நிலம் -1
நிலம் -1
அறிமுகம்
பஞ்சபூதங்களும், இறைவனது தெய்வீகப் பொருள்களாகும். ஆகவே நமது முன்னோர்கள் அவைகளைக் கடவுளர்களாகப் போற்றி வந்தனர். நாம் பூமியை, பூதேவி அல்லது பூமாதா என்று வழிபடுகிறோம்.பூமியிலிருந்து நமக்குள்ள அநாவசியத் தேவைகளைக் குறைத்துக்கொண்டு,நற்ச்செயல்கள் புரிவதன் மூலம் நாம் பூமியை எப்போதும் பரிசுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
இயல்புகள்
பூமிக்கு ஒலி, ஸ்பரிசம், வடிவம், சுவை, மணம் ஆகிய ஐந்து இயல்புகள் உண்டு. பூமி நமக்கு சக்தியும் உணவும் தருகிறது. பூமியின் உதவியைக் கொண்டுதான் நமது வாழ்க்கை நடைபெறுகிறது. அது நமக்குப் பொறுமையும் பரந்த மனப்பான்மையையும் தருகிறது.லேசான,கனமான வாகனங்கள் அதன் மேல் செல்லுகின்றன. நாம் அதனைத் தோண்டுகிறோம். கலப்பையால் அதனை உழுகிறோம். அதற்குப் பல இடைஞ்சல்களும் காயங்களும் தருகிறோம். ஆனால் அது மிகவும் அமைதியுடன் இவை அனைத்தையும் ஏற்றுக்கொள்கிறது. பிரதியாக, நமக்கு உணவு, பிற அவசியமான பொருட்களான விறகு, நிலக்கரி, தாதுபொருட்கள் போன்றவற்றவைத் தருகிறது.
கதை
ஒரு பிரெஞ்சு சிறுவன் பறவைகளை நேசித்தான்.முக்கியமாக லாவே(lave) பறவையை நேசித்தான். அதன் குரல் மிகவும் இனிமையானது. பிரெஞ்சு மக்கள் அதை உணவாக உண்பதில் விருப்பமுள்ளவர்கள்.
ஒரு நாள் இந்தச் சிறுவன் ‘லாவே’யின் குரலைக் கேட்டான். சுற்றும் முற்றும் பார்த்தபோது, அதனை விற்க விரும்பிய மனிதன் அதனைக் கூண்டில் அடைத்து வைத்திருப்பதைக் கண்டான். யார் அதனை வாங்கினாலும்,அதனைக் கொன்று, அதன் மாமிசத்தை உண்பார்கள் என்று அவனுக்குத்தெரியும். ’லாவே’ அவனது உதவியை நாடுவது போல அவனைப் பார்த்தது.
அந்தச் சிறுவன் அம்மனிதனிடம் விலையைப் பற்றிக் கேட்டான். தனது பாக்கெட்டைத் தேடினான். தேவையான பணம் அவனிடம் இல்லை. அந்த மனிதனிடம்கூறினான். ‘பெரியவரே,என்னிடம் உள்ள பணமெல்லாம் எடுத்துக் கொண்டு, அந்தப் பறவையைக் கொடுங்கள்’.
அன்று மிகவும் வெப்பமாக இருந்தது. அவன் வீட்டுக்கு ஓடிச்சென்றான். அவன் அன்னை அங்கு இல்லை. வேறு யாராவது அந்தப் பறவையை வாங்கி உணவாக்கி விடுவார்கள் என்று பயம் அடைந்தான். மீதிப் பணம் வேண்டுமன்று தன் ஆசிரியரிடம் ஓடிச்சென்று கேட்டான். அவரும் உடனுக்குடன் பணந்தந்தார். அந்தப் பையன் திரும்ப ஓடி வந்தான். அப்போது வேறுயாரோ ஒரு பெண்மணி அந்தப் பறவைக்காக பேரம் பேசுவதைக் கண்டான்.
அந்தப் பையன் அதற்குரிய விலையை உடனே கொடுத்தான். அவனுக்கு அந்தப் பறவையைக் காப்பாற்ற முடிந்தது என்று மிகவும் மகிழ்ச்சி அடைந்தான். அந்தப் பறவையைப் பார்த்தான். அதுவும் கவலையுடன் அவனைப் பார்த்தது. ‘லாவே’யைத தடவிக் கொடுத்தான். அதுவும் தனது இனிய குரலைஎழுப்பி தன அன்பைத் தெரிவித்தது.கூண்டைத் திறந்தான். அழகிய முறையில்,மிகுந்த நன்றியுடன் தலையைச் சாய்த்து லாவே அவனைப் பார்த்துவிட்டு உயர ஆகாயத்தில் பறந்தது. பையனின் நெஞ்சம் நிறைந்தது. அளவற்ற செல்வம் கிடைத்தது போல மகிழிச்சியடைந்தான்.
பொன்மொழி
“அதர்வ வேதத்தில் கூறப்பட்டது போன்ற மனோபவத்தை நாம் பெறுதல் வேண்டும்.”
‘பூமியே எனது அன்னை; நான் பூமியின் புதல்வன்’ இதை மனதில் வைக்க,நாம் இருமுறை இதனைக் கூறிக்கொள்ளவேண்டும். இதனைக் கூறிக்கொண்டு, இதன் மனோபவத்தை நாம் வரவழைத்துக் கொண்டால்,நாம் நிச்சயமாக பூமாதேவியின் செல்வங்களைப் பாதுகாத்து, அதனை ஒழுங்காகவும் சுத்தமாகவும் வைத்திருப்போம்.
ஆனந்த கிராம சுற்றுலா
கிராமப்புறத்துக்கு குழந்தைகளைக் கூட்டிச் செல்லவும். வயற்புறத்தில் அவர்கள் அமைதியாக உட்காரட்டும். அவர்கள் கீழ்கண்டவாறு சிந்தித்து, அனுபவித்து மகிழட்டும்.
- சுற்றிலும் மரங்களும், புதர்களும் உள்ளன. மேலே சூரியனின் ஒளி வீசுகிறது. மெல்லிய தென்றல் வீசிக் கொண்டிருக்கிறது.
- டிராக்டர் வயலை உழுகிறது. தண்ணீர் பக்கத்திலும் குழாய்க் கிணற்றிலிருந்து பெருகியோடுகிறது.
- மறுப்பக்கத்தில் வயலில் கதிர்கள் அசைந்தாடுவதைக் காண்கிறோம்.தானியத்திலிருந்து மாவு அரைக்கப்பட்டு அதுவே ரோடியாகவும் வேறுபல உணவுகளாகவும் மாறுகிறது.
- நமக்குத் தேவையானது அனைத்தும் நம்மை சுற்றியுள்ளன. நமக்குத் தேவையானஅனைத்தையும் எடுத்துக் கொள்ளலாம். பதுக்கி வைப்பதற்கான அவசியம் ஏதுமில்லை.
- இது, ஒவ்வொருவருக்கும் பேரன்பு விளையும் தங்க நிலம் போன்றது. பறவைகளும் விலங்குகளும்கூட இந்த சுதந்திரத்தை அனுபவித்து வாழ்கின்றன.