ஓம் தத் சத் – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
ஓம் தத் சத் – மேலும் படிக்க
இறைவனின் பல்வேறு நாமங்களின் பொருள்

ஓம்–மாறாத, நித்தியமான, உலகளாவிய, முதன்மையான கடவுளின் ஒலி வடிவம்.

தத்–அது உணர்ச்சிகள், மனதின் கற்பனைகள் மற்றும் அறிவுசார்ந்த சிந்தனைகள் இவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்டது.

சத்–அது படைப்பு முழுவதிலும் நிலைத்தும் ஊடுருவியும் இருக்கக்கூடிய, அனைத்தையும் தன்னகத்தே இருந்து தோற்றுவித்ததுமான உண்மைப்பொருளாகும். ஓம் தத். சத் என்பது வேதாந்த தத்துவத்தின் சாரமாகும்.

ஸ்ரீ–லக்ஷ்மியைக் குறிப்பதாகும். அல்லது நல்வழிகளில் ஈட்டிய செல்வம், கௌரவம், சிறப்பு, ஆற்றல் ஆகியவற்றைக் குறிக்கும்.

நாராயண்–’சர்வபூதாந்தர்யாமி’ ஒவ்வொரு தனிப்பட்ட உயிரினங்களாகத் தோன்றியுள்ள அந்த பரம்பொருளை நாராயணா என்றழைக்கிறோம். மக்கள் நல்ல நோக்கத்துடன் ஒன்றிணையும்போது நாராயணனின் சக்தியைப் பெறுகின்றனர் மற்றும் கடினமான செயல்களும் நிறைவேற்றப்படுகின்றன. நாராயணா என்னும் சொல் இரு பதங்களைக் கொண்டது. நீர் + ஆயன் = நீர- தண்ணீர்; ஆயன்=கண். நாராயணா என்னும் கடவுள் ஆனந்தமே உருவானவர்; பேரின்ப வடிவானவர்; பேரின்பத்தில் மூழ்கித்திளைக்கும் போது மகிழ்ச்சியால் கண்களில் நீரைப் பெருகிடச் செய்பவர்;அந்த நிலையை அடையும் ஒருவர் நாராயணனைக் காண்பார்.

புருஷோத்தமா–புருஷோத்தமா என்பவர் குறை ஒன்றும் இல்லாதவரும், ராக த்வேஷங்களிளிருந்து விடுபட்டவரும், வெகு கம்பீரமானவரும், முதன்மையானவரும், முன்னிலை வகிப்பவரும், மாயை மற்றும் பொய்யான நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டவரும் ஆவார்.

குரு –தன்னிடத்தில் குறைகள் இல்லாத ஒருவரே மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கும் தகுதியை உடையவர் ஆகிறார். இது குருதத்தாத்ரேயரை பின்பற்றுபவர்களுக்கு மத்தியில் கடவுளைக் குறித்து உருவான கருத்தாகும். குரு என்பவர் ஆத்மாவை அடையாளம் காணச்செய்வதும் ஒருவரின் உண்மை நிலையின் இருப்பை உணரச்செய்வதும் சீக்கிய வழிபாட்டு முறைகளில் மிக உயர்ந்த நிலையாகும். க்ரந்த் சாஹிப் எனப்படும் குருவின் போதனைகள் அடங்கிய தொகுப்பு சீக்கியர்களால் புகழ்ந்துப் போற்றித் துதிக்கப்படுவதாகும்.

சித்தா–ஜெயின் மதத்தின் குறிக்கோளான தன்னை அறிந்தவர் ஆவார்.

புத்தா–புத்த மதத்தின் குறிக்கோளான விழிப்பு நிலையை எய்தியவர் ஆவார்.

ஸ்கந்த–குறைகளற்ற நிலையை அடையும் வழிகளில் தோன்றும் தடைகளை அகற்றுபவர்.

விநாயகா–கணேஷக் கடவுளின் பக்தர்கள் விரும்பித் துதிக்கும் ஒரு பெயர்.

சவிதா –உலக இயக்கங்களுக்கு இன்றியாமையாதவராகிய சூரிய பகவான், சூரியனை கடவுளின் பிரதிநிதியாகக் கருதி சிலர் வழிபடுகின்றனர். பரம்பொருளே நெருப்பு, காற்று, சூரியன், சந்திரன் மற்றும் அனைத்துமாகும். அவர் அனைவரினுள்ளும் ஒளியூட்டும் சுடர் ஆவார். அவர் பயிர்களைக் காக்கும் மழையுமாவார். உலகிற்கு பயன்தரும் அனைத்து வடிவங்களையும் தன்னகத்தேக் கொண்டிருப்பதால் அவரே நெருப்பாகவும் (அக்னி) அல்லது காற்றாகவும் (வாயு) அல்லது மழையாகவும்(வருணன்) வணங்கப்படுகிறார்.

பாவக–நெருப்பு, ஜோராஷ்டிர மதத்தினர் நெருப்பை இறைவனாகக் கருதி வழிபடுகின்றனர்.

பிரம்ம–எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், உருவமற்ற, குணங்களற்ற, படைப்பு முழுவதையும் தன்னிலிருந்துத் தோற்றுவித்த, மீண்டும் அவற்றை தன்னோடு ஒன்று கலந்திடச் செய்யும் உண்மைப்பொருளாகும்.

மஸ்த–அஹுரா மஸ்தா. பெரிய கடவுள். ஜோராஷ்ட்ர மதத்தில் கடவுளின் பெயர்.

யவ்வ–ஜெஹோவா – யூத மதத்தில் கடவுளின் பெயர்.

சக்தி –தேவியை வழிபடுபவர்கள் வணங்கும் வடிவங்களான காளி, சண்டிகா, மகிஷாசுரமர்த்தினி மற்றும் பல.

ஏசுபிதா–இயேசு கிறிஸ்துவால் அழைக்கப்படும் பரலோகத்தில் இருக்கும் பரமபிதா.

பிரபு–மேலான கடவுள்.

ருத்ரா–சைவ மதத்தில் கடவுளைக் குறிக்கும் பெயர்.

விஷ்ணு–எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்.

ராம்–தர்மத்தின் திருவுருவம். கோதண்டம் என்னும் அவரது வில் அம்பை இலக்கை நோக்கி நேரடியாக செலுத்தக்கூடியது.

கிருஷ்ணா–அன்பின் திருவுருவம். மனம் கவரும் இசையை வாசிக்கின்ற அவரது புல்லாங்குழல் அகந்தை மற்றும் ஆசைகளற்ற பக்தரைக் குறிக்கிறது.

ரஹீம்–கருணை மிகுந்தவர். கடவுளைக் குறிக்கும் இஸ்லாமியப் பெயர்.

தாவோ–கடவுளைக் குறிக்கும் சீனப் பெயர்.

வாசுதேவ–அனைத்து உயிர்களையும் தான் வசிக்கும் இருப்பிடமாகக் கொண்டவர். வைஷ்ணவ மதப் பெயர்.

கோ–இறைவனின் ஒளியூட்டும் திறன், பசு –பிராமண குலத்தைக் காத்த காமதேனு.

விஸ்வரூப–கிருஷ்ணனை (அவர் படைத்த) அகிலத்திலுள்ள அனைத்திலும் உறைபவர் என்று கீதை அறிவிக்கின்றது.விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்டிருத்தல் மற்றும் மனித குலம் முழுவதையும் ஒன்றாகக் காணல்.

சிதானந்த்-ஆத்மா என்பது உயர்ந்த மெய்ப்பொருளின் உண்மையான பிரதிநிதி ஆகும். அது சத், சித் மற்றும் ஆனந்தா எனும் மூன்று பண்புகளை உடையது. அதாவது எப்பொழுதும் நிலைத்திருக்கும் பேரின்பமயமான உணர்வுநிலை.

ஹரி–மாயையை அழிப்பவர்.

அத்விதீய-உண்மையான மெய்ப்பொருளேப் பலவாகப் பெருகியுள்ள அனைத்திற்கும் அடிப்படையாகும்.கடுகுக்குள் எண்ணெய், பாலினுள் வெண்ணெய், நிலத்திற்குள் நீர் மற்றும் மரத்திற்குள்ளிருக்கும் நெருப்பு போன்றே அனைத்தினுள்ளும் பரம்பொருள் வியாபித்திருக்கிறது. ஆனால் நம்மால் காண இயலாது.

அகால –காலத்தை மிஞ்சியவர்.

நிர்பய –பயமற்றவர், தன் பக்தர்களையும் பயத்திலிருந்து விடுவிப்பவர்.

ஆத்ம லிங்க–ஆத்மா என்பது உண்மையான மெய்ப்பொருளைக் குறிப்பதாகும்.

சிவ-மங்களகரமானது. மேற்சொன்ன இரு சொற்களும் சைவ சமயப் பதங்களாகும்.

ஸ்ரீ சத்யசாய் தன்னார்வ நிறுவனத்தின் சர்வ தர்ம சின்னமானது, மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை வலியுறுத்துவதாய் அமைகிறது.சர்வ மத சங்கமம் மற்றும் எம்மதமும் சம்மதம் என்பது அச்சின்னத்தின் சாராம்சம் ஆகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: