ஆசைக்கு ஒரு உச்சவரம்பு – வகுப்பறை செயற்பாடு

Print Friendly, PDF & Email
ஆசைக்கு ஒரு உச்சவரம்பு – வகுப்பறை செயற்பாடு
குழுச் செயற்பாடுகள்- விளையாட்டுகள்:
  1. குரூப் -1 இல் உள்ள குழந்தைகளை தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுப் பொருட்களை கொண்டு வரச் சொல்லவும்.
  2. ஒரு செய்தித் தாள் மடலைத் தரையில் விரிக்கவும்.
  3. விளையாட்டுப் பொருட்களை அதில் வைக்கச் சொல்லவும்.
  4. அடுத்து பொம்மைகளை நீக்கித் தாளை பாதியாக மடிக்கவும்.
  5. மடித்த தாளில் பொருட்களை வைக்கச் சொல்லவும். தாள் பாதி அளவு ஆனதால் குறைந்த பொருட்களைக் கொண்ட குழந்தைகளால் வசதியாக வைக்க இயலும். நிறைய பொருட்கள் கொண்ட குழந்தைகள் தங்கள் பொருட்களிலிருந்து இடத்தைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டை நீக்கும்படி ஆகும். (ஏதேனும் குழந்தை தன் அனைத்துப் பொருட்களையும் வைக்க மற்ற குழந்தைகளுடன் சண்டையிடுகிறதா என்று குருமார்கள் கண்காணி்க்க வேண்டும்)
  6. மறுபடியும் அனைத்துப் பொருட்களையும் எடுத்து தாளை இன்னும் பாதியாக மடிக்கவும். தாள் இன்னும் சிறியதாகி விட்டது. மீண்டும் குழந்தைகளை விளையாட்டுப் பொருட்களை வைக்கச் சொல்லவும். இன்னும் சில பொருட்களை நீக்கும் படியாகும்.
  7. விளையாட்டை இப்படியாக தொடரவும். ஒவ்வொரு குழந்தையின் ஒரே ஒரு பொருள் கொள்ளும் வரை தொடர்ந்நு விளையாடவும். கற்றுக் கொள்ளுதல் –
    குழந்தைகள் ஏன் சில பொம்மைகளை மட்டும் நீக்கினார்கள். அனைத்து பொருட்களையும் வைப்பதற்கு ஏன் இடம் பற்றவில்லை என்பதைப் பற்றி குருமார்கள் விவாதம் மூலம் புரிந்து கொள்ளச் செய்யலாம். இறுதியாக ஆசையில் வரம்பிருந்தால், தேவைப்படுபவர்களுக்கு நாம் துணிமணிகள், பொம்மைகள் மற்றும் புத்தகங்கள் அனைத்தும் கொடுத்தபின்பும்.
தெய்வத்தின் குரலைக் கேட்க கீழே உள்ள ‘ஐகானைக் க்ளிக்’ செய்யவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: