அவரது பிறப்பு

Print Friendly, PDF & Email

அவரது பிறப்பு

ஸ்வாமி விவேகானந்தர், துறவரத்துக்கு முன் நரேந்திரநாத் தத்தர் என்ற பெயரில் விளங்கினார் . 1863ஆம் ஆண்டு ஜனவரி 12ம் நாள் விஸ்வநாத தத்தருக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் தவப் புதல்வராகப் பிறந்தார். கல்வி அறிவிலும், தர்மசிந்தனையிலும் புகழபெற்று, செல்வமிகுந்த சமூகத்தில் அந்தஸ்து மிக்க உயர்ந்ததொரு குடும்பமாக தத்தர் குடும்பம் விளங்கியது. நரேந்திர நாதரின் பாட்டனாரான துர்கசரண்தத்தர், வட மொழியிலும், பெர்சியன் மொழியிலும் சிறந்த அறிஞராகத் திகழ்ந்தார். அவருக்கு விஸ்வநாதன் என்ற மகன் பிறந்ததும், துறவறம் பூண்டு வீட்டினை விட்டுச் சென்றார்.

விஸ்வநாதர் கல்கத்தா உய்ரநீதி மன்றத்தின் வழக்கறிஞராகத் தொழில் புரிந்து வந்தார். அவரும் கல்வி கேள்வியினிற் சிறந்தவர். புவனேஸ்வரி தேவியும் கடவுட் பக்தி மிகுந்தவர். அவளுக்கு பெண் மக்களே பிறந்தனர் ; ஆகவே, அவளுக்கு ஆண் மகவு பிறக்க வேண்டுமென்று விஸ்வேஸ்வரப் பெருமானிடம் பிரார்த்தனை செய்து அவளுக்காகக் காணிக்கையும் செலுத்தும்படி வாரணாசியிலுள்ள அவள் உறவினரை வேண்டினாள். விரைவில் சிவபிரான் அவனது கனவில் தோன்றி, தானே அவளுக்கு மகனாகப் பிறப்பதாகக் கூரியருளினார்.

சிறு வயதில் நரேந்திரனுக்கு விளையாட்டும், வேடிக்கைகளும் மிக அதிகம். அத்துடன் கூட ஆன்மிக நாட்டமும், அதிகம் இருந்தது. இராமர், சீதை, சிவன் போன்ற தெய்வங்களின் திருவுருவங்களை வழிபாடு செய்வதிலும் , விருப்பமுள்ளவராகத் திகழ்ந்தான். ராமாயத்திலிருந்தும் மஹாபாரதத்திலிருந்தும் அவனது அன்னை கூறிய கதைகள் , அவனது பிஞ்சு மனத்தில் அழியாத நல்லுணர்வினை ஏற்படுத்தின . சிங்கத்தின் கம்பீரம், இளவரசனின் மிடுக்கு இவற்றுடன் கூடிய வனப்புடனும் திகழ்ந்த அவன், இளகிய மனதுடையவனும் கூட, வறியவரும் மற்றவரும் தர்மம் வேண்டி வருகையில், கையில் கிடைத்தவற்றையெல்லாம் கொடுத்து விடுவான். இறை நாட்டத்தில் இடம் இடமாகத் திரிந்து செல்லும் துறவியர்களிடமும் புனிதர்களிடமும் அவன் மனம் இயல்பாகவே ஈடுபட்டு, அவர்களைப் போற்றியது . ஆய்ந்து அறியும் அறிவுக் கூர்மை இருந்ததால், எந்தக் கருத்தினையும் தர்க்கரீதியாக விளக்கி, அறிவுக்குப் பொருத்தமான காரணங்கள் கூறினாலன்றி ஒப்புக்கொள்வதில்லை. சிறு வயதிலிருந்தே பண்பட்ட இதயமும், கூர்ந்த மதியும் கொண்ட சிறந்தவனாகத் திகழ்ந்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: