Belur Math – Tamil
Belur Math
பேலூர் மடம் அமர்நாத்தின் புனித யாத்திரயிலிருந்து கல்கத்தவுக்குத் திரும்பியதும், விவேகனந்தர் பேலூர் மடத்தைக் கட்ட ஆரம்பித்தார். கல்கத்தாவிலிருந்து ஐந்து மைல்கள் தொலைவில் கங்கையின் மேற்குக் கரையில் அது அமைந்தது. 1899ம் ஆண்டில் ஜனவரி மாதம் துறவிகள் புது மடத்துக்குக் கூடிப்புகுந்தார்கள். நிவேதிதா பெண்கள் பள்ளிக்கூடம் துவக்கப்பட்டது. உத்போதகன் என்ற மாதாந்திர சஞ்சிகை அப்போது துவக்கப்பட்டது. அவரது பிரிட்டிஷ் சீடர்களான கேப்டன் சேவியரும் அவரது மனைவியும் இமாலயத்தில் மாயவிதி (அல்மோரா)வில் அத்வைத ஆஸ்ரமம் கட்டினார்கள். ஆங்கில மாத சஞ்சிகையான பிரபுத்த பாரதி ஆரம்பிக்கப்பட்டது. இந்தக் காலத்தில், ஸ்வாமி மடத்திலுள்ள சந்நியாசிகளையும் பிரம்மசாரிகளையும், சக மனிதர்களின் நன்மைக்காகவும், சொந்த விடுதலைக்காகவும், இடையறாத சேவையும் ஆழ்ந்த ஆன்மீகப் பயிற்சியும் கொண்ட வாழ்வினை வாழ ஊக்குவித்து வந்தார். “ஆத்மனோ மோக்ஷார்த்தம் ஜகத் ஹிதாயச” என்று அவர் கூறுவது வழக்கம். மடத்து வேலைகளைப் பற்றிய இடைவிடாத சிந்தனையினால் அவரது உடல் நலம் மிகவும் குன்றியது. அமெரிக்காவுக்கு திரும்பவரும்படி அங்குள்ள சீடர்கள் இடைவிடாது கேட்டுக் கொண்டதன் பயனாக அவர் இரண்டாம் தடவை அமெரிக்க சென்றார்.