பகுதி 3
இளம் சாயியின் வாழ்க்கையில் …
எனது வாழ்வே என் செய்தி
பகுதி 3
மகமாதத்தில் (தெலுங்கு வருடக்கணக்கில் 11ம் மாதம்) மக ஸ்நானம் செய்ய சத்யா குழந்தைகளை காலை 4 மணிக்கு அழைத்துச் செல்வது வழக்கம். சில குழந்தைகள் மிகச் சிறியவர்கள்.
ஆதலால், அவர்களால் வெகு சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை. ஆகவே சத்யா அவர்களை அருகிலுள்ள குளத்துக்கு சுமந்து சென்று, மகமாதத்தில் உள்ள நியமத்தின்படி புனித நீராட்டி, பிறகு அவர்களை பிரதட்சிணத்துக்கு (கோயில் சுற்றி வருதல்) ஆஞ்சநேயர் கோயிலுக்கு அழைத்துச் செல்வார்.
குழந்தைகள் பிரதட்சிணம் செய்யும்போது, சத்யா கோவி-ல் உட்கார்ந்து கொள்வது வழக்கம். ஒரு நாள் அவரும் கோயிலைச் சுற்றி வரவேண்டும் என்று குழந்தைகள் வற்புறுத்தினர். நீ வராவிட்டால் நாங்களும் கோவிலைச் சுற்றிச் செல்லமாட்டோம் என்று கூறினர். சத்யா முத-ல் மறுத்தார். கோவிலுக்குள்ளிருந்து அவர்களை கவனித்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். முடிவில் அவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்கி, கோயிலைச் சுற்றத் தொடங்கினார். அப்போது ஒரு பெரிய குரங்கு வந்து தடுத்தது.
பின்பு இதைப்பற்றி கூறும்போது, ஸ்வாமி கூறினார்: “அவர்கள் நம்பினாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஆஞ்சநேயர்தான் அங்குவந்து கோயிலைச் சுற்றிச் செல்வதைத் தடுத்தார்” என்று கூறினார். ஹனுமான் கூறினார்: “ஹே பிரபு, ஸ்ரீராமா, நானல்லவோ தங்களை வலம் வரவேண்டும். நீங்கள் என் கோயிலைச் சுற்றலாகாது” என்றார்.
அனைத்துக் குழந்தைகளும் குரங்கை விரட்ட முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. “ஆஞ்சநேயரை சாதாரணக் குரங்கு என்று நினைக்க வேண்டாம். கோயிலை வலம் வர அவர் என்னை அனுமதிக்கவில்லை” என்று கூறினார் சத்யா. இதற்குப் பிறகு, குழந்தைகளின் இதயத்தில் ஒரு பெரும் உயர்மாற்றம் ஏற்பட்டது. ஆஞ்சநேயர் கோவி-ல் அவர்கள் பார்த்ததைக் கிராமத்தில் எல்லோரிடமும் கூறிக் கொண்டிருந்தனர். இந்தச் செய்தி சுப்பம்மாவின் காதுக்கு எட்டியது. மறுநாள் சத்யாவைத் தன் வீட்டுக்கு அழைத்து, “ராஜு நான் சில தோசைகள் தயார் செய்திருக்கிறேன். அவற்றை உண்பதற்கு வா” என்றார். அக்காலத்தில் இட்-, தோசை போன்றவை பணக்காரர்கள் உணவாகக் கருதப்பட்டன. சத்யா தன்னந்தனியாக உண்பதற்கு ஒருபோதும் இசைவதில்லை. ஆகவே அவர் சுப்பம்மாவிடம் “எல்லாக் குழந்தைகளுக்கும் உணவளித்தால்தான், நான் உண்ண வருவேன்” என்றார். சுப்பம்மா அதன் பிறகு அனைத்து குழந்தைகளுக்கும் தோசை தயாரித்தார்.
சத்யா அங்கில்லாதபோது அவர் மற்றக் குழந்தைகளை எல்லாம் கூப்பிட்டுக் கூறுவார்: “ராஜுவின் நட்பு கிடைத்தது எவ்வளவு பெரிய அதிருஷ்டம் என்பது உங்களுக்கு தெரியுமா? அவன் சாதாரணச் சிறுவனல்ல. அவனது உத்தரவின்படி நடந்து கொள்ளுங்கள். எந்தச் சூழ்நிலையிலும் அவனது சொல்லை நீங்கள் மீறலாகாது. அவனுக்கு மகிழ்ச்சி தந்து அதன்மூலம் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் ஏதாவது தவறு செய்தால் அவன் தனது வருத்தத்தைத் தெரிவிப்பதில்லை. ஆனால் உங்கள் செயல்களுக்குப் பலனை நீங்கள் அனுபவித்தே தீரவேண்டும். ஆகவே, அவன் ஒருபொழுதும் அதிருப்தி அடையாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்”.
சுப்பம்மா தன் வாழ்க்கை முழுவதையும் ஸ்வாமிக்கு அர்ப்பணித்தார். அவர், பக்தர்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு தருவது வழக்கம். தமது கடைசி மூச்சு வரை அவர் ஸ்வாமிக்கு சேவை செய்தார். ஒருநாள் பாபா அவருடன் கட்டை மாட்டு வண்டியில் பயணம் செய்தபோது, அவர் “சுப்பம்மா உனக்கு என்ன வேண்டும்” என்று கேட்டார். சுப்பம்மா மென்மையாகக் கூறினார்: “எனக்கு ஒரு தேவையுமில்லை, கடைசி மூச்சுவிடும் நேரத்தில் தங்கள் கைகளால் எனது வாயில் நீர் ஊற்றுவதின் மூலம் எனது வாழ்க்கையைப் புனிதமாக்குங்கள்”. ஸ்வாமி அவரது ஆசையை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார்.
பிறகு பக்தர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க, ஸ்வாமி பத்து நாட்கள் தங்குவதற்கு சென்னை சென்றார். அப்போது போர் நடந்து கொண்டிருந்த சமயம். மணிக்கு ஒரு தடவை விமானத் தாக்குதல் பற்றிய எச்சரிக்கைச் சங்கு ஒ-க்கும். தெருக்கள் உடனே கா-யாகி வெறிச்சோடும். இந்தச் சூழ்நிலையில் சுப்பம்மா கடுமையாக நோய்வாய்ப்பட்டார். அவர் புக்கப்பட்டணம் எடுத்துச் செல்லப்பட்டார். அங்கே அவரது உயிர் பிரிந்தது. அவரது உறவினர் “சாயிபாபா அவளது கடைசிக் காலத்தில் அவள் வாயில் தண்ணீர் ஊற்றுவதாக வாக்குறுதி தந்தாரே. அவர் வந்தாரா? எங்கே இருக்கிறார்?” என்று கே-யும் கிண்டலுமாகக் கூறினர்.
பாபா சென்னையி-ருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது, சுடுகாடு வழியாகச் சென்றார். கட்டைகள் அங்கே அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. பாபா செல்வதை நிறுத்தி, “யார் தகனம் செய்யப்பட இருக்கிறார்கள்” என்று கேட்டார். சலவைத்தொழிலாளி “ஸ்வாமி, சுப்பம்மா மூன்று நாட்களுக்கு முன்னால் காலமானார்” என்று கூறினார். ஸ்வாமி அவள் உடல் வைக்கப்பட்டிருந்த வீட்டிற்குச் சென்றார். சுப்பம்மாவின் சகோதரி அவரைக் கண்டதுமே “பாபா, நீங்கள் வருவீர்கள் என்று காத்துக்கொண்டே இருந்தாள். கடைசி நேரத்தில் நீங்கள் ஊற்றும் நீருக்காக ஏங்கிக்கொண்டே இருந்தாள். கடைசியில் ஏமாந்து இறந்து போனாளே” என்று கதறினாள். ஸ்வாமி “அவ்வாறு நடக்காது” என்று கூறினார். அவர் சிறிது தண்ணீர் கேட்டார். சுப்பம்மாவின் முகத்தி-ருந்து துணியை விலக்கினார். மூன்று நாட்கள் கடந்துவிட்டதால் சுப்பம்மா உடல்மேல் எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. “சுப்பம்மா” என்று ஸ்வாமி அன்புடன் அழைத்தார். அவள் கண்களைத் திறந்தாள், ஸ்வாமியின் கைகளைப் பற்றிக்கொண்டாள். அழுதாள். அவர் அவளது முகத்தில் இருந்த கண்ணீரைத் துடைத்தார். “இப்போது நீ உன் கண்களை நிம்மதியுடன் மூடிக் கொள்ளலாம்” என்று கூறினார். அவளது வாயினுள் புனித நீரை ஊற்றினார். தனது வாக்குறுதியைக் காப்பாற்றினார்.
ஸ்வாமியின் குழந்தைப்பருவக் கதைகளை இதுவரை கேட்டுக்கொண்டிருந்தோம். இதன்மூலம், ஸ்வாமி மாணவராக இருந்த காலத்திலேயே முன்னுதாரணமாக வாழ்ந்தார் என்று அறிகிறோம். குழந்தைப் பருவத்தில் அவர் அனுபவித்த துன்பங்களை அடைவதற்கு அவசியமே இல்லை. அவற்றை அவர் தாங்கிக் கொண்ட முறை நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக அத்தகைய துன்பங்கள் அவருக்கு நேர்ந்தன. ஆகவே, அவரது மாணவர்களாகிய நாமும் பணத்தையோ, நேரத்தையோ, வீண்செய்யாமல் வாழவேண்டும், நல்ல எண்ணங்கள், நல்ல பழக்கங்கள், நல்ல செயல்கள் ஆகியவற்றை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
“உன் வாழ்க்கைக்குக் கடவுளை ஆதாரமாகக் கொள், கடவுளை மகிழச் செய், உன் வாழ்க்கையை மீட்டுக் கொள்” என்று ஸ்வாமி சொல்லுகிறார்.