ஞாபக சக்தி விளையாட்டு

Print Friendly, PDF & Email
ஞாபக சக்தி விளையாட்டு
கற்பிக்கப்படும் நற்குணங்கள்:
  • நினைவுத் திறன்
  • கவனம்
  • கிருஷ்ணரின் பல்வேறு நாமங்களை அறிதல்
  • அந்நாமங்களின் ஆழ்ந்த உட்கருத்துக்களைப் புரிந்துகொள்ளுதல். பக்தி
ஆயத்தமாகுதல்:
  1. குரு பலகையில் (போர்ட்டில்), கிருஷ்ணரின் பல்வேறு நாமங்களை எழுதவேண்டும்
  2. பின்னர், கிருஷ்ணரின் பல்வேறு நாமங்களையும் அவற்றின் பொருளையும் குழந்தைகளுடன் கலந்துரையாடவேண்டும்.
விளையாட்டு:
  1. குழந்தைகளை ஒரு நிமிடத்திற்குள், அனைத்து பெயர்களையும் படிக்கச் சொல்லவேண்டும்.
  2. பின்னர், பலகையிலிருந்து(போர்டிலிருந்து) அனைத்து பெயர்களையும் அழித்துவிடவேண்டும்.
  3. இப்பொழுது, அந்த ஒரு நிமிடத்தில் அவர்கள் படித்த பெயர்களை எல்லாம் நினைவு படுத்தி எழுதச் சொல்லவேண்டும்.
  4. அதிக பெயர்களை எழுதும் குழந்தையே வெற்றி பெற்றவராவார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: