மனோஜவம் – செயற்பாடு
மனோஜவம் – செயற்பாடு
செயல்பாட்டின் நோக்கம் – குரூப் 1 குழந்தைகள், நாமஸ்மரணையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கும்,இறைவனின் நாமம் எவ்வாறு நம்மை எப்போதும் காத்து நிற்கும், மற்றும், செயற்கரிய செயல்களையும் செய்ய வல்லமை தரும் என்பதை அறிந்து கொள்வதற்கும்.
தேவைப்படும் பொருட்கள் – மணிகள், தங்கூசி, கத்திரிக்கோல்.
ஜபமாலை தயாரிக்கும் செயற்பாடு
குருமார்கள், குழந்தைகளுக்கு அனுமன் கதைகளை விவரிக்கவேண்டும். மேலும், அனுமன் ராம நாமத்தை ஜபித்தே எவ்வாறு அசாத்தியமான செயல்களையும் சாத்தியமாக்கினார் என்பதைக் கூற வேண்டும். எச்செயலையும் இறைவன் நாமத்தை உச்சரித்துச் செய்யும்போது, அந்த வேலையை, சுலபமாகவும் நம்பிக்கையுடனும் செய்து முடிக்கத் தேவையான தைரியம், உறுதி மற்றும் புத்திக்கூர்மை நமக்குக் கிடைக்கும் என்பதை விவரிக்க வேண்டும்.
- ஒவ்வொரு குழந்தையிடமும் 26 மணிகளைத் தரவும். ஒரே ஒரு மணி மட்டும் இந்த 26 மணிகளைவிட சற்று பெரியதாகவும், மாறுபட்ட வண்ணத்திலும் இருக்க வேண்டும். குழந்தைகளிடம் ஒரு தங்கூசியைக் கொடுக்கவும்.
- சமதளமான தரையில் மணிகளை வரிசையாக வைக்கவும்.
- தங்கூசியின் முடிவில் ஒரு முடிச்சைப் போடவும். பின்னர் குழந்தைகளை மணிகளைக் கோர்க்க ஆரம்பிக்கச் செய்யவும்.
- ஒரு ஒரு மணியாகக் கோர்க்கும்போது, ஜெய் ஸ்ரீ ராம் என்று உச்சரிக்கச் சொல்லவும்.
- 26 மணிகளையும் கோர்த்து முடித்தபின் பெரிய மணியைக் கோர்த்து மாலையாக்க குரு உதவி செய்யவும்.
சுருக்கமாக – சில மாதிரி வினாக்கள்
- உனக்கு இந்த செயற்பாடு பிடித்ததா?
- இந்த ஜபமாலை சக்தி வாய்ந்ததாகக் கருதுகிறாயா? அவ்வாறெனில் ஏன்?
- இறை நாமத்தைச் சொல்லிக்கொண்டே செய்யும்போது என்ன நிகழ்கிறது
இச்செயற்பாடு நடைபெறும் முழு நேரமும் அவர்களது கவனம் நாமஸ்மரணையிலேயே இருக்க வேண்டும். வகுப்பு நிறைவடைந்ததும் மாலையை அவர்களிடமே கொடுத்து அவர்கள் வீட்டு பூஜையறையில் வைக்கச் சொல்ல வேண்டும். அவர்களுக்கு பிடித்த எந்த மந்திரத்தை வேண்டுமானாலும் உச்சரிக்கச் சொல்லலாம். உதாரணத்திற்கு, காயத்ரி மந்திரம், ஓம் ஸ்ரீ சாய்ராம், ஓம் நம சிவாய, ஜெய் ஸ்ரீ ராம் முதலியன. இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 27 முறை உச்சரிக்கலாம். வினாயக சதுர்த்தி அன்று ஸ்ரீ கணேசாய நமஹ மந்திரத்தை ஜபமாலையைக் கொண்டு (27x 4) 108 முறை உச்சரிக்க வேண்டும்.