ஒளிரும் எண்ணங்கள்

Print Friendly, PDF & Email
ஒளிரும் எண்ணங்கள்

குரு ராதா-கிருஷ்ணா என்ற ஒரு தலைப்பை, கரும்பலகையின் மத்தியில் எழுதி அதனை உரக்கக் கூற வேண்டும்.

இந்த தலைப்பிற்கு சம்பந்தமான வார்த்தைகளை குழந்தைகள் கூற வேண்டும். அவற்றை, ஒருவர் கரும்பலகையிலும், மற்றவர்கள் நோட்டுபுத்தகத்திலும் எழுத வேண்டும் (தயவு செய்து அவற்றை இலக்கமிட வேண்டாம். மேலும் வார்த்தைகளை ஒழுங்கு படுத்த வேண்டாம். அவர்களிடமிருந்து என்ன விதமான, எத்தனை வார்த்தைகள் வரும் என்பதற்கு எல்லையில்லை.

குறிப்பு:

சம்பந்தபட்ட வார்த்தைகள் குழந்தைகளிடமிருந்து தான் வரும். குருவிடமிருந்து அல்ல. கொடுக்கப்பட்டிருக்கும் தலைப்பிற்கும், குழந்தை சொன்ன வார்த்தைக்கும் சம்பந்தமில்லாதிருந்தால், என்ன காரணத்தினால் இந்த வார்த்தை தோன்றியது என்று கேட்க வேண்டுமேயன்றி, “சம்பந்தம் கிடையாது” என்று மறுதலிக்க கூடாது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன