நெருப்பு -2
கதை
ஆசிரியர் சுற்றுலாதொடர்பான ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறார். ஒருசமயம் ஆரம்பப்பள்ளிமாணவர்கள் ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்றனர். மலையருவியின் அருகில் அவர்கள் முகாமிட்டனர். அவர்கள் உணவு சமைப்பதற்குத் தேவையான அரிசி, பருப்பு, கறிகாய்கள், விறகு முதலியவற்றைச் சுமந்து சென்றனர். குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்ததும் அவர்கள் உணவு சமைப்பதற்கான பொருட்கள் எல்லாவற்றையும் வரிசைப்படுத்தி வைத்தனர். துரதிருஷ்டவசமாக சமையல் தொடங்க முடியவில்லை. ஏதோ ஒன்று காணவில்லை. அது என்ன? நெருப்புப்பெட்டி. விறகினைப் பற்றவைக்க வேறு ஒன்றும் கைவசமில்லை.
கேள்விகள்
- சூரியனைப் படைத்தது யார்?
- சமையல் செய்வதைத் தவிர வேறு எந்த வகையில் நெருப்பு மனிதருக்குப் பயன்படுகிறது?
- எப்போது உனக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது?
- பகல் வேளையில் உனக்கு எவ்வாறு வெளிச்சம் கிடைக்கிறது?
- உலகத்திற்குச் சூரியன் வேறு என்ன தருகிறது?
பாடல்
நெருப்பு, ஒளி விட்டு எரியும்நெருப்பு
இருண்ட இரவில் எரியும் நெருப்பு
ஒளி தான் வாழ்க்கை, இருளே மரணம்
ஆற்றலும் ஒளியும் மகிழ்ச்சியும் தருமே
கருவறையிலிருந்து கல்லறைவரையில்
நெருப்பே நமது நண்பனாகும்
முடிவு வரை தேவைகளனைத்தும்
நிறைவிப்பது நெருப்பேயாகும்.
கோடையிலோ கொதிக்கும் வெப்பம்
குளிர்காலத்தில் இன்பப் பரிசு
இரண்டுமே நெருப்பு அளிக்கும் பரிசு
நீரிலும் நுண்ணிய நெருப்பின்தன்மை
எங்கும் வியாபித்திருப்பதாகும்
தூய்மையே அதனின் அடிப்படை இயல்பு
குழுச்செயல்பாடு
- விவாதத்துக்குக் கேள்விகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- ஆசிரியர் வகுப்பினைப் பல குழுக்களாகப் பிரித்து ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு கேள்வி தரலாம்.
- அவர்கள் விடைகளை வரிசைப்படுத்திக் கூறட்டும்.
- அவர்களில் ஒருவன் தொகுத்துக் கூறுவான்.
- அவற்றை அட்டைகளிலோ வேறுவிதமாகவோ எழுதிப் பயனுள்ள வகையில் கூறலாம்.
கேள்விகள்
- நாம் எத்தனை விதமான ஒளியைப் பயன்படுத்துகிறோம்?
- நெருப்பில் நாம் எதனை எரிக்கிறோம்? ஏன்?
- நெருப்பினால் தூய்மையடையும் பொருட்கள் எவை?
மௌனமாக உட்கார்ந்திருத்தல்
குழந்தைகளே! பொழுது புலருகிறது. நீங்கள் சீக்கிரம் படுக்கையிலிருந்து எழுந்திருந்து காலை வழிபாடு செய்கிறீர்கள். வெளியில் சென்று கிழக்கு திசையில் உதிக்கின்ற சிவந்த சூரியனுக்கு வணக்கம் தெரிவியுங்கள். இரவில் இருளை விலக்கும் ஒளியாக எங்கும் வியாபித்திருப்பதாகக் கற்பனை செய்யுங்கள். காலைச் சூரியனின் இதமான வெப்பத்தை உணர்கிறிர்கள். காலையில் நீராடி மிதச்சூடுள்ள நீரில் துணிகளைச் சுத்தம் செய்து ஈரத் துணி்களை வெயிலில் காற்றுபடும்படி காயவைக்கிறீர்கள், நாள் முழுதும் சூரியத்தேவன் உங்களுக்கு ஒளியும், வெப்பமும் ஆற்றலும் தருகிறார். அன்னை உங்களுக்கு நெருப்பில் சமைக்கப்பட்ட சூடான சிற்றுண்டி தருகிறார். பசுமையான இலைகளும் சூரிய ஒளியில் தங்கள் உணவை தயாரித்துக் கொள்கின்றன.சூரியன் தலைக்கு மேலே வருகிறது. நெருப்பின் உதவி கொண்டு அன்னை. சமைத்த மதிய உணவை விரும்பி சாப்பிடுகிறாய். மாலை நேரம் வருகிறது. சந்திரஒளி உனக்குக் கிடைக்கிறது. வீட்டிலுள்ள விளக்குகள் அனைத்தும் உனக்கு செயல் புரிய உதவுகின்றன. உனது பூஜை அறையில் உன் அன்னை விளக்கேற்றுகிறார். நறுமணம் வீசும் தூபமும் ஏற்றப்படுகிறது.
பிரார்த்தனை
அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அமிர்தம் கமய
ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி: