குடும்பப் பணியில் நாம் பங்கேற்றலும், அதன் மூலமான ஆன்மீக சாதனையும்
குடும்பப் பணியில் நாம் பங்கேற்றலும், அதன் மூலமான ஆன்மீக சாதனையும்
மற்றவருக்குச் செய்யும் சேவையில் ஒவ்வொருவருக்கும் ஒர் பங்குண்டு, ஒரு கடமையுண்டு. இத்தகைய சேவையினைக் குடும்பத்தில் தொடங்கிடல் வேண்டும். நாம் சமூகத்தைச் சேர்ந்தவர்; மற்றவரிடமிருந்து ஏதாவது ஒரு உதவி பெறாமல் யாரும் தானாக ,தன்னைக் குறுக்கி வாழ இயலாது. பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் (பிறந்தபின் சாகும் வரையிலும்) மற்றவரின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. ஆகவே, பதிலாக, நாம் மற்றவருக்குச் சேவை செய்யக் கடமைப்பட்டுள்ளோம்.
குழந்தைகளும் கூட வீட்டில் சிறு சிறு பணிகளைச் செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். (உ-ம்) அன்னைக்கு வீட்டுவேலைகளில் உதவி செய்யலாம். தமக்கும் இளைய தம்பி, தங்கைகளுக்குப் பாடங்கள் படிக்க உதவி செய்யலாம். இதுபோன்று எவ்வளவோ உள்ளன. எந்தப்பணியும் செய்ய வேண்டாத அளவுக்கு மிகச் சிறியதன்று. இராமாயணத்தில் ஒருசிறிய அணில் மணல் துகள்களைச் சுமந்து அணைக்கட்டும் நிமித்தம் அங்குப் போடவில்லையா? உலகனைத்துக்கும் தலைவராகிய ஸ்ரீராமன்அத்தகைய பணியை மிக்க நன்றியுடன் ஏற்றுக்கொண்டாரே, ஏன்? (இறைவன் அன்புறவு வளர்வதையே விரும்புகின்றார். சேவையானது ஒரு நிமித்த காரணமேயாகும்)
சிறுவர் சிறுமியர், ஏன் வளர்ந்தவர்களும் கூடத் தாம் எதிர்பார்ப்பதைக் கண்டிப்புடன் கேட்டுப் பெற்றோருக்குத் தொந்தரவு விளை வித்தலாகாது. மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் சரிசெய்து கொள்வதில் ஆர்வங் காட்ட வேண்டும். சமூகத்திலும், உலகத்திலும் பிற்காலத்தில் ஒழுங்காக நடந்து கொள்வதற்குத் துணையாக, இல்லமேமிகச் சிறந்த பயிற்சிக் கூடமாக அமைகிறது.