சில அற்புதங்கள்
சில அற்புதங்கள்
உணவு பெருகிய அற்புதம்
தன்னை அறிவித்துக் கொண்டபின் சாயிபாபா உரவகொண்டாவி-ருந்து திரும்பி பர்த்திக்கு வந்து, சுப்பம்மாவின் வீட்டில் தங்கினார். அவள் அன்புடனும் பாசத்துடனும் பராமரித்தாள். தனது வசதியான வீட்டில் அனைத்து பக்தர்களையும் வரவேற்றாள். பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததும், ஒரு கொட்டகை (ள்ட்ங்க்) கட்டப்பட்டது. மாதங்கள் செல்லச் செல்ல, அது பெரிதாக்கப்பட்டது. இருந்தாலும் சாயிபாபா தன்னைப்பார்க்க வரும் அனைவருக்கும் உணவளிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
சுப்பம்மா வீட்டி-ருந்த மூதாட்டி, ஓர் அற்புத அனுபவத்தைக் கூறுகின்றார். அடிக்கடி யாத்ரீகர்களுக்கு சமைக்கப்பட்ட உணவு போதாது என்ற நிலை ஏற்படும்போது, பாபா இரண்டு தேங்காய்களைக் கொண்டுவரச் சொல்வார். ஒன்றை மற்றொன்றுடன் மோதி இரண்டு சரிபாதியாக உடைப்பார். இளநீரைச் சமைத்த அரிசிச் சோற்றிலும், மற்ற உணவுப் பண்டங்களிலும் தெளித்து, அன்று வரும் எல்லோருக்கும் உணவைப் பரிமாறும்படி சைகை காட்டுவார். உணவு போதுமானதாக இருக்கும்.
நினைத்ததைத் தரவல்ல மரம்
வருகின்ற யாத்ரீகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. பழைய ஷெட்டில் பிரார்த்தனைகளும், பஜனைகளும் நடத்துவதற்கு இடம் போதவில்லை. பாபா பக்தர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு ஒவ்வொரு மாலையும் சித்ராவதி நதிப்படுகைக்குச் செல்வதுண்டு. அங்கு பஜனைகள் நடைபெறும். அப்போதுதான், சித்ராவதி நதியின் இடது கரைமேல் உள்ள குன்றின் உச்சியில் தனியாக வளர்ந்திருந்த புளியமரம், கல்பதரு (விருப்பத்தை நிறைவேற்றும் மரம்) என்ற புகழ் பெற்றது. அப்போது, பாபா, பக்தர்களை அம்மரத்துக்கு இட்டுச் சென்று அதனின்று பலவகைப் பழங்களைப் பறிப்பார். ஒரு கிளையி-ருந்து ஆப்பிள், இன்னொரு கிளையி-ருந்து மாம்பழம், மூன்றாவது கிளையி-ருந்து ஆரஞ்சு, நான்காவது கிளையி-ருந்து பேரிக்காய், ஐந்தாம் கிளையி-ருந்து அத்திப்பழம். இவ்வாறு பல பழங்களைப் பறிப்பார். ஸôயிபாபா கூறுவதுபோல எந்த மரத்தையும் அவர் கல்பதருவாக மாற்றமுடியும். ஏனெனில் அவரே ஒரு கல்பதரு.
அந்தப் புளியமரம் உள்ள குன்றின் உச்சியில் பாபா அதிருஷ்டம் வாய்ந்த பக்தர்களுக்கு அற்புதமான பலகாட்சிகள் தந்தார். சிலர் பாபாவின் தலையைச்சுற்றி வட்டமாக ஒளி (ஹன்ழ்ஹ) பீறிட்டு வெளிவருவதைக் கண்டனர்.
சிலர் பிரம்மாண்டமான ஷீரடி சாயிபாபா, இனந்தெரியாத பேரொளியினால் பிரகாசமாக இருப்பதைக் கண்டனர். சிலர் முழுநிலவிலுள்ள சத்யசாயி பாபாவின் முகத்தைக் கண்டனர். அத்துடனே நெருப்புத் தூணொன்று தோன்றுவதையும் கண்டனர். பல பக்தர்களுக்கு பாபா தசாவதாரங்களின் காட்சியை தந்திருக்கிறார்.
கிருஷ்ணனாக சாயி
ஒருநாள் பாபா ஒரு மரக்கிளையில் ஊஞ்சலைக் கட்டி வேகமாக மேலும் கீழும் ஆடினார். அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். திடீரென்று அவர், கீழே உட்கார்ந்திருக்கும் பக்தர்களைப் பார்த்து, பார் என்றார். அனைவரும் மேலே பார்த்தார்கள். மனங்கவரும் வண்ணமிகு ஸ்ரீகிருஷ்ணன், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஊஞ்ச-ல் ஆடுவதைக் கண்டனர். சிலர் நினைவிழந்தனர். பாபா, தன் கையசைவினால் அட்சதைகளை வரவழைத்து அவர்கள் மேல் தூவி நினைவு பெறச் செய்தார்.
இன்னொரு சமயம், பாபா, ஸ்ரீகிருஷ்ணனின் தீவிர பக்தரிடம் “கிருஷ்ணனின் புல்லாங்குழ-சையினைக் கேட்க விருப்பமா?” என்று கேட்டார். சத்யாவின் மார்பில் தன் காதை வைத்துக் கேட்கும்படி அவரிடம் கூறினார். அவ்வாறு காதை வைத்தபோது கிருஷ்ணனின் குழலோசையைக் கேட்டு பரவசமடைந்தார். நாமும் மனக்கோணல் இல்லாது, ஷட்ரிபுக்களி-ருந்து (காமம், குரோதம், லோபம், மோஹம், மதம், மாத்சரியம்) விடுபட்டு புல்லாங்குழல் போன்று நேராகவும், வெறுமையாகவும் இருக்கவேண்டும் என்று பாபா கூறுகிறார். அப்போதுதான் நாம் அவரது கைகளில் கருவிகளாக இருக்க முடியும்.
வெங்கம்மாவிற்கு படம்
ஷீரடிசாயி பாபாவைப் பற்றி பர்த்தி பாபா பல பஜனைப் பாடல்களை இயற்றியிருக்கிறார். பாபாவின் சகோதரியான வெங்கம்மா ஷீரடி சாயிபாபாவின் படம் ஒன்று தரும்படி பாபாவை மன்றாடிக் கேட்டுக் கொண்டிருந்தார். குறிப்பிட்ட வியாழக்கிழமை யன்று அவளுக்குப் படம் கிடைக்கும் என்று பாபா கூறியிருந்தார். குறிப்பிட்ட வியாழக்கிழமைக்கு முந்திய நாள் அவர் உரவகொண்டா சென்றார். அவள் இது அனைத்தையும் மறந்துவிட்டாள். என்றாவது ஒருநாள் கிடைக்கும் என்று அவள் நம்பினாள். இரவு சூழ்ந்தது. புட்டபர்த்தியில் அனைவரும் தூங்கிவிட்டனர். யாரோ ஒருவர் வாயிற்கதவின் வெளியில் இருந்துகொண்டு “அம்மாயி, அம்மாயி” என்று அழைத்தனர். அந்த அழைப்பு நின்று விட்டதால், சகோதரியும் வெளியே சென்று கதவைத் திறக்கவில்லை. யாரோ ஒருவர் அண்டைவீட்டுக்காரரைக் கூப்பிடுகிறார் என்று நினைத்தார். அவள் படுக்கையில் படுத்திருந்தபோது, அதே அறையில் தானியப் பைக்குப் பின்னால் கரகரவென்று சத்தம் வருவதைக் கேட்டாள். அது பாம்பு அல்லது எ-யின் சத்தமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டாள். அவள் விளக்கேற்றி கொண்டு தேடினாள். அவள் ஷீரடி சாயிபாபாவின் படத்தைக் கண்டாள். அந்த வேளையில் உரவக்கொண்டாவில் இருந்த பாபாவினால் எவ்விதமாகவோ அந்தப்படம் கொடுக்கப்பட்டது, அந்தப்படம் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
தீப்பிடித்த குடிசை
ஒரு சமயம் ஸ்வாமியிடம் பொறாமை கொண்ட சிலர் அவர் தூங்கிக் கொண்டிருந்த குடிசைக்குத் தீ வைத்தார்கள். ஆறி-ருந்து ஒன்பது வயதிலான சுமார் 10 குழந்தைகள் வெளியே தூங்கிக் கொண்டிருந்தார்கள். போக்கிரிகள் சத்யாவின் அறையை வெளிப்புறம் பூட்டிய பிறகு கூரைக்குத் தீ வைத்தனர். குழந்தைகள் “ராஜு, ராஜு”, என்று பலமாக சப்தமிட்டனர். சத்யா சிறு ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்து “பயப்படாதீர்கள்” என்று கூறிப்புன்னகை புரிந்தார்.
குழந்தைகள் கண்ணை மூடிக்கொண்டு “ராஜு, ராஜு” என்று மந்திரம் போல சொல்-க் கொண்டே இருந்தனர். கூரை வைக்கோலால் வேயப்பட்டதால், நெருப்பு மிகப்பெரும் தீயாக மாறியது. திடீரென்று மேகம் குமுறியது. குடிசையின் அளவுக்கு மட்டும் பலத்த மழை பெய்தது. வேறு எங்கும் பெய்யவில்லை. நெருப்பு முழுவதுமாக அணைக்கப்பட்டது. குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. “ராஜு ராஜு ! எத்தகைய அற்புதம்! நீயில்லாவிடில் நாங்கள் வாழவே முடியாது” என்று சப்தமிட்டனர்.
ஸ்வாமி கூறுவார்: “தர்ம ஏவ ஹதோ ஹந்தி தர்மோ ரக்ஷதி ரக்ஷதஹ”, “நீ தர்மத்தை அழித்திருந்தால், நீ தர்மத்தால் அழிக்கப்படுவாய், நீ தர்மத்தைக் காப்பாற்றினால், நீ தர்மத்தால் காப்பாற்றப்படுவாய்.”
பஞ்சபூதங்களின் மீது ஸ்வாமிக்குள்ள சர்வ வல்லமையினை ஒரு கணப்பொழுதில் புரிந்து கொள்ள இயலுகிறது. சுப்பம்மாவுக்கு மறுநாள் இந்த சம்பவம் பற்றி தெரியவந்தது. அவர் தீவிரமாகத் தேடி முயற்சி செய்து, குற்றவாளிகளைப் பிடித்தார். அவர் மிகுந்த செல்வம் படைத்தவர். கிராமத்திலுள்ள நிலங்கள் அனைத்தும் அவருக்குச் சொந்தம். ஆகவே கிராமத்தி-ருந்து குற்றவாளிகள் விரட்டப்படவேண்டுùன்று உத்தரவிட்டார். ஆனால் சத்யா சுப்பம்மாவின் கைகளைப் பற்றிக் கொண்டு, “தயவு செய்து அவர்களைத் தண்டிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து அவர்களை மன்னித்துவிடுங்கள். தயவு செய்து அவர்களை விரட்ட வேண்டாம்” என்று கேட்டுக் கொண்டார். சாயியின் அன்பு நிறைந்த, மன்னிக்கின்ற, கருணை மிகுந்த உள்ளம் இத்தகையது.
நஞ்சு கலந்த வடைகள்
சிலர் தமது அறியாமை காரணமாக சாயிக்கு விஷம் கொடுக்க முயற்சி செய்தனர். ஒரு திருவிழா நாள். ஸ்வாமி சில பக்தர்களுடன் கிராமத்தி-லுள்ள சில வீடுகளுக்குச் சென்றார். ஒவ்வொரு வீட்டிலும் சிறிது உணவு உண்டார். ஆனால் நஞ்சு கலந்த உணவு தயாரிக்கப்பட்ட வீட்டுக்குச் சென்றபோது, அவர் அதிக உற்சாகத்தை வெளிப்படுத்தி, அந்தக் குறிப்பிட்ட உணவுப் பண்டத்தை அதிகம் கேட்டு வாங்கி உண்டார். உடன் இருந்தவர்கள் நஞ்சு கலந்த உணவை அருந்த விடாமல் பாபா கவனித்துக் கொண்டார். அவர் சுப்பம்மா வீட்டுக்குத் திரும்பியபோது, அந்தக் குறிப்பிட்ட வீட்டி-ருந்து அழைப்பு வந்ததன் ரகசியத்தைப் பலரிடம் தெரிவித்து “இது அறியாமை மிகுந்த பயனற்ற செயல்” என்று கூறி பலமாக சிரித்தார். சில நேரங்கழித்து முழுவடைகளாக வாந்தி எடுத்தார். சுற்றியிருந்தவர்கள் அது கெடுதல் விளைவிக்கும் நஞ்சுதான் என்று பரிசோதித்து ஊர்ஜிதம் செய்தனர்.
இது தனக்குக் கெடுதல் விளைவிக்கும் நோக்கத்துடன் செய்யப்படவில்லை என்றும், தன்னால் இந்த நஞ்சின் விளைவுகளைத் தாங்கிக் கொள்ள இயலுமா? என்று பரீட்சை செய்யப்பட்டதாகவும் கூறினார். குறிப்பிட்ட அந்தப் பெண்மணியை மன்னித்தது மட்டுமல்ல, சில நாட்கள் கழித்து கார்த்திகேயனின் சிலை ஒன்றும் வரவழைத்துக் கொடுத்தார். தீமை செய்தோருக்கு நல்லது செய்யும் பண்புக்கு இதைவிடச் சிறந்த உதாரணம் வேண்டுமா?
அதே பாபாதான் இவர்
ஈஸ்வரம்மா, சத்யா ஒரு சமயம் தனக்கு எதிரில் வயதான தாடியுள்ள மனிதராகக் காட்சியளித்தது பற்றி சுப்பம்மாவிடம் கூறினார். இன்னொரு சமயத்தில், “உற்றுக் கேளுங்கள் ஷீரடி சாயி இங்கு இருக்கிறார்” என்று கூறிய போது தனக்கு ஏற்பட்ட பரவச அனுபவத்தைப் பற்றிப் பேசுகிறார். அவளும் அந்த அறையி-ருந்த ஒவ்வொருவரும் கனத்த மரப்பாதுகைகள் அணிந்த காலடிச் சப்தம் முன்னேறி வருவதைக் கேட்க முடிந்தது. பாபா உட்கார்ந்திருக்கும் இடத்தை அடைந்ததும் அந்த காலடிச் சப்தம் நின்றது. முதன்முதலாக இந்த சப்தத்தைக் கேட்டபோது, ஈஸ்வரம்மா, “யார் இங்கு காலணிகள் அணிந்து வருவது” என்று சிறிது சினத்துடன் கேட்டார். அவ்வளவு தத்ரூபமாக அந்த உணர்வு இருந்தது.
தாயின் அனுபவம் இவ்வாறிருக்க, தந்தை பெத்த வெங்கப்பராஜு வேறொரு நிகழ்ச்சியை வருணித்தார். ஒருநாள் மாலையில் பெனுகொண்டாவி-ருந்து வந்த சிலர் (அவர்களில் வழக்கறிஞரான கிருஷ்ணமாச்சாரியும் ஒருவர்) வெங்கப்பா ஒரு ஏமாற்றுக்காரர் என்றும், கள்ளங்கபடமற்ற கிராம மக்களை கற்பனைக் கதைகள் கூறி, தவறான வழியில் இட்டுச் செல்கிறார் என்றும் குற்றஞ்சாட்டினர். வெங்கப்பா மிகவும் மனக்கலக்கம் அடைந்தார். சத்யாவிடம் அவரது தெய்வத்துவத்தை சந்தேகப் பிராணிகளான அவர்களுக்கு நிரூபித்துக் காட்டும்படி சவால் விட்டார். அந்த சமயம் பெத்த வெங்கப்பராஜுவின் வீட்டில் சத்யா தங்கியிருந்தார். சுப்பம்மா இந்த சந்தேகங் கொண்டவர்களைப் பெத்த வெங்கப்ப ராஜுவின் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.
பிறகு வீட்டின் உள்ளே ஓர் அறையில் சத்யா சுப்பம்மாவுக்கும், பெனுகொண்டாவி-ருந்து வந்தவர்களுக்கும் ஷீரடிசமாதியின் முழுக்காட்சியைக் காண்பித்தார் (அது ஷீரடி சாயிபாபாவின் புனித சமாதி). அவர்கள் வெட்டவெளியில் நின்று கொண்டு ஷீரடியில் உள்ள காட்சியைக் காண்பது போலவும், அவர்களுக்கு முன் முழுநிலப்பரப்பு பல மைல்கள் விரிந்து இருப்பது போலவும், அவர்களுக்குத் தோன்றியது. சமாதியில் மலர்கள் தூவப்பட்டிருப்பதையும், நறுமணமிக்க ஊதுபத்திகள் எரிவதையும், தூபத்தின் நறுமணத்தையும் உணர்ந்தனர். ஒருவர் மூலையில் உட்கார்ந்து மந்திரங்கள் கூறிக்கொண்டிருப்பதையும் கண்டனர்.
அங்குள்ள ஹனுமன் கோவிலையும், தொலைவிலுள்ள வேப்ப மரத்தையும் பாபா சுட்டிக்காட்டினார். பெத்த வெங்கப்பராஜு, இந்த பதினாறு வயதுச் சிறுவன் உண்மையிலேயே ஷீரடி சாயி பாபாவின் அவதாரம் என்று உறுதியாக நம்பினார்.
ஒரு சமயம் சென்னையி-ருந்த ஒரு பெண்மணி, தனது மகன் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்ததால் என்ன செய்வது என்றறியாது திகைத்தாள். ஷீரடி சாயி பாபாவின் படத்துக்கெதிரே அவனைப் படுக்க வைத்தாள். பல வருடங்கள் கழித்து அவள் சத்யசாயி பாபாவைப் பற்றி கேள்விப்பட்டாள். உயரமாக வ-மையுடன் கூடிய தன் மகனுடன் பர்த்திக்கு வந்தாள். பாபா அவர்களைக் கண்டதும் அவர் அன்னையை நோக்கி “15 வருடங்களுக்கு முன்னாலேயே இந்தப் பையனை என்னிடம் பராமரிக்க ஒப்படைத்தாய் இல்லையா?” என்று கேட்டார்.
ஆம், அதே பாபாதான் மறுபடியும் வந்திருந்தார். இரண்டு அவதாரங்களிலும் ஒரே விதமான எளிமை, அனைத்தையும் அரவணைக்கும் அன்பு, சர்வ வியாபகம், சர்வ வல்லமை, சர்வ ஞானம் ஆகியவற்றைக் காணலாம்.