வாழ்க்கை என்ற ரிப்பன் (நாடா )

Print Friendly, PDF & Email
வாழ்க்கை என்ற ரிப்பன் (நாடா)
குறிக்கோள்:

காலம் பொன்போன்றது. கடந்த காலம் திரும்பி வராது .காலம் வெகு வேகமாக பறந்து போய்விடும் .நேரத்தை வீணாக்குதல் நமது வாழ்க்கையை வீணாக்குதலுக்குச் சமம் என்ற கருத்தை புரிய வைப்பது.

தேவையான பொருட்கள்:
  1. சுமார் 1 மீட்டர் / 100 சென்டி மீட்டர் நீளம் உள்ள வர்ண பேப்பர் ரிப்பன் – (colour paper ribbon)
  2. கத்தரிக்கோல் 3 அளவுகோல்

வகுப்பு நடவடிக்கை:

நாடாவின் ஒரு சென்டி மீட்டர் அளவு என்பது நமது வாழ்க்கையின் ஒரு ஆண்டைக் குறிக்கிறது என்பதை குழந்தைகளிடம் கூற வேண்டும் . நாடாவின் நீளம் 100 செ .மீ என்பதால் இது நமது வாழ்க்கையின் 100 வயதைக் குறிக்கிறது.

அதுதான் இல்லை.

தேசிய / பொது விடுமுறையாக வருடத்திற்கு 20 நாட்கள்

ஓய்வெடுத்து பொழுது போக்கவும் ,மகிழ்ச்சியாக இருக்கவும் இந்த 20 நாட்களை நாம் எடுத்துக் கொள்கிறோம்.

நான்கு வருடங்கள் ![(20*64)/365] ரிப்பனில் 4 செ மீ வெட்டுவோமா?மீதமுள்ளது 51 செ மீ!

ஏழு வருடங்கள்![(40*64)/365] ரிப்பனில் 7 செ மீ வெட்டுவோமா? மீதமுள்ளது 44 செ. மீ!

இன்னும் முடிக்கவில்லை!!!! தினமும் நாம் செய்யும் வேலைகள்/கடமைகள் உள்ளனவே?

சராசரியாக தினமும் 8 மணி நேரம் தூக்கம்

காலை சிற்றுண்டி, மதிய உணவு, நடுவில் சாப்பிடும் தின் பண்டங்கள்,இரவு உணவு என்று பார்த்தால் இதற்காக ஒரு நாளைக்கு 2 மணி நேரம்

மேலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்வதற்காகவும்,வேறுபல காரியங்களுக்காகவும் 2 மணி நேரம்

ஒரு நாளைக்கு ஆக மொத்தம் 12 மணி நேரம் ஆயிற்று.இதை 365 ல் பெருக்கி வரும் விடையை 64 ஆல் பெருக்கினால் கிடைப்பது 280320 மணி நேரம்.நமக்கு ஆண்டுகளாகத் தேவைப்படுவதால் மீண்டும் 365 ல் வகுத்து மீண்டும் 24 மணி நேரங்களால் வகுப்போம் ..[(12*365*64வருடங்கள் )/365 / 24]

ஓ ! 32 ஆண்டுகள் சென்று விட்டதே! என்ன செய்யப் போகிறோம்?

ஆகையால் இப்பொழுது 32 செ மீட்டர் நீளத்திற்கு ரிப்பனை வெட்டி விடலாம்.

கடைசியாக மீதமிருப்பது 12 செ மீட்டர் தான்!!!! 100 செ மீ நீளமிருந்த ரிப்பன் எவ்வளவு விரைவில் 12 செ மீ ஆகிவிட்டது!

நம்புவீர்களா?

நம்மிடம் இப்போது பயனளிக்கக்கூடிய 12 வருடங்கள் மட்டுமே உள்ளன!

ரிப்பனின் அளவு குறைந்தது போல நமது உபயோகமுள்ள வருடங்களும் குறைந்து விட்டதே!

சிந்தித்துப் பாருங்கள். நமது ஆயுளில் நிறைய வருடங்கள் உள்ளன என்றும், நிறைய சாதிக்கலாம் என்றும் நினைத்துக் கொண்டு உள்ளோம்.

கடிகார முள் மிக வேகமாக சுற்றுகிறது. நேரத்தை வீணாக்காதீர்கள் குழந்தைகளே!

பெரிய அளவு ரிப்பனை கையில் வைத்துக் கொள்ள இப்போதிலிருந்தே ஆயத்தமாகுங்கள்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன