உலக அரங்கில்

Print Friendly, PDF & Email

உலக அரங்கில்

ஸ்வாமி விவேகானந்தர் வரலாற்றுப் புகழ் பெற்ற அமெரிக்கா விஜயத்துக்கு பம்பாய்யிலிருந்து 1893ம் ஆண்டு மே மாதம் 31ந்தேதி கிளம்பினார்.

சீனா, ஜப்பான், கான்டன் வழியாகப் பிரயாணம் செய்து ஜூலை மதத்தின் இரண்டு அல்லது 3ம் வாரத்தில் சிகாகோ சேர்ந்தார். கான்டனில் சில பௌத்த மடங்களுக்கு விஜயம் செய்தார். ஜப்பானில், மக்களின் பரிசுத்தத்தையும், தொழில் முன்னேற்றத்தையும் கண்டு அதிசயித்தார். மேனாட்டினரின் ஆகத்திறனையும், செல்வ வளத்தையும் சிகாகோவில் கண்டு, அவரது மனம் குழந்தைபோல மயங்கியது. சமய மாநாடு செப்டம்பருக்கு முன் கூடப் போவதில்லை என்பதையும், சான்றிதழ் இல்லாமல் யாரும் மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்க இயலாது என்பதையும் கேள்வியுற்று மிகவும் ஏமாற்றமடைந்தார். அடுத்தப்படி செய்வதென்ன என்றறியாமல் மயங்கினார்; இறைவனின் திருவுள்ளப்படி நடக்கட்டும் என்று நிச்சயித்துக் கொண்டு, சிகாகோவை விட விலைவாசி குறைவென்று கேள்விப்பட்டதால் பாஸ்டனுக்குச் சென்றார். ரயிலில் அவர் மிஸ் காதரீன் ஸான்பான் என்ற அம்மையாருடன் பழக நேரிட்டது. அவர் விவேகனந்தரைக் தம் விருந்தினாராக பாஸ்டனில் தங்கும்படி உபசரித்தார். அவர் மூலம், விவேகானந்தர் ஹார்வார்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜான் ஹென்றி ரைட் என்பவருக்கு அறிமுகமானார். பேராசிரியர், தத்துவக் கோட்பாடுகளில் விவேகனந்தருக்குள்ள ஆழ்ந்த ஞானத்தையும், பரந்த அறிவையும் கண்டு திகைப்படைந்தார். சமய மகாநாட்டின் தலைவருக்கு விவேகானந்தரை அறிமுகப்படுத்தும் கடிதம் ஒன்று எழுதிக்கொடுத்தார். அதில் கீழ்க் கண்டவாறு புகழ் மாலை சூட்டினார்: ‘இங்குள்ள கற்றறிந்த பேராசிரியர்கள் கற்றறிந்த அனைத்தும் இவரது அறிவுக்கு ஈடாகா’! விவேகானந்தரிடம் அவர் ‘உங்களிடம் சான்றிதழ் கேட்பது ஒளிவீச அனுமதி உண்டா என்று சூரியனைக் கேட்பது போல உள்ளது !’ என்றார்.

சமய மாநாடு ஆரம்பமாவதற்கு இரண்டு நாட்கள் முன்னால் விவேகானந்தர் சிககோவுக்குத் திரும்பினார்; ஆனால் கிழக்கத்திய நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடவசதி செய்து கொடுக்க அம்மைக்கப்பட்டுள்ள குழுவினரின் விலாசம் தொலைந்து விட்டதை அறிந்து மனம் கவன்றார். அவர் சென்றவிடம் ஜெர்மன் மொழி பேசும் மக்கள் இருக்குமிடம்; ஆகவே அவர் கூறுவதை யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. மிகவும் அலுப்படைந்து, ரயிலடியில் சாமான்கள் போடும் கிடங்கில் இருந்த ஒரு பெரிய பெட்டியின் மேல் படுத்துத் தூங்கினார். மறுநாள் காலை இந்தக் கஷ்டத்திலிருந்து தனக்கு உதவி செய்யக் கூடியவர் யாருள்ளனர் என்று தேடிச் சென்றார். நிறபேதத்தால் இவருக்கு உதவி உடனுக்குடன் கிடைக்கவில்லை. இந்தப் பயனற்ற முயற்சியினால் மிகவும் களைப்படைந்து, இறைவனின் திருவுள்ளப்படி நடக்கட்டும் என்று, சாலையோரத்தில் உட்கார்ந்தார். திடீரென்று அவருக்கு எதிரே இருந்த நாகரீகம் மிகுந்த வீட்டிலிருந்து உயர் குடும்பத் தோரணையுள்ள சீமாட்டி வெளிவந்தார்; இவர நெருங்கி, நடந்ததை அறிந்து, அவருக்கு உதவிசெய்வதாக வாக்களித்தார். அவர் தான் திருமதி ஜார்ஜ் டபிள்யு ஹேல்; விவேகனந்தர் அமெரிக்காவில் இருந்த போதெல்லாம் பெரும்பாலும் அவர் வீட்டிலேயே தான் தங்கினார். ஹேல் குடும்பத்தினர் அனைவரும் விவேகானந்தரை உள்ளார்ந்த நம்பிக்கையுடன் பின்பற்றினார்.

1893ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ந் தேதி சமய மாநாடு துவங்கியது. கலை அரங்கத்தில் உட்காருமிடத்தில் அந்நாட்டின் கலாச்சாரத்தின் தலைசிறந்த பிரதிநிதிகள் 7000 பேர் நெருங்கி உட்கார்ந்திருந்தனர். உலகின் எல்லா மூலைகளிலிருந்தும் ஒவ்வொரு அமைப்பின் பிரதிநிதியும் மேடை மேல் வந்து அமர்ந்திருந்தனர். விவேகானந்தர் இந்து மதத்தின் பிரதிநிதி என்று கொள்ள இடமிருந்தது. உண்மையில் தனிப்பட்ட மதத்தை விட இன்னும் ஆழ்ந்த ஒன்றை விளக்க வந்தார் என்பதை எல்லோரும் பிறகு உணர்ந்தனர். ஆன்மீக பேருண்மையின் பிரபஞ்சத் தத்துவத்தைப் பண்டைக் கால முதல் விளக்கப்பட்டுள்ள இந்திய கோட்பாட்டினை உணர்த்துவதே அவரது இலட்சியமாக இருந்தது. விவேகானந்தர், இவ்வளவு பேரடங்கிய, மதிப்பிற்குரிய கூட்டத்தில் இதற்கு முன் பேசியதே இல்லை அவர் உள்ளே மிக நடுக்கமுற்றார்; அவர் பேசும் முறை வந்தபோது, கலைமகளாம் சரஸ்வதியின் மலரடிகளை மனத்தால் போற்றி, ‘அமெரிக்க சகோதர சகோதரிகளே’ என்ற அழைப்புடன் பேச்சினைத் துவங்கினார். உடனே, அவ்வளவு பெரிய கூட்டத்திலிருந்து இடியோசை போன்ற கரவொலி எழுந்தது. ஒலி அடங்க இரு நிமிடங்களாயின. தன்னால் விளக்க இயலாத ஏதோவொன்றிற்குப் புகழாரம் சூட்டும் வகையில் ஏழாயிரம் பேரும் எழுந்து நின்றனர். அவர் மேலும் தொடர்ந்து கூறினார். “நீங்கள் எங்களுக்கு இப்போது அளித்த மனமுவந்த இனிமையான வரவேற்பினால் என் இதயம் சொல்ல இயலாத உவகையடைந்து நிறைந்துள்ளது. உலகில் மிகவும் தொன்மையான சந்நியாச தர்மத்தில் பெயரால் உங்களை வாழ்த்துகிறேன்; எல்லா வகைகளிலுமுள்ள கோடிக்கணக்கான இந்து மக்களின் சார்பில் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்”.

மூன்று அல்லது நான்கு நிமிடங்களே கொண்ட மிகச்சிறிய பேச்சு அது ஆயினும், ஒரே கடவுளை வணங்குவதற்கான பல்வேறு வழிகள் தாம் பல்வேறு சமயங்களில் என்ற இந்துமத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு உலகனைத்தும் அரவணைக்கும் சகிப்புத்தன்மையின் தொனியுள்ள அப்பேச்சு சமய மாநாட்டினரை மிகவும் கவர்ந்தது. ‘உலகெங்கும் சகிப்புத் தன்மை நிலவவேண்டும் என்பதை நாங்கள் நம்புவது மட்டுமல்ல, எல்லாமதங்களும் உண்மையென்றும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா மதங்களிலிருந்தும், விரட்டப்பட்டு, துன்புறுத்தப்பட்டு அகதிகளாக வந்த அனைவருக்கும் புகலிடம் கொடுத்து வந்துள்ள நாட்டினைச் சேர்ந்தவன் என்ற முறையில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்”. முடிவில் கூறினார்: இந்தக் குழுவினரை கௌரவிக்கும் வகையில் இன்று காலையில் எழுப்பப்பட்ட மணியோசை ஒரே லட்சியத்தை நாடிச் செல்லும் பல்வகைப்பட்ட மனிதரிடையே நிலவும் வெறுப்புணர்வினையும் பேனாமுனையாலும், கத்தியாலும் அளிக்கப்படும் கொடுமைகளனைத்தையும் அழிக்கும் சாவின் மணியோசை என்று நான் தீவிரமாக நம்புகிறேன்”.

ராமகிருஷ்ணரின் பசுமையான அனுபவத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட எல்லா மதங்களின் ஒருமை தத்துவத்திலும், சகிப்புத்தன்மையிலும் உறுதியும் நம்பிக்கையும் கொண்ட ஒரு இந்துவினால் தான் அத்தகைய மாட்சிமை பொருந்திய கூட்டத்தில் அவ்வாறு பேச இயலும். அவரது செவங்கியும், ஒளிவீசும் முகமும், அவரது மாட்சிமையும், உள்ளத்தை உருக்கும் நாணய மிகுந்த எளிய சொற்களும், எல்லோர் மனத்தையும் கவர்ந்தன. அடுத்த நாள், பத்திரிக்கைகள் அனைத்தும், சமய மாநாட்டிற்கு வந்த மிகச்சிறந்த மனிதர் அவரே என்று வர்ணித்தன. திருவோடு ஏந்திய எளிய துறவி, ஆன்மீக அரசராக விளங்கினார்.

In the address at the final session on 27th September, the Swami rose once again to declare clearly that.” the unity of religions of which so much had been said in the Parliament was not to be attained by the triumph of any one of the religions and the destruction of others. “Do I wish that the Christian would become a Hindu? God forbid. Do I wish that the Hindu or a Buddhist becomes a Christian? God forbid. The Christian is not to become a Hindu nor a Hindu or a Buddhist to become a Christian. But each religion must assimilate the spirit of the others and yet preserve its individuality and grow according to its law of growth.”

Swami Vivekananda stayed in America for about three years after his Chicago success and continued giving discourses day in and day out. He had come to America to speak for his native land and tell America about India’s poverty and appeal to them for their help. But he also imparted an important message to the entire West. He asked his listeners to forsake their materialism and learn from the ancient spirituality of the Hindus.

What he was working for was an exchange of values. He recognized great virtues in the West energy, initiative and courage, which he somehow found lacking in India.

In his Vedantic lectures he would always say,” God is in each one of us; see no difference between an ant and an angel.” In other words, each one of us was born to re-discover his own divine nature. His favourite story was that of a lion who imagined himself to be a sheep, until another lion showed him his reflection in a pool. “And you are lions”, he would tell his hearers. “You are pure, infinite and perfect souls. He, for whom you have been weeping and praying in churches and temples, is your own self.” He spoke little about the cults of Hinduism in which devotion to Rama, Kali, Vishnu, Krishna, etc., is practiced by various sects. It was only occasionally that he would refer to his own personal cult and reveal that he had a Master who was a Divine incarnation and had lived till ten years ago. His restraint in glorifying Sri Ramakrishna in the West was explained by him by the words,” If I had preached the personality of Sri Ramakrishna, I might have converted half the world, but that would have been short-lived. So, I preached Sri Ramakrishna’s principles. If people accept the principles, they will eventually accept the personality.”

He paid a short visit of three months to England too and found that the response to his message there was also equally great. Here, he met the great savant Max muller. He then wanted to consolidate his work in America and organized the Vedanta Society of New York, which is a non- sectarian body with the aim of preaching Vedanta and applying the universal principles as basic to all religions. He wrote books on Raja yoga and Jnana Yoga. He toured Europe also. He gathered around him a number of ardent disciples wherever he went, notable among them being Capt. Sevier and his wife and Miss Margaret Noble who is better known as Sister Nivedita. Now his own motherland was calling him and was eager in its own right to receive his message. So, from London, he started for India towards the end of 1896.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: