நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்
வம்சம்
சுபாஷ்சந்திரபோஸ், 1897 ஆம் ஆண்டு, ஜனவரி 23 அன்று ஒரிஸாமா நிலம் கட்டாக்கில் பெங்காலிகாயஸ் த்குடும்பத்தில், பிரபாவதி தேவிக்கும், வழக்கறிஞரான ஜானகிநாத் போஸ் என்பவருக்கும் மகனாகப்பிறந்தார். உடன் பிறந்த மொத்தம் பதினான்கு பேர்களில் அவர் ஒன்பதாவது குழந்தையாவார். ஜானகிநாத் போஸுக்கு ஆங்கிலேயர்களால்ராய் பகதூர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இந்திய-விரோதக் கொள்கைகள் காரணமாக, ஜானகிநாத் அந்தபட்டத்தைத் திருப்பிக்கொடுத்தது மட்டுமல்லாமல் அரசு வழக்கறிஞர் பதவியையும் ராஜினாமா செய்தார்.
கல்வி
எஸ்சிபோஸ்கட்டாக்கில் உள்ள ஆங்கிலோ பள்ளியில் ஆறாம் வகுப்புவரை படித்து அதன்பின் ராவன்ஷா கல்லூரிப் பள்ளிக்கு மாறினார். அங்கிருந்து அவர் பிரசிடென்சி கல்லூரிக்குச் சென்று அங்கு சிறிது காலம் படித்தார். இந்தியாவுக்கு எதிரான கருத்துக்களை கூறிய பேராசிரியர் ஓட்டனைத்தாக்கியதற்காக அவர் வெளியேற்றப்பட்ட போது அவரது தேசியவாத குணம் வெளிச்சத்திற்கு வந்தது. பின்னர் போஸ்ஸ்காட்டிஷ்சர்ச் கல்லூரியில் பி.ஏ. தேர்ச்சிபெற்றார். ஐ சிஎ ஸ் தேர்வில் கலந்து கொள்வதற்காக இங்கிலாந்து சென்றார். 1920 ஆம் ஆண்டு தேர்வில் ஆங்கிலத்தில்மிக அதிகமதிப்பெண்கள் பெற்று மொத்தத்தில் 4வது இடத்தைப் பெற்றார். இது அவரது வேலை நியமனம் தானாகவே உறுதியானது போன்றதாகும். ஆனால்அவர் எதேச்சதிகாரத்தில் உறுப்பினராக இருக்க விரும்பவில்லை; பணியை ராஜினாமா செய்துவிட்டு அவர் ஒரு புரட்சியாளராக விழிப்புணர்வுடன் கூடிய தனதுமுதல் அடியை எடுத்துவைத்தார். இந்திய குடியியல்பணியிலிருந்து (இந்தியசிவில்சர்வீஸ்) ராஜினாமா செய்த முதல் இந்தியர் அவரே. “அரசாங்கத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சிறந்தவழி, அதிலிருந்து விலகுவதே” என்பது அவரது நம்பிக்கையாக இருந்தது.
தேசத்திற்கான பங்களிப்பு
போஸ் ஒரு தீவிர இந்திய தேசியவாதி. அவரது தேசபக்தி ஆர்வத்தின் நியாயமான தொடர்ச்சியாக போஸ் இந்தியாவின் விடியலில் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக் கொண்டார், எனவே இந்தியாவின் சுதந்திரத்தை ஒரு ஆன்மீக இலக்காகவும் நியாயமான காரணமாகவும் எடுத்துக் கொண்டார். அவரது சிந்தனையில் இந்தியா வெறும் பிரதேசமாக இல்லாமல் ஒரு ஆன்மீகமயமாகவும், ஒருஉயிரினமாகவும் இடம்பெற்றது.எந்தத்தியாகமும் இன்றி, போரின்றி எந்தநாடும் தன் சுதந்திரத்தைப் பெறமுடியாது என்பது போஸின் உறுதியானகருத்து. அத்தகைய நம்பிக்கை அவரை ஒரு போர்க்குணமிக்க நேரடி நடவடிக்கையின் மூலோபாயத்தை முன்னெடுத்து நடத்த வழிவகுத்தது. அனைத்துமக்களையும் தர்மயுத்தத்திற்கு தயாராக இருக்குமாறு அவர் அறிவுறுத்தினார். அதாவது நல்லதொரு காரணத்திற்காக தியாகம் செய்வதாகும்.1921 ஆம் ஆண்டு அவர் அரசியலில் மூழ்கிய தருணத்திலிருந்து 1939 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்யும் நேரம்வரை, அவரதுபுகழ் மற்றும் மக்களின் ஆதரவு விண்ணளவு உயர்வது ஆங்கிலேயர்களை அச்சுறுத்தியது கிடைத்ததுரிதவாய்ப்பில் ஆங்கிலேயர்கள் அவரை சிறையில் அடைத்தனர். இவற்றால் எல்லாம் இந்த துணிச்சலான மற்றும் தொலைநோக்குள்ள இளைஞனின் உற்சாகத்தை தடுக்கவோ குறைக்கவோ முடியவில்லை. அவர் ‘ஃபார்வர்ட்பிளாக்’ கட்சிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த அமைப்பின் மூலம் அவர்தனது அரசியல் யோசனைகளுக்கும் திட்டங்களுக்கும் வடிவம் கொடுக்க விரும்பினார். அவருடைய எழுத்துக்கள் மூலமாகவும் அவர்தனது கருத்துக்களைபரப்பமுயன்றார்.
வெளி நாட்டில் ஆதரவுதேடல்
போஸ் தனது சுய ஆய்வின்படி, இந்தியர்களின் அனைத்து முயற்சிகள் மட்டுமே ஆங்கிலேயர்களை வெளியேற்றுவதற்கு போதுமானதாக இருக்காது என்ற முடிவுக்கு வந்தார், எனவே, அவர் இந்தியாவின் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாக சர்வதேச பொதுக் கொள்கையைத் தூண்ட விரும்பினார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கான அனுதாபத்தையும் ஆதரவையும் பெற பல்வேறு ஐரோப்பிய நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தினார். அவர் இத்தாலியில் முசோலினி, ஜெர்மனியில்ஃபெல்டர், அயர்லாந்தில்டி, வலேரா மற்றும் பிரான்சில் ரோமன்ரோலண்ட் ஆகியோரை சந்தித்தார். ஒருமுறை போஸ் வீட்டுக் காவலில் இருந்த போது, பெரும்பாலான நேரங்களில் சிறையில் இருந்து கொண்டோ அல்லது வீட்டுக் காவலில் இருந்து கொண்டோ இந்தியாவில் அதிகம் சாதிக்கமுடியாது என்பதை உணர்ந்தார், அதனால் அவர் தப்பித்து செல்ல முடிவுசெய்தார்.இரண்டாம் உலகப்போர், அவர் எதிர்பார்த்த அத்தகைய ஒரு சாதகமான சூழலை வழங்கியதாக அவர்நினைத்தார், மேலும் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தைத் தொடங்க, ஒரு இராணுவத்தை சீரமைக்கவும் ஆயுதங்கள் மற்றும் படைத்தள வாடங்களுடன் அதைவலுப்படுத்தவும் அந்ததருணம் வழங்கப்பட்டதாக நினைத்தார். இந்த காரணத்திற்காகவே போரின் போது போஸ் இந்தியாவிலிருந்து தப்பித்து, இந்தியாவின் சுதந்திரத்தை வென்றெடுப்பதற்கானதனது சங்கல்பத்தை நிறைவேற்ற சர்வதேச உதவியை நாடினார். அவரது நோக்கம் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இருபதுலட்சம் இந்தியகுடிமக்களின் ஆதரவைப் பெறுவதாகவும், பிரிட்டிஷ் காலனித்துவ இராணுவத்தில் பணியமர்த்தப்பட்ட இந்தியவீரர்களை பணியமர்த்துவதாகவும் இருந்தது. பெஷாவரில் இருந்து காபூலுக்கும், பின்னர் மாஸ்கோவிற்கும், பின்னர்பெர்லின், ஜப்பான் மற்றும் சிங்கப்பூர்வரை மேற்கொண்ட நேதாஜியின் பயணம் ஒருகாவியம் போன்றதே. அவரது திடசங்கல்பமும், அந்நிய ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுவிக்கவேண்டும் என்ற கொழுந்து விட்டுஎரியும் ஆசையும் மட்டுமே, கரடுமுரடான மலைப்பாங்கான பாதையையும், தான்பிடிபடுதல், மற்றும் உறை பனிசீதோஷ்ண நிலைபோன்ற பேராபத்துக்களை எல்லாம் தாங்கிக் கொள்ளஅவருக்குஉதவியது. ஜூலை 4, 1943 அன்று, சிங்கப்பூரில், அவரை கௌரவிக்கும் வகையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ராஷ்பிஹாரி போஸ் இந்திய சுதந்திரலீக்கின் மேலங்கியை நேதாஜிக்கு அணிவித்தார். ஆகஸ்ட் 25, 1943 இல் அவர் முறையாக ஐ.என்.ஏவின் (INA)தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டார். நேதாஜி, வீரர்களுக்கு அழைப்புவிடுத்து தங்கள் நாட்டு மக்கள் எல்லாம் அவர்களை வாழ்த்துமாறும், அவர்களுடைய சந்ததியினர் அவர்களைப் பற்றி பெருமிதம் கொள்ளும்படியும் அவர்கள் நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார். ஐஎன்ஏவில் தனது படைகள் எதிர் கொள்ளும் சிரமங்களைக் குறித்து புலம்பியபோது, அவர்நம்பிக்கையுடன் “பசி, தாகம், வறுமை, கட்டாய அணிவகுப்பு மற்றும் மரணம் தவிர, தற்போதைக்கு நான் உங்களுக்கு எதையும் வழங்க முடியாது, ஆனால், நீங்கள் என்னைப் பின்பற்றுவீர்களானால், நான் உங்களை வெற்றி மற்றும் சுதந்திரத்தை நோக்கி வழி நடத்துவேன்.” என்று கூறி அவர்களுக்கு ஊக்கமளித்தார். இவ்வாறு, இருளிலும், வெயிலிலும், துக்கத்திலும், இன்பத்திலும், துன்பத்திலும், வெற்றியிலும் அவர்களுடன் இருப்பேன் என்று தனது வீரர்களுக்கு உறுதியளித்து, அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக, தூக்கத்தைக் குறைத்துக்கொண்டு, அல்லும்பகலும் அயராது உழைத்தார்.அவர் பெண்களின் சமூகமேம்பாட்டிற்கு ஆதரவாக, பெண்கள் ஆண்களுடன் சமஅந்தஸ்தைப் பெறவேண்டும் எனவிரும்பினார். எதிர்காலத்தில் விடுதலை பெற்ற சுதந்திர இந்தியாவில் தகுந்த பங்கை பெண்கள் ஆற்றத்தயாராகும்வகையில், பெண்களை மட்டுமே கொண்ட ஜான்சி படையணியை ஒருமுன் உதாரணமாக அவரே உருவாக்கினார். ஐஎன்ஏ-வின் தாரகமந்திரம் ‘ஜெய்ஹிந்த்’ மற்றும் ‘சலோடெல்லி’ ஆகும்.
நேதாஜியும் ஆன்மீகமும்
அவர் பதினைந்து வயதாக இருக்கும் போதே சுவாமி விவேகானந்தரின் நூல்களைப் படித்ததன்விளைவாக ஆன்மரீதியாகவும், உளவியலாகவும். மனரீதியிலும் ஒரு உட்கிளர்ச்சி பெற்றார். சுவாமிவிவேகானந்தரின் வேதாந்ததத்துவத்தின் அறிவியல் விளக்கங்களும், யோகா பற்றிய அவரது கருத்தும் வாழ்க்கையின் சரியான திசையை அவருக்குக் காட்டியது. உண்மையில், வேதாந்தத்தின் மூலம் அறிவியலுக்கும் தர்மத்துக்கும் இடையே இணக்கமான உறவைக் கொண்டு வரும் பணியில் சுவாமி விவேகானந்தரின் வாழ்நாள் முழுதுமான அர்ப்பணிப்பு சுபாஷ் போஸின் ஆன்மாவுக்கு ஒருபு திய பரிமாணத்தையும் பார்வையையும் அளித்தது. மனித குலத்திற்கு சேவை செய்வதன் மூலம் மட்டுமே ஆழ்ந்த ஆத்மஞானத்தையும், நிலையானசுய-உணர்தலையும் பெறமுடியும் என்று அவர் நம்பினார். படிப்பறி வில்லாத, பட்டினியால் வாடும் லட்சக்கணக்கான சகநாட்டு குடிமக்களைக்காணும் போது அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவரைச் சுற்றியிருந்த இந்தியமக்கள் படும்துன்பங்கள், அவருக்குள் இருந்த புரட்சி வெறியைமேலும் தீவிரப்படுத்தியது, அவற்றை நினைக்கும்போது, அவர் தன்னையே மறந்தார். தனது வீட்டிற்கு வெளியே சோகமாகவும் பரிதாபமாகவும் உடல்நிலை சரியில்லாமலும் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டியின் அவல நிலையைக்கண்டதும், ரயிலில் கல்லூரிக்கு செல்வதை நிறுத்திவிட்டு, மூன்றுமைல் தூரம் நடந்தேகல்லூரிக்குச் சென்று அவ்வாறு சேமித்த தொகையை அவருக்குஅளித்தார். எண்ணற்ற இந்தியர்களின் துன்பங்களில், இரத்தம் சிந்தும் பாரத அன்னையின் பிரதிபலிப்பைக் கண்ட அவர், அவர்களின் நிலையைமேம்படுத்துவதற்காக தனது வியர்வை மற்றும் இரத்தத்தின் கடைசித் துளியையும் கூட சிந்தத் தயாராக இருந்தார்.கடவுள் மீதான அவரது அசைக்க முடியாத நம்பிக்கை, அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவரையும் கவர்ந்தது. சித்தரஞ்சன்தாஸ் அவரது அரசியல்குருவாகவும், சுவாமி விவேகானந்தர் அவரது ஆன்மீக வழிகாட்டியாகவும் இருந்தனர். கல்கத்தாவில் உள்ள ராமகிருஷ்ணாமிஷன் ஆசிரமத்திற்கு அடிக்கடி பின்னிரவு நேரங்களில் சென்றுவருவார். அவர் படுக்கைக்குச் செல்லும்போது, அவர் பெரும்பாலும் தலையணையின் கீழ் ஒருசிறிய (பாக்கெட்பதிப்பு) பகவத்கீதை புத்தகத்தை வைத்திருந்தார்.
சிறு வயதிலிருந்தே சமூக நலப்பணிகளுக்கு ஒருமித்தஎண்ணம் கொண்டவர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு அவரால் தொடங்கப்பட்டது. அவர் கட்டாக்கில் பள்ளிக்குச் செல்லும் சிறுவனாக இருந்த போதே, கிராமங்களில் உள்ள படிப்பறிவற்ற மக்களுக்கு கல்வி கற்பதற்காக ஒத்த எண்ணம் கொண்ட சகமாணவர்களைக் கொண்ட குழுவை ஏற்பாடுசெய்தார். அவர் தனது நண்பர்களுடன் கிராமப்புறங்களுக்குச் சென்று ஏழை மக்களுக்கு உதவினார். கல்கத்தாவிலும் மாணவப்பருவத்தில் ஆதரவற்றவர்களைப் பராமரிக்கும் ஒரு அமைப்பில் சேர்ந்தார். இந்த அமைப்பின் தன்னார்வத் தொண்டர்கள், கைகளில் சாக்குப்பைகளுடன், மக்களிடம் சென்று ஆதரவற்றவர்களுக்காக அரிசி மற்றும் பிறஉணவுப் பொருட்களை சேகரிக்க வேண்டியிருந்தது. வசதியான பின்னணி கொண்டிருந்த போதும் மற்றும் மனதில் சில முரண்பாடுகள் இருந்த போதிலும், ஆதரவற்ற சகோதரர்களுக்காக பிச்சை எடுக்கும்போது, அவர் தனது மனஉறுதியுடன் முன்னேறினார். விடுமுறையில், கட்டாக்வந்தபோது, காலரா தொற்று நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த கிராமங்களை அவர் பார்வையிட விரும்பினார். அந்த நாட்களில் காலராநோய், உயிரைப் பறிக்கும் ஒரு கொடிய நோயாக இருந்தது. உறவினர்கள் கூட நோயாளிகளை தனிமையில் நிர்கதியாக விட்டு வெளியேறினர் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதற்கான சிகிச்சை கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும், அதுஉடனடியாககிடைக்கவில்லை. இந்தியாவை விடுவிப்பதில் ஐஎன்ஏ வெற்றிபெற்றால், அந்த சுதந்திரத்தை மக்களுக்குத் தூக்கி கொடுத்து விட்டு ஆன்மீகத்தில் தன்னை மறந்து ஓய்வெடுப்பேன் என்று அவர்தனது பொது உரைகளில் மீண்டும்,மீண்டும் அறைகூவினார்.
நேதாஜி – உண்மையான தலைவர்
அவரது தலைமைப் பண்பால் ஈர்க்கப்பட்டு, பெர்லினில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அவரை “போஸ்நேதாஜி” என்ற பெயரில் கௌரவித்தனர், ஒரு தலைவராக அவரது அந்தஸ்தை ஒப்புக்கொண்டனர். “என்னிடம் ரத்தத்தைக் கொடுங்கள் நான் உங்களுக்கு சுதந்திரத்தைத் தருவேன்” என்பதே தேசத்திற்கான அவரது அழைப்பாக இருந்தது. நாட்டின் அனைத்து பிரிவுகள் மற்றும் மதஅமைப் புகளிலும் மிகவும் ஆற்றல் வாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க அரசியல் தலைவராக நேதாஜியை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் அதீத அக்கறையுடன் ஒப்புக்கொண்டனர். நேதாஜியின் புகழ்மத எல்லை களைக்கடந்தது. நேதாஜி ஆற்றிய தலையாய பங்கை முஸ்லிம்கள் அங்கீகரித்து பாராட்டினர். பாகிஸ்தானின் தந்தை என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப் படும்முகமது அலிஜின்னாகூட, நேதாஜியின் மீதுமிகுந்த நம்பிக்கையும் மரியாதையும் கொண்டிருந்தார், நேதாஜி தேசத்தை வழிநடத்தினால், மதரீதியாக இந்தியா பிரிக்கப்பட வேண்டும் என்ற தனது எண்ணத்தைக் கைவிட அவர்தயாராக இருந்தார். முப்பதுகளில் இந்தியாவின் கிழக்கு மாநிலங்களின் முஸ்லீம் தலைவர்கள் இதே உணர்வை எதிரொலித்தனர்.
குருமார்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகள்/ கலந்துரையாடல்கள்:
- நேதாஜி பற்றி சுவாமி என்ன சொன்னார்?
சுபாஷ்சந்திர போஸ் பற்றி சத்யசாயி – பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபாவின் அருளமுதம் – பாகம் 40- அத்தியாயம் 14 –- சுபாஷ்சந்திரபோஸின் சிறந்த நாட்டுப் பற்று என்றதலைப்பில் பார்க்கவும்..
- உண்மையான தலைவரைப் பற்றி சுவாமி என்ன சொல்கிறார்? எம்.கே.சிப்பர் எழுதிய Saibaba’s Mahavakya on leadership நூலைப் பார்க்கவும்
- தேஷ் பிரேம்திவஸ் என்றால் என்ன? நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்ததினம் தேஷ் பிரேம்திவஸ் என்று கொண்டாடப்படுகிறது