ஸர்வ தர்மான் – மேலும் படிக்க

Print Friendly, PDF & Email
ஸர்வ தர்மான் – மேலும் படிக்க
ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ பாபேப் யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷீச

(அத்.18, பதி.66)

பொருள்: எல்லா தர்மங்களையும் அறவே தியாகம் செய்துவிட்டு என்னையே சரணடைக. உன்னை நான் எல்லா பாபங்களிலிருந்தும் விடுவிப்பேன். அச்சமுறாதே!

குருஷேத்ர போர்களத்தில் எதிரிக்ளாகத் தன் முன் நிற்கும் கௌரவப் படையினரைக் கண்ணுற்ற அர்ஜீனன் கண் கலங்கி நிற்கிறான். எதிரிகளின் படையில் தன் உறவினரும் குருதேவரும் அடங்கியுள்ளனர். மாயையின் காரணமாக அவர்கள் யாவரும் தம்முடையவர்கள் என்றே எண்ணுகின்றான். அதர்மம் மற்றும் அநீதியை எதிர்த்துப் போரிடுவது அவனது கடமையானதால் தடுமாறாத நிலை கொள்ள அறிவுறுத்துகிறார் கிருஷ்ணன். கௌரவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் அதர்மத்தின் சக்தியாவர்.

“இறைவனின் புகழ் ஓங்க தர்மம் மற்றும் அதர்மம் ஆகிய சிந்தனைகளுக்கு இடங்கொடாமல் அவரது ஆணைகளுக்கு ஏற்ப செயலாற்றுவாயாக!. இவை யாவும் பரமாத்மாவே தவிர வேற ஏதுமில்லை எனும் உறுதியான நம்பிக்கை கொள்வாயாக!.”

“ஆகவே, இறைவனின் சங்கல்பத்திற்குத் தலை வணங்குவதையும் அவரது ஏற்பாடுகளுக்கு சரணடைவதையும் தவிர வேறு ஒரு மார்க்கமில்லை. ஆகவே, பலனில் பற்று கொள்வதை விடுத்து இறைவனுக்காக மட்டுமே சாஸ்திரங்களிலும் வேதங்களிலும் கூறப்பட்ட விதிமுறைகளைக் கடைபிடிப்பாயாக. இதுவே உண்மையான நிஷ்காம கர்மமாகும் (பற்றற்ற பணியாகும்).”

“அனைத்து விதமான பணிகளையுன் வழிபாடாக, ஹரிப்ரஸாதமாக ஏற்று செயல்படுங்கள். அது ஒன்றே ஆற்ற வேண்டிய சாதனையாகும். இதன் பலன், விளைவுகள் மற்றும் முடிவுகளான மற்ற யாவற்றையும் இறைவனிடம் விட்டுவிடுங்கள். அதன் பிறகே இறைவனின் அருளுக்குப் பாத்திரமாவீர்கள், உங்கள் இந்த மண்ணுலக வாழ்க்கையும் புனிதமடைந்து மதிப்புமிக்கதாகும்.”

“மாறுபாடான கஷ்டங்கள் உங்களுக்குத் தடங்கல் விளைவித்தாலும் தர்மத்தின் பாதையைப் பின்பற்றுபவர்களுக்கு இறுதியில் வெற்றியே கிடைக்கும். தர்மத்தின் பாதையினின்று விலகியவர்கள் நீண்ட கால செல்வ சுகங்களைப் பெற்றாலும் இறுதியில் பேரிடர் வாய்க்கப் பெறுவர். இப் பேருண்மைக்கு பாண்டவரும் கௌரவருமே உதாரணங்களாவர்.”

இவ்வாறாக, இறைவனால் விளக்கப்பட்டவாறு நம் கடமைகளை யாற்றுகையில் இறைவன் கண்டிப்பாக நம்மை காப்பாற்றச் செய்கிறார்.

“அச்சம் கொள்ளாதீர்!” இறைவன் உறுதியளிக்கிறார். “இறைவனின் அருளுக்கு இணையானது என்று ஏதுமில்லை, அணிவகுத்து வரும் வலிமை வாய்ந்த படைகள் கூடத்தான்”.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: