய ஒருவன் ஆன்மீக உபதேசம் பெறுவதற்காக மஹாத்மா ஒருவரைத் தரிசிக்கச் சென்றான். மஹாத்மாவிடம் உபதேசம் கேட்ட போது, மஹாத்மா அவனை ஒரே ஒரு தீய பழக்கத்தையாவது விடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அவனும் பொய் சொல்வதை விட்டுவிடுவதாகக் கூறினான். அன்றிரவே, அவன் அரண்மனையில் திருடத் திட்டமிட்டான். அரண்மனையை அடைந்த போது, மேல் தளத்தில் ஒருவர் உலாவிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் தான் அரசர் என்பது திருடனுக்குத் தெரியாது. அவருக்குத் தூக்கம் வராததால் மேல் தளத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அங்கு வந்த திருடனைப் பார்த்து, “நீ யார்?” என்று கேட்க, (திருடன் உண்மையே பேசுவதாக மஹாத்மாவிடம் வாக்கு அளித்திருந்த காரணத்தினால்) தான் ஒரு திருடன் என்று கூறினான். அவனுடைய நேர்மையைக் கண்டு வியந்த அரசர், அவனிடம் அக்கறை கொண்டு, மேலும் உண்மைகளை கிரஹிக்க முயன்றார். எனவே அவனிடம் தானும் ஒரு திருடன் தான் என்றும், அவனுக்கு உதவுவதாகவும் சொல்லி, தன்னுடன் வரும்படி அழைத்தார். அவனை உள்ளே அழைத்துச் சென்று, ஒரு இரும்புப்பெட்டியின் சாவியைக் கொடுத்து, வேண்டியதை எடுத்துக் கொள்ளச் சொன்னார். அந்தப் பெட்டியைத் திறந்ததும், உள்ளே கண்ணைக் கவரும் பல நகைகள் இருந்தன. அவற்றில் மூன்று பெரிய வைரங்களும் இருந்தன. திருடன் இரண்டை மாத்திரம் எடுத்து வந்து ஒன்றை அரசனிடம் கொடுத்து, தான் இரண்டு வைரங்களை எடுத்ததாகவும் வேறு ஒன்றும் எடுக்கவில்லை எனவும் மற்ற ஒரு வைரத்தையும் எடுத்தால், இருவரும் சமமாக பிரித்துக் கொள்ள முடியாது என்பதனால், அதை பெட்டியிலேயே விட்டுவிட்டதாகவும் கூறினான். இரும்புப் பெட்டியின் சாவியை அரசனிடம் கொடுத்து விட்டுத் திரும்பும் போது, அரசர் அவனுடைய விலாசத்தைப் பெற்றுக் கொண்டார்.
மேலும் இனி வரும் நாட்களில் திருட்டுக்குத் தான் உதவுவதாகச் சொன்னார். திருடனும் நன்றி கூறி விட்டு, தன் வீட்டுக்குத் திரும்பினான். மறுநாள் காலையில் அரசர் திருட்டுப் போனதை அறிவித்து, முதல் மந்திரியை அழைத்து, விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னார். மந்திரி இரும்புப் பெட்டியைத் திறந்த போது அதில் ஒரு பெரிய வைரத்தைக் கண்டார். தான் அதை எடுத்துக் கொண்டால், யாரும் தன்னை சந்தேகிக்க மாட்டார்கள், மேலும் தன்னை யாரும் சோதனை செய்யவும் மாட்டார்கள் என்ற தைரியத்தில் அதைத் தான் எடுத்துக் கொண்டு மூன்று வைரங்களையும் திருடர்கள் எடுத்துச் சென்று விட்டார்கள் என்று சொன்னார். அரசர் காவலர்களை அனுப்பி அந்தத் திருடனை அழைத்து வரச்சொன்னார். அரசர் தன்னுடைய பாரம்பரிய உடையில் இருந்ததால் திருடனுக்கு அவரை அடையாளம் காண இயலவில்லை. அரசரும் தனக்குத் தெரியும் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டாம் என்று நினைத்ததால், அவனை முந்தைய இரவில் என்ன நடந்தது என்று விரிவாகச் சொல்லச் சொன்னார். திருடனும் தான் வந்தது, அங்கு மற்றொரு திருடனைப் பார்த்தது, அவன் சாவி கொடுத்து அவனுக்கு உதவியது, ஒரு பெரிய வைரத்தைப் பெட்டியிலேயே விட்டது, அவர்கள் இருவரும் பங்கு போட்டுக் கொண்டது என்று நடந்த எல்லாவற்றையும் சொன்னான். மறுபடியும் திருடன் அப்படியே உண்மையாக நடந்ததைச் சொன்னதில் மகிழ்ச்சியடைந்து, முதல் மந்திரியைச் சோதனை செய்யப் போர் வீரர்களுக்கு உத்தரவிட்டார். மந்திரி தனிமையில் ஒளித்து வைத்திருந்த வைரம் கண்டுபிடிக்கப்பட்டது. நம்பிக்கை துரோகமும், திருட்டையும் ஒரே சமயத்தில் செய்த முதல் மந்திரியின் வேலை போயிற்று. உண்மையே பேசிய காரணத்தால் திருடன் முதல் மந்திரியாக ஆனான். அவன் தன் மற்ற தீய பழக்கங்களையும் விட்டு விட்டான். நல்ல நிர்வாகி என்ற புகழால் தம் குருவை சந்தோஷப்படுத்தினான்.
கதைச் சுருக்கம்
அந்தத் திருடன் திருடுவதை கைவிட்டவுடன், அவன் சத்தியத்திற்குச் சென்றான். அதன் விளைவாக, அந்தத் திருடனின் வாழ்க்கை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு வந்தது. மேலும் நல்ல செழிப்படைந்தான். இதன் விளைவாக, அவன் தன் இதர தீய பழக்கங்களையும் கைவிட்டான். ஒரு நல்ல மனிதனாக மாறினான். அவனுடைய நற்குணங்களுக்காக நீண்ட காலம் நினைவில் வைக்கப்பட்டான். நாம் நல் வழியில் நடந்தோமேயானால், நாம் அழிவற்றவராகிவிடுவோம்.
இந்தச் செயற்பாடு மேலும் பல நற்குணங்களுக்கும் பொருந்தும். நாம் நேர்மையாக ஏதாவது ஒரு நல்ல குணத்தையாவதுக் கடைபிடித்தோமேயானால், மற்ற எல்லா நற்குணங்களும் தாமாகப் பின்தொடரும். மேலும், நாம் அழிவற்றவராகிவிடுவோம். உதாரணம் – மகாத்மா காந்திஜி, ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், அப்துல் கலாம், etc. விவாதம் – குழந்தைகளை ஒரு மாதத்திற்குப் பொய் சொல்வதைக் கைவிடச் சொல்லவும். மேலும், ஒவ்வொரு வகுப்பிலும், அச்செயல் எவ்வளவு எளிதாக/கடினமாக இருந்தது என்றும், அதனால் என்னென்ன பயன்கள் என்றும் அவர்களுடன் விவாதியுங்கள்.