எப்போதும் உதவுங்கள்
எப்போதும் உதவுங்கள்
விளையாட்டின் நோக்கம்:
ஒரு சுவாரஸ்யமான விளையாட்டு.
கற்பிக்கப்படும் குணங்கள்:
அனைவருக்கும் சேவை மனப்பான்மையுடன் உதவி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துதல்.
தேவையான பொருட்கள்:
அட்டைகள்
தயாரித்துக்கொள்ள வேண்டியவை:
கதாபாத்திர அட்டைகள் மற்றும் செயல் அட்டைகள் முதலியவற்றை கீழ்கண்டவாறு தயாரிக்கவேண்டும்.
விளையாட்டு முறை:
- வகுப்பை இரண்டு குழுக்களாக பிரித்துக்கொள்ள வேண்டும்.
- உதவி தேவைப்படுபவர்கள் ஒரு குழுவில்(Team A) இருக்க வேண்டும்.
- உதவி செய்பவர்கள் மற்றொரு குழுவில்(Team B) இருக்க வேண்டும்.
- குழுவின்(Team A) ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு கதாபாத்திர அட்டையை எடுத்து அட்டையில் சித்தரிக்கப்பட்ட நபரை போல் நடித்துக் காட்ட வேண்டும்.
- குழுவின்(Team B) ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு செயல் அட்டையை எடுத்து அவரது உதவி தேவைப்படும் தொடர்புடைய நபரை கண்டுபிடிக்க முயற்சி செய்ய வேண்டும்.
- ஜோடியை கண்டுபிடித்த பின் அவர்களுக்கு தேவையான செயலை செய்து காட்ட வேண்டும்.
- இதேபோல் குழுக்களை மாற்றி விளையாடலாம்.
- முதல் குழு(Team A) உதவி செய்பவர்களாகவும் இரண்டாவது குழு(Team B) தேவை உள்ளவர்களாகவும் மாறி விளையாடலாம்.