சமநிலை

Print Friendly, PDF & Email

சமநிலை

விளையாட்டின் நோக்கம்:

நாம் எதையும் எதிர்கொள்ளும் மனச் சமநிலை மற்றும் பிற சமநிலைகளை வலியுறுத்துவது.

கற்பிக்கப்படும் பண்புகள்:

கவனம்

அமைதி

உறுதி

தேவையான பொருட்கள்:

ஒரே எடை மற்றும் அளவு உள்ள இரண்டு (2) புத்தகங்கள்.

விளையாடும் முறை:
  1. குருவானவர் குழுவை இரண்டாக பிரித்து கொண்டு ஒவ்வொரு குழுவிடமும் உள்ள ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகம் கொடுப்பார்.
  2. குரு ஒரு குழுவில் உள்ள (Team A) ஒரு குழந்தையின் தலையில் இந்த ஒரு புத்தகத்தை வைப்பார். அந்த புத்தகத்தை அந்தக்குழந்தை தொடாமல், நடந்து எடுத்துச் சென்று இறுதி புள்ளியை தொட வேண்டும்.
  3. இதேபோல அடுத்த குழுவில் (Team B) உள்ள குழந்தைக்கும் செய்யப்படும்.
  4. மேற்குறிப்பிட்ட இரு குழந்தைகளும் புத்தகம் கீழே விழாமல், இறுதி புள்ளியை தொட்டால் அவர்களுக்கு தகுந்த மதிப்பெண் வழங்கப்படும்.
  5. இதேபோல குழுவில் உள்ள மற்ற குழந்தைகளும் செய்ய வேண்டும்.
  6. அதிக மதிப்பெண் பெறும் குழு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும்.
குருவுக்கான ஆலோசனை:

குருவானவர் இந்த செயல்பாட்டை கீழ்க்கண்டவற்றுடன் தொடர்பு படுத்திக் கொள்ளலாம்:

  • நாரதர் தன் தலையில் எண்ணெய் கிண்ணத்தை வைத்துக் கொண்டு உலகை வலம் வந்த நிகழ்வு
  • பேரறிஞர்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் கவனமுடனும், சமநிலையுடன், உறுதியாகவும் இருந்து வெற்றி பெற்றதை உணர்த்தும் நிகழ்வுகள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: