மூச்சைப் பராமரித்தல்

Print Friendly, PDF & Email
மூச்சைப் பராமரித்தல்

மேற்கத்திய தத்துவத்திற்கும் நமது தத்துவத்திற்கும் ஒரு அடிப்படை வித்தியாசம் உண்டு. மேலை நாட்டினரின் கூற்று “நான் எண்ணுகிறேன். அதனாலேயே நான் பிறந்து வாழ்கிறேன்” என்பது. கிழக்கத்திய தத்துவமோ “நான் பிறந்து வாழ்கிறேன். அதனால்தான் நான் எண்ணுகிறேன்” என்பதே. ‘நான்’ இல்லாவிடில், யார் ‘எண்ணமுடியும்? ‘ஏகோஹம்’ என்றபடி “சுவாசம்” தான் பிரும்மம். அதுவே உயிர்வாழக் காரணமாகிறது. மூச்சை உள்ளிழுத்து, சிறிது நிறுத்தி,பிறகு வெளியே விடுதலே இந்தச் ‘சுவாசத்தின் விளக்கம்,விஞ்ஞானப்படி மூச்சுவிடுதல் நின்றால் மரணம் சம்பவிக்கிறது. மூச்சுவிடுவது மெதுவானால் ஆயுள் நீடிக்கும் என்பது சான்றோர்வாக்கு. மூச்சு விடுதலில் ஒரு ‘சீராக’ இருந்தால் அமைதி இருக்கும்.

ஒரு ‘பொய்’ சொல்லிவிட்டால், அதனால் நம்மை நாமேவதைத்துக் கொள்கிறோம். மனச்சாட்சி “நீ பொய்பேசி விட்டாய் என்று குத்திக்காட்டிக் கொண்டே இருக்கும். அதனால் மூச்சுகாற்று சுவாசிப்பதில் சீரான நிலை கெட்டு விடுகிறது. சுருதி பேதமான சங்கீதம் எப்படிக் காதுக்கு தீங்கு விளைவிக்குமோ அப்படியே சீர்கெட்ட சுவாசம் உயிருக்கு ஹானியாகும். 24 மணிநேரமும் சுருதியற்ற இசையை உரத்த சப்தத்துடன் கேட்டுவந்தால் ஒரு வார காலத்தில் ஒருவன் மரித்துவிடுவான். இதையே ஒரு மரண தண்டனையாக ஹிட்லர் கையாண்டு வந்ததாகக் கூறப்படுகிறது. ஆகவே, சுவாசத்தைச் சீராக இயங்கச்செய்வது மிக முக்கியமானது.

இதைச் சரியான முறையில் நிலைநிறுத்த, பகவான் பரிந்து அளிக்கும் சாதனங்கள் நாமஸ்மரணையும் பிரார்த்தனையுமே,நாமஸ்மரணை – பஜனை பாடல்கள் பாடும் போது இனிய சுருதியுடன் கூடிய இசை நெறியுடன் எழுப்பும் இதமான ஒலி பிரதிபலித்து அந்தச் சூழ்நிலையையும் அங்கே வீசும் காற்றையும் தெய்வீக மணம் வீசச் செய்கிறது. இந்தத் தெய்வீக அலைகள் எழும்பியதை மனதில் குவித்து ஒருமைப்பாட்டுடன் அமைதியைப் பெறுவதற்காகவே பஜனை முடிந்ததும் சில வினாடிகள் ‘மௌனமாக’ இருத்தல் கடைப்பிடிக்கப்படுகிறது, இரண்டாவதாக,எங்காவது ஒரு இசை ஒலிபரப்பப்பட்டால் அது மிகுந்த கும்பலும்சப்தமும் உள்ள பஸ்ஸ்டாண்ட் போன்ற இடமாயிருப்பினும் உடனே எல்லோருடைய கவனமும் ஈர்க்கப்பட்டுப் பேசும் சப்தம் குறைகிறது நல்ல செவிக்கினிய இசை கேட்டுவிட்டால் அது மேலும் இனிய அனுபவத்தையும் அமைதியையும் கொடுக்கும். குறிப்பாக பாலவிகாஸ் குழந்தைகள் உள்ள இல்லங்களில் எல்லோருமே குறித்த நேரத்தில் தினமும் குடும்பத்துடன் கூட்டு பஜனை சிறிது நேரம் செய்ய வேண்டும். இது நல்ல பலனை அளிக்கும். அமைதியும் ஆனந்தமும் கொடுக்கும். அடுத்து பிரார்த்தனையின் உபயோகத்தைப் பற்றிக் கூற விரும்புகிறேன்.

அது நமது உள்ளத்தில் ஆழத்தில் உள்ள உணர்வுகளின் பிரதிபலிப்பாகவே எழவேண்டும். வேறு எவரிடமும் வெளியே கூற முடியாதவைகளை இறைவனிடம் கூச்சமின்றி முறையிட்டுக் கூறுவோம். ஏனெனில் இறைவன் ஒருவனே குறையைக் கேட்டு நிறைவு செய்யும் வல்லமை படைத்தவன்.

பகவான் இதை டாக்டர் கொடுக்கும் மருந்து போல் உணவுக்கு முன், உணவுக்கு பின், மூன்று வேளை என்றெல்லாம் கூறுவதற்கு ஒப்பிடுகிறார் குறிப்பிட்ட நேரத்தைக் காட்டிலும் அன்றாட அலுவல்களையொட்டி இதை கணக்கிட்டுக் கொடுத்தால். எளிது என்பதால்தான் இப்படிக் கூறுகின்றனர். அதேபோல் பாலவிகாஸ் குழந்தைகளுக்கு அன்றாடம் ஸ்நானம் செய்யும் போது தண்ணீரால் உடலின் வெளிப்புறத்தைச் சுத்தப் படுத்திக் கொள்ளச் சொல்ல வேண்டும். உணவுக்கு முன், கடவுளுக்கு நன்றி கூறும் வகையில் பிரார்த்தனை செய்ய வேண்டும். இது உணவையும் சுத்தப்படுத்தும் என்கிறார் பகவான் பாபா. பிரார்த்தனை வாழ்க்கை முறையாகவே ஒன்றிட வேண்டும். மூன்று முறைகளாவது தவறாமல் செய்யப்பட வேண்டும். இதைச் செய்வதால் சுவாசமும் சீராக இயங்கும். மனதில் சாந்தி நிலவும். சாந்தியிலிருந்து பிரசாந்திக்குச் செல்லும் வழிகிடைக்கும். இதுவே சுவாசத்தைப் பராமரிக்கும் வழி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: