நன்றியறிதல்

Print Friendly, PDF & Email
நன்றியறிதல்

நன்றியறிதல் ஒரு தெய்வீகப் பண்பு. ஸ்வாமின் செயல்களில் இது அதிக அளவில் காணப்படுகிறது.

பலவருடங்களுக்கு முன்னா் பாபா சில பக்தா்களுடன் கூட ஹார்ஸ்லி (Horsley) குன்றுகள் என்ற இடத்தில் தங்கினார். இந்த வனப்பு மிகுந்த இடம் கடலுக்கு மேல் 3800 அடி உயரமுள்ளது.

குன்றுகளுக்கிடையில் இருந்த இந்த முகாமுக்கு ஜீப் மூலந்தான் செல்ல முடியும். குன்றுகளின் அடிவாரத்தில் இருந்த சிறு குடிசைகளிலிருந்து தான் உணவையும் நீரையும் கிராமத்தாரால் கொண்டு வரமுடியும். பங்களாவில் இருந்த ஒரு எருமைமாடு, அதன் முதுகில் தொங்கவிடப்பட்ட தோற்பைகள் மூலம் மேலும் கீழும் தண்ணீர் சுமந்தது.

பாபாவுடன் இருந்து கொண்டு, அவரது ஞானமிகுந்த இனிய மொழிகளைக் கேட்டுக்கொண்டு, இந்த நாட்களை அமைதியாக, மகிழ்ச்சியுடன் அனுபவித்து அனைவரும் மகிழ்ந்தனா்.

திரும்பிச் செல்லும் நேரம் வந்தபோது, பாபா “அனைவரும் நடந்தே செல்லலாம்” என்று கூறினார். திடிரென்று ஒரிடத்தில் நின்று “காத்திருங்கள், ஒரு நிமிடத்தில் வருகிறேன். முக்கியமான பிரமுகா் ஒருவரிடமிருந்து விடைப்பெற்றுக்கொண்டு வருகிறேன்.” சில பக்தா்கள் சத்தமில்லாமல் பாபாவைப் பின் தொடா்ந்தனா். அவா்கள் பாபா எருமையிடமிருந்து விடைப் பெறுவதைக் கண்டனா். அவா் அதை அன்புடன் தட்டிக்கொடுத்து “தங்கமே (பங்காரு) எனக்கு நல்ல சேவை செய்தாய்” என்றார்.

மிகவும் நுண்ணிய சிறிய சேவையாக இருந்தாலும் பாபா அதனைக் கவனித்துப் பாராட்டுகிறார்.

[Source : Lessons from the Divine Life of Young Sai, Sri Sathya Sai Balvikas Group I, Sri Sathya Sai Education in Human Values Trust, Compiled by: Smt. Roshan Fanibunda]

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன