கடமை

Print Friendly, PDF & Email
கடமை

கடமை நேர்மையான பண்பின் பொருட்டு செய்யப்படும் நற்கருமங்களே கடமை எனப்படும், கடமை எனப்படுவது ஒருவருக்கு கொடுக்கப்பட்டுள்ள பணியேயாகும். மாணவர் கடமை கல்வி பயிலுதல், மருத்துவர் கடமை நோயாளிக்கு சரியான சிகிச்சை அளித்தல் மற்றும் புகைவண்டி நிலய பயணச் சீட்டு வழங்குபவர் கடமை பயணச்சீட்டு வழங்குவது. ஆக அவரவர்க்கு விதிக்கப்பட்ட பணியே கடமையாகும்.

குழந்தைகளாகிய நமக்கு உள்ள முக்கிய கடமைகள் என்னென்ன?
  1. பெற்றோரிடம் நமக்கு உள்ள கடமை– அன்பு, மரியாதை, கீழ்ப்படிதல் மற்றும் நன்றியறிதலுடன் அனுசரித்து இருத்தல்.
  2. பெரியோரிடம் நமக்கு உள்ள கடமை– அவர்களுக்கு அன்புடன்கூடிய சேவையை அளித்தல், பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியிடம் மரியாதையுடனும், கனிவுடனும் நடந்துகொள்ளுதல் ஆகும்.
  3. நமது ஆசிரியர் மற்றும் குருமார்களிடம் நம் கடமை– நம் அறிவுக்கண்களை திறக்கும் ஆசிரியப் பெருமக்களிடமும், நம்மிடமுள்ள மனித மேம்பாட்டுக் குணங்களை வெளிக்கொணர்ந்து, நம் மனதை இறைவன் பால் செலுத்த உதவும் குருமார்களிடமும் நாம் மரியாதையுடனும் மதிப்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.
  4. சமுதாயத்திடம் நம் கடமை– நாம் ஒவ்வொருவரும் இச்சமுதாயத்திடம் இருந்து, உடல்திறன், அறிவுத்திறன், மனத்திறன், அகத்திறன் ஆன்மீகத்திறன் இவற்றைப் பெறுகிறோம். இத்தகைய திறன்களைப் பெற்ற ஒருவன் சமுதாய நலனுக்கான தன் பங்களிப்பை அவசியம் நல்க வேண்டும், நம்முடன் கூடிவாழ்வோர் இல்லாத சமுதாயத்தை கற்பனை கூட செய்ய இயலாது.
  5. இச்சமுதாயத்திடம் நன்றியறிதலுடன் இருக்க ஒரே சிறந்த வழி” அனைவரையும் நேசித்து அனைவருக்கும் தொண்டு செய்வதேயாகும் என்று நம் ஸ்வாமி கூறுகிறார். ‘அனைவரையும் நேசி, அனைவருக்கும் தொண்டு செய்’ என்னும் சொற்களின் அதன் முழுஅர்த்தத்தையும் உணர்த்துவதாக இருக்க வேண்டும். சமுதாயத்தில் மற்றவர்க்குரிய உரிமைகளுக்கும் சுதந்திரத்திற்கும் உரிய மரியாதை வழங்குவது நமது கடமையாகும். கடமை என்பது பொறுப்பு என்று பொருள்படும். நமது இயக்கத்தினாலோ, பேச்சினாலோ நடத்தையினாலோ, நடவடிக்கையினாலோ எவருக்கும் இடைஞ்சல் இல்லாமலும், எவரையும் துன்புறுத்தாமலும் நாம் இருக்கவேண்டும். நாம் சாலையில் ஒரு பெரிய கைத்தடியை வீசிக்கொண்டு நடந்து செல்வோமானால் நமக்குப் பின்னால் வருபவரையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
  6. அன்னை பூமியிடம் நமக்குள்ள கடமை– நாம் நமக்கு வேண்டிய உணவு உடை, இருப்பிடம் ஆகியவற்றை இயற்கை வளங்களிலிருந்தே பெறுகிறோம். ஆகவே இயற்கை வளங்களைப் பாதுகாத்து அதனுடன் இயைந்து வாழ்வது நமது தலையாய கடமையாகிறது ஆகவே சுற்றுச் சூழலை மாசுபடுத்தி நம் அன்னை பூமியை நாம் ஒரு போதும் அவமதிக்கக்கூடாது.
  7. நம் தாய் நாட்டின் மீதுள்ள நம் கடமை– நம் தாய் நாட்டை நாம் நேசிக்க வேண்டும் நம் நாட்டின் இறையாண்மையை கெடுக்கும் சக்திகளை நாம் தடுக்கவேண்டும். ஒரு நல்ல குடிமகனாக நாம் கடமையாற்ற வேண்டும்.
  8. நம் தெய்வீகப் பெற்றோரிடம் நமக்குள்ள கடமை– நாம் கடவுளின் குழந்தைகள். ஆகையால் நாம் நமது சிறந்த நடத்தையால் கடவுளை மகிழ்விக்க வேண்டும். எண்ணம், சொல், செயல் இவற்றின் ஒருங்கிணைப்பிற்காக நாம் அயராது முயற்சிக்க வேண்டும். (திரிகரண சுத்தி)

பகவான், நாம் இந்த கடமைகளை நம் வாழ்நாள் காலத்தில் முடித்து விடவேண்டும் என்று கூறுகிறார். நாம் முழுமனதுடன் இவற்றை முடித்து இறைவனிடம் சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தான் நாம் செய்யும் வேலை (கடமை) வழிபாடு ஆகிறது.

குருமார்கள் ஸ்வாமியின் இளம்பருவத்தில் நடந்த நிகழ்ச்சிகள்- அவர் தன் தாய் ஈஸ்வரம்மாவிற்கு அளித்த வாக்குறுதிகள், அவற்றை அவர் எவ்வாறு நிறைவேற்றினார், அண்ணன் வீட்டுக்கு தினமும் தண்ணீர் சுமந்து வந்தது முதலியவற்றைக் கூறும் போது, ஸ்வாமி இளம் வயதிலேயே எவவாறு எல்லாபணியிலும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என்பதைக் குழந்தைகள் அறிந்து கொள்வர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: